“தமிழ்த்தாய் வாழ்த்து என்பது உலகத் தாய் வாழ்த்து!” – சட்டப்பேரவையில் சிலிர்க்க வைத்த அமைச்சர் ராஜ்மோகனின் விளக்கம்!

சென்னை
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என முதலமைச்சர் கொண்டு வந்த அரசினர் தனித் தீர்மானத்தை ஆதரித்துப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் நெகிழ்ச்சியுடனும் பெருமிதத்துடனும் உரையாற்றினார்.
சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது:
தாய் மொழியையே பெயராக வைக்கும் தமிழ்க் கூட்டம்!
“உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் தங்களின் குழந்தைகளுக்குத் தங்களது தாய் மொழியில் பெயர் வைப்பார்கள். ஆனால், தங்கள் தாய் மொழியையே குழந்தைகளுக்குப் பெயராக வைக்கக்கூடிய ஒரே கூட்டம் இந்தத் தமிழ்க் கூட்டம்தான். தமிழரசன், தமிழழகன், தமிழழகி எனத் தங்கள் தாய்மொழியின் பெயரையே பிள்ளைகளுக்குச் சூட்டி அழகு பார்க்கக்கூடிய உன்னதமான கூட்டம் நம் தமிழ்க் கூட்டம். அத்தகைய சிறப்புமிக்க தமிழ்க் கூட்டம், தனது தமிழ்த் தாயை வாழ்த்திப் பாடும் சிறப்புமிக்க பாடல்தான் தமிழ்த்தாய் வாழ்த்து.”
தமிழ்த்தாய் வாழ்த்து:
“ஆனால், இந்தப் பாடல் வெறும் தமிழ்த்தாய்க்கான வாழ்த்துப் பாடல் மட்டுமல்ல; இது இந்த ஒட்டுமொத்தப் பூமித்தாயையும் வாழ்த்தும் வாழ்த்துப் பாடலாகும். இந்த நிலம், அந்த நிலத்தைச் சுற்றியுள்ள கடல்… அந்த நீல நிறக் கடலையே பூமித்தாய் தனக்குப் புடவையாகச் சுற்றியிருக்கிறாள் என்பதைத்தான் ‘நீராரும் கடலுடுத்த நிலமடந்தை’ என்ற வரிகள் உணர்த்துகின்றன. அந்தப் பூமித்தாய்க்கு ஒரு அழகான முகம் உள்ளது. ‘சீராரும் வதனமென’ என்பதில் வதனம் என்றால் முகம் என்று பொருள். அந்தச் சீராரும் வதனம் எதுவென்று உற்றுப் பார்த்தால், அது ‘திகழ்பரத கண்டமெனில்’, அதாவது இந்தப் பூமித்தாயின் முகம் பாரதத்தாய். அவளுக்குச் சிறு பிறை போன்றதொரு நெற்றி இருக்கிறது, அதுதான் தென்னிந்தியா. அந்த அழகிய நெற்றிக்கு மேலும் அழகு சேர்க்க அதில் வைக்கப்படுகிற ஒரு பொட்டுதான் தமிழ்நாடு என்கிற நமது தாய். அந்தப் பொட்டு வெறும் நெற்றிக்கு மட்டுமா வாசம் தருகிறது? இல்லை, எட்டுத் திக்கும் அதன் மணம் வீசுகிறது. அப்படி எட்டுத் திக்கும் புகழோடு வீற்றிருப்பவள்தான் நமது தமிழ்த் தாய். இத்தனை காலங்கள் கடந்துவிட்டால் எந்த ஒரு தாய்க்கும் வயதாகும்தானே!”
உலகத் தாய் வாழ்த்து:
“ஆனால், இத்தனையாயிரம் ஆண்டுகள் வளர்ந்த பின்னும் நீ எப்படி இன்னும் இவ்வளவு இளமையாக இருக்கிறாய்! உனது அந்த இளமையை நான் வாழ்த்துகிறேன் என்று தமிழை வாழ்த்தி, தமிழ்நாட்டை வாழ்த்தி, தென்னிந்தியாவைச் சொல்லி, பாரதத் தாயையும் வாழ்த்தி, ஒட்டுமொத்த உலகத் தாயையே வாழ்த்தும் இந்தத் தமிழ்த்தாய் வாழ்த்தை, ஒரு ‘உலகத் தாய் வாழ்த்து’ என்று சொல்வதில் நான் பெருமிதம் கொள்கிறேன். இருகரம் கூப்பி வணங்கி வாழ்த்துகிறேன்.”
“இனிமேல் நடைபெறும் அனைத்துப் பொது நிகழ்ச்சிகளிலும், கல்வி நிலையங்களிலும், எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ, அங்கெல்லாம் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே முதலில் கம்பீரமாக ஒலிக்கும். அதற்காகச் சட்டப்பேரவையில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றியவர் என்ற முறையில், சரித்திரத்தில் முதலமைச்சர் விஜய்யின் பெயரே என்றென்றும் நிலைத்து நிற்கும். அவரை வாழ்த்தி, இந்தச் சிறப்புத் தீர்மானத்தை நான் முழுமையாக வரவேற்கிறேன்.”
இவ்வாறு அமைச்சர் ராஜ்மோகன் தனது உணர்ச்சிகரமான உரையைப் பதிவு செய்தார்.
#TamilThaiVaazhthu #MinisterRajmohan #TNAssembly #ChiefMinisterVijay #TVKGovernment #TamilNaduNews #Chennai #TamilLanguage #TamilCulture #TrendingTN #ViralNewsTN #TNPolitics #LatestNewsTN
3

