புதிய அரசியல் கலாசாரத்தை நாமல் தலைமையில் உருவாக்க ஒன்றிணைவோம்!
நாமல் ராஜபக்ச தலைமையிலான அரசியல் கலாசாரத்தை உருவாக்க மட்டக்களப்பு மக்கள் அனைவரும் என்னுடன் கை கோர்க்க வேண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சுரேஸ் குமார் ஜெய்ஸ்மன் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாவட்ட அமைப்பாளராக பதவி ஏற்றுக் கொண்ட பின்னரே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில், அமைப்பாளர் பதவி என்பது ஒரு அதிகாரமிக்க பதவி அல்ல இது மக்களுக்கான […]
காவிரி விவகாரம்: எல்லையில் கன்னட அமைப்புகள் போராட்டம்! ஓசூரில் தமிழகப் பேருந்துகள் நிறுத்தம் – பயணிகள் கடும் அவதி!
பெங்களூரு / ஓசூர் மேகதாதுவில் அணை கட்ட மறுப்பு தெரிவிக்கும் தமிழக அரசைக் கண்டித்தும், காவிரி நீரைத் தமிழ்நாட்டுக்குத் திறந்துவிடக் கூடாது என்பதை வலியுறுத்தியும் தமிழக – கர்நாடக எல்லையில் கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளன. இதனால் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கர்நாடகா செல்லும் பேருந்துகள் ஓசூரில் நிறுத்தப்பட்டுள்ளன. மேகதாது அணை விவகாரம் – பின்னணி: காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்ட கர்நாடக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. […]
வரலாறு காணாத உயர்வு! நெல், கரும்புக்கான ஊக்கத்தொகையை அதிரடியாக உயர்த்தினார் முதலமைச்சர் விஜய்!

சென்னை செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் நெல் கொள்முதல் பருவம் தொடங்கவுள்ள நிலையில், விவசாயிகளின் நலன் கருதி நெல் மற்றும் கரும்புக்கான ஊக்கத்தொகையைப் பெருமளவில் உயர்த்தி வழங்குவதாகத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அதிரடியாக அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் அறிவிப்பு: தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் நான்காம் நாளான இன்று, பேரவை விதி 110-இன் கீழ் அறிக்கை வாசித்த முதலமைச்சர் விஜய், இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அப்போது அவர் பேசுகையில், “விவசாயிகள் நெல் […]
“முதலமைச்சர் விஜய்யின் அரசியல் கேரளாவில் எடுபடாது!” – பாஜக அரசைக் கடுமையாக விமர்சித்த எஸ்.டி.பி.ஐ. தேசியத் தலைவர் எம்.கே.பைஜி!

மதுரை மதுரை உத்தங்குடியில் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ. (SDPI) கட்சியின் தலைவர்கள் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அக்கட்சியின் தேசியத் தலைவர் எம்.கே.பைஜி, பாஜக அரசின் தொடர் தோல்விகள் குறித்தும், முதலமைச்சர் விஜய்யின் அரசியல் பயணம் குறித்தும் பரபரப்பான கருத்துகளைத் தெரிவித்துள்ளார். தலைவர்கள் சங்கமம் நிகழ்ச்சி: மதுரை உத்தங்குடி பகுதியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மதுரை மண்டலம் சார்பாகத் தலைவர்கள் சங்கமம் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மண்டலச் செயலாளர் முஜிபூர் ரகுமான் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு […]
“தமிழ்த்தாய் வாழ்த்து என்பது உலகத் தாய் வாழ்த்து!” – சட்டப்பேரவையில் சிலிர்க்க வைத்த அமைச்சர் ராஜ்மோகனின் விளக்கம்!

சென்னை தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என முதலமைச்சர் கொண்டு வந்த அரசினர் தனித் தீர்மானத்தை ஆதரித்துப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் நெகிழ்ச்சியுடனும் பெருமிதத்துடனும் உரையாற்றினார். சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது: தாய் மொழியையே பெயராக வைக்கும் தமிழ்க் கூட்டம்! “உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் தங்களின் குழந்தைகளுக்குத் தங்களது தாய் மொழியில் பெயர் வைப்பார்கள். ஆனால், தங்கள் தாய் மொழியையே குழந்தைகளுக்குப் பெயராக வைக்கக்கூடிய ஒரே கூட்டம் இந்தத் தமிழ்க் […]
“தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம்!” – சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய்யின் தனித் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றம்!
சென்னை தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசு மற்றும் கல்வி நிறுவன விழாக்களிலும் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ கட்டாயம் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று சட்டப்பேரவையில் கொண்டு வந்த சிறப்புத் தனித் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவையில் முதலமைச்சரின் தனித் தீர்மானம்: தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கி வரும் செப்டம்பர் 8-ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தில் […]
துணுக்காயிலிருந்து முல்லைத்தீவு வரையான பஸ் சேவை ஆரம்பம்

துணுக்காயிலிருந்து முல்லைத்தீவு வரையான அரச பேருந்து சேவை இன்று (10.08.2026) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யுத்தத்திற்குப் பின்னர் துணுக்காயிலிருந்து முல்லைத்தீவு வரை ஆரம்பிக்கப்பட்டிருந்த அரச பேருந்து சேவை பல ஆண்டுகளுக்கு முன்னர் இடைநிறுத்தப்பட்டிருந்தது. இதனால் குறித்த பிரதேசத்தில் வசிக்கும் பொதுமக்கள் நீண்டகாலமாக போக்குவரத்து தொடர்பான பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர். பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைவாக துணுக்காய் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் மற்றும் மாவட்ட மட்டக் கூட்டங்களில்இ துணுக்காயிலிருந்து முல்லைத்தீவு வரையான பேருந்து சேவையை மீண்டும் […]
நவகிரிஆறு வனப் பகுதியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

அம்பாறை மாவட்டம் பக்கிஎல்லை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவகிரிஆறு வனப் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை பொலிஸார் அதிரடியாக முற்றுகையிட்டுள்ளனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய ஒரு ஆணும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்தின்கீழ் பக்கிஎல்லை சிறப்புப் பணியக பொலிஸ் சார்ஜென்ட் சமரநாயக்க (32407) என்பவருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இச்சோதனை முன்னெடுக்கப்பட்டது. இச்சோதனையின்போது 7,500 மி.லீ […]
கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு

கொத்மலை காமிணி திசாநாயக்க நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதன் அதிகபட்ச கொள்ளளவை எட்டியுள்ளதால், நேற்று (09) மாலை 7.00 மணிக்கு அதன் ஒரு வான் கதவு (Spill gate) சிறியளவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மகாவலி அதிகாரசபையின் பிரதான அணைகள் மற்றும் நீர்த்தேக்க செயல்பாட்டுப் பிரிவின் கொத்மலை பொறுப்புப் பொறியாளர் தெரிவிக்கையில், குறித்த வான் கதவு திறக்கப்பட்டதன் மூலம் வினாடிக்கு சுமார் 20 கன மீற்றர் வேகத்தில் நீர் கொத்மலை ஓயாவிற்கு திறந்து விடப்படுவதாகக் குறிப்பிட்டார். […]
தொல்பொருள் சின்னங்களை தேடியவர் கைது

அம்பாறையில் தொல்பொருள் சின்னங்களைத் தேடி சட்டவிரோதமான முறையில் அகழ்வுப் பணியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் 42 வயதுடைய நபர் ஒருவர் தமானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில், தமானை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் நேற்று இரவு (09) மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகமிட்டியாவ பகுதியில், சந்தேகநபர் சட்டவிரோத அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டிருந்த போதே இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபர் வெயாங்கொட […]