பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (10) முதல் நாளை (11) வரை நாடு முழுவதும் உள்ள கிராம உத்தியோகத்தர்கள் சுகவீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் நந்தன ரணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 600 ரூபாய் பயணக் கொடுப்பனவு கடந்த 8 ஆண்டுகளாக அதிகரிக்கப்படவில்லை என அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஏற்கனவே, 2024 ஆம் ஆண்டில் யணப் படிக்கு பதிலாக 20 லீட்டர் எரிபொருளுக்கு சமமான தொகையைப் பெறுவதற்கான அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டது.
இதனைக் கோரி இன்று முதல் நாடளாவிய ரீதியில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.