“அவதூறு பேசிய மிருக குணப் பேச்சுக்கு மக்கள் தகுந்த பதிலடி!” – இடைத்தேர்தல் வெற்றி குறித்து முதல்வர் விஜய் அறிக்கை!

October 9, 2026

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, அவதூறு பேசிய மிருக குணப் பேச்சுக்கு மக்கள் தகுந்த பதிலடியைத் தந்துள்ளதாக

2

“கொத்து புரோட்டா போட்டுவிட்டார்கள் மக்கள்!” – தவெக வெற்றியை விமர்சித்து மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!

October 9, 2026

சென்னை: ஐந்து நிமிடம் பேசினாலே கொத்து புரோட்டா போட்டுவிடுவார் என்று சொல்லப்பட்டவரை நான்கு நாட்கள் கொளுத்தும் வெயிலில் அலைய வைத்துக்

dailythanthi_2026-10-09_tw4n5oic_Untitled-6

“இடைத்தேர்தல் மாபெரும் வெற்றி!” – அமைச்சர்களுடன் வைரல் சைகை காட்டி முதலமைச்சர் விஜய் உற்சாகக் கொண்டாட்டம்!

October 9, 2026

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்ற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வெற்றியை முதலமைச்சர் விஜய் தனது அமைச்சர்களுடன் வைரல்

556

மதுபானசாலை அனுமதிக்கு எதிராக வலி. வடக்கில் போராட்டம்

October 9, 2026

மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் காணப்படும் வலி. வடக்கில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்படுவதை எதிர்த்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி

brand

பிராட் பிராட்ஃபோர்ட் திட்டத்துக்கு ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள் எதிர்ப்பு?

October 9, 2026

ஸ்கார்பரோவின் 12 கி.மீ பிரத்யேக பேருந்து தடங்களை நீக்க பிராட் பிராட்ஃபோர்ட் திட்டம்: ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள்

dailythanthi_2026-10-09_2ehwx7wk_shivan (1)

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க. அபார வெற்றி!” – 4 மாத ஆட்சிக்குக் கிடைத்த வெற்றி என அமைச்சர்கள் பெருமிதம்!

October 9, 2026

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களை வீழ்த்தி த.வெ.க. வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றுள்ளனர்.

images (1)

நவநீதம்பிள்ளைக்கு நோபல் பரிசு: போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்

October 9, 2026

2026ம் ஆண்டிற்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டத்தினை பாதுகாப்பதற்காக தளர்வின்றி போராடியமைக்காக ஐக்கியநாடுகள் முன்னாள்

hindutamil_import_hindu_uploads_news_2023_07_22_xlarge_1061734

“மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவு!” – வெளியே தெரிந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நந்தி சிலை!

October 9, 2026

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவாக உள்ளதால் ஜலகண்டேஸ்வரர் கோயில் நந்தி சிலை வெளியே தெரியத் தொடங்கியுள்ளது.

vikatan_2024-10-04_jsw1i91t_WhatsApp-Image-2023-12-26-at-1.12.38-PM

“சாலைகளில் ரத்த ஆறு ஓடுகிறது… விஜய் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது!” – எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு!

October 9, 2026

சென்னை: முதல்-அமைச்சர் விஜய் ஆட்சியில் கடந்த ஐந்து மாதங்களாகச் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

2

“நிரந்தர முதல்-அமைச்சராக விஜய் இருப்பார்!” – அமைச்சர் என்.ஆனந்த் அதிரடிப் பேச்சு!

October 9, 2026

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மண்டல மாநாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்

parliment

உயர் நீதிமன்றத் தீர்மானம் அறிவிப்பு!

October 9, 2026

நச்சுக்கள், அபின்கள் மற்றும் ஆபத்தான மருந்துகள் கட்டளைச் சட்டத்தின் இரண்டு திருத்தச் சட்டமூலங்களையும் சாதாரண பெரும்பான்மையால் நிறைவேற்ற முடியும் என

thu

சட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்ற பெயரில் புத்தசாசனத்தின் கௌரவத்தைச் சீர்குலைக்க முடியாது!

October 9, 2026

சிறைச்சாலையிலுள்ள கலபொடஅத்தே ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சம்பவமானது மிகவும் பாரதூரமானது என ‘தேசத்தைக் காக்கும்