இலங்கைப் பிரஜைகளின் உயிரியல் அடையாளத் தரவுகளை இந்தியாவுக்கு வழங்குவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

இலங்கைப் பிரஜைகளின் உயிரியல் அடையாளத் தரவுகளை உள்ளடக்கிய மின்னணு அடையாள அட்டைத் திட்டத்தை வெளிநாட்டு நிறுவனத்திடம் கையளிப்பதன் மூலம் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும் பிரஜைகளின் தனிப்பட்ட தகவல்களுக்கும் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மக்கள் போராட்ட இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. கொழும்பில் செவ்வாய்க்கிழமை (28) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உயிரியல் அடையாளத் தரவுகளை இந்தியாவுக்கு வழங்குவது குறித்த உள்ளகக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவ்வியக்கத்தின் தேசிய நிறைவேற்றுக்குழு உறுப்பினரான வசந்த முதலிகே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் […]

அதி உயர் மின் கம்பத்தில் ஏறியவருக்கு அபராதம்

குடும்ப முரண்பாட்டை தீர்த்துக் கொள்வதற்காக உயர் மின்னழுத்த மின்சாரக் கம்பத்தில் ஏறி எதிர்ப்பை வெளியிட்டதால், மின்சார சபைக்கு ஏற்பட்ட நஷ்டத்தைச் செலுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் சம்பந்தப்பட்ட நபருக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த நபர் கடந்த 2ஆம் திகதி பிற்பகல் கம்புருபிட்டிய பகுதியில் அமைந்துள்ள உயர் மின்னழுத்த மின்சார விநியோகக் கட்டமைப்பிற்குச் சொந்தமான கம்பமொன்றின் மீது ஏறி தனது எதிர்ப்பை வெளியிட்டிருந்தார். இதன் காரணமாக திஹகொட, கம்புருபிட்டிய, அக்குரஸ்ஸ, முலட்டியன, தெய்யாந்தர, மாவறல, தெனியாய உள்ளிட்ட பல பகுதிகளுக்கு […]

ஜெர்மனியில் மக்கள் போராட்டம்

ஜெர்மனியின் முன்னணி சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ‘அவுடி’ (Audi), தனது நெக்கார்சல்ம் நகரில் உள்ள தொழிற்சாலையை மூடக்கூடும் என்ற தகவலைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று(29.07.2026) நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் சுமார் 6,000 தொழிலாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். அவுடி நிறுவனத்தின் தாய் நிறுவனமான ‘வோக்ஸ்வேகன்’, தொழில்துறையில் நிலவும் கடும் சவால்களைச் சமாளிக்க பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளைக் குறைக்கவும், செலவினங்களைக் கட்டுப்படுத்தவும் திட்டமிட்டு வருகிறது. தொழிற்சாலையின் எதிர்காலம் குறித்து வோக்ஸ்வேகன் நிர்வாகம் உடனடியாகத் தெளிவுபடுத்த […]

பெந்தோட்டையில் பாராசூட் கடலில் விழுந்து: வெளிநாட்டு பெண் பலி

ந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை வழியில் இயங்கி வரும் நிறுவனம் ஒன்றினால் பறக்கவிடப்பட்ட இலகுரக பாராசூட் (Paramotor) இயந்திரம் ஒன்று, அதனை இயக்கியவர் மற்றும் அதில் பயணித்த வெளிநாட்டு பெண்ணுடன் இன்று மாலை கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் அந்த வெளிநாட்டு பெண் உயிரிழந்துள்ளதுடன், பாராசூட்டை இயக்கிய கொலம்பியாவைச் சேர்ந்த நபர் உயிர்தப்பியுள்ளார். உயிரிழந்தவர் 31 வயதான பலஸ்தீனத்தைச் சேர்ந்த பெண் ஆவார். சடலம் நாகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பெந்தோட்டை பொலிஸார் […]

3 மாகாணங்களுக்கும் 4 மாவட்டங்களுக்கும் மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 mm க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவக்கூடும். வடக்கு, வடமத்திய, வடமேல் […]

அமெரிக்க தளங்களைக் குறிவைத்து ஈரான் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கப்படும்!

ஜோர்டானில் உள்ள அமெரிக்க தளங்களைக் குறிவைத்து ஈரான் இராணுவம் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கையெழுத்தான அமைதி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இருதரப்பும் மீண்டும் போரில் களமிறங்கியுள்ளன. ஈரானுக்கு ஆதரவாக வளைகுடா நாடுகளின் கிளர்ச்சிப்படைகளும் களமிறங்கியுள்ளன. இந்தப் போரில், ஈரானின் முக்கிய கட்டமைப்புகளின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க கட்டமைப்புகளின் மீது ஈரானிய படைகள் […]

பட்டதாரி இளைஞர் சுவர் இடிந்து விழுந்து உயிரிழப்பு

காத்தான்குடியில் சுவர் இடிந்து விழுந்ததில் 28 வயதுடைய பட்டதாரி இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (29) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் மட்டக்களப்பு, ஜெயந்திபுரம், சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் இவர் முன்னாள் கிழக்குப் பல்கலைக்கழக மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது. சரியான வேலை இன்மை காரணமாக பகுதி நேரமாக கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார்.

மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரன் அவர்கள் நேற்றிரவு கனடாவில் காலமானார்

யாழ். ஊடக அமையத்தின் (Jaffna Press Club) முன்னாள் தலைவரும், யாழ். தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியருமான மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரன் அவர்கள் நேற்றிரவு கனடாவில் காலமானார் தமிழ் ஊடகத்துறையில் நீண்டகாலம் பணியாற்றிய அவர், ஊடகவியலாளர்களின் குரலாகவும், அவர்களின் உரