ஈரான் உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனியின் உடல்நிலை குறித்து பரபரப்பு

ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான், உச்சத் தலைவர் அயத்துல்லா மொஜ்தபா கமேனியை சமீபத்தில் சந்தித்ததாக உச்சத் தலைவரின் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு போர் தொடங்கிய பின்னர், உச்சத் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்ட மொஜ்தபா கமேனி பொதுவெளியில் தோன்றாத நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான், தனது பதவிக்காலத்தின் மூன்றாவது ஆண்டின் தொடக்கத்தில் அயத்துல்லா மொஜ்தபா கமேனியை சந்தித்து அவருடன் கலந்துரையாடினார்” என உச்சத் தலைவரின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. […]
சிறைச்சாலைகளில் இரண்டாவது அரகலய போராட்டம் வெடிக்கும் அபாயம்!

இலங்கையின் அடுத்தகட்ட அரகலய அல்லது மக்கள் போராட்டம் சிறைச்சாலை அமைப்பை மையமாகக் கொண்டு தொடங்குவதற்கான தீவிர அபாயம் நிலவுவதாக ஜனாதிபதி சட்டத்தரணியும் மத்திய மாகாணத்தின் முன்னாள் ஆளுநருமான மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார். நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்து மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காக கண்டிக்கு விஜயம் செய்திருந்தபோதே, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு எச்சரித்துள்ளார். சிறைச்சாலைகளில் நிலவும் கடுமையான இடநெருக்கடி மற்றும் அங்குள்ள சீர்கேடுகள் குறித்து அவர் […]
மன்னாரில் சிறுவன் கைது
மன்னார் – சௌத்பார் பகுதியில் வான் வழியே பறந்து புகைப் படங்களையும் காணொளிகளையும் எடுக்க உதவும் கருவியான ட்ரோன் கேமராவை அனுமதியின்றி பறக்க விட்ட சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது நேற்று(09.08.2026) இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பு அமைச்சினால் பதிவு செய்யப்படாத ட்ரோன் ஒன்றை அனுமதியின்றி பறக்க விட்டதாக கூறப்படும் 16 வயது சிறுவன் ஒருவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். விமானப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மன்னார் பொலிஸ் புலனாய்வு […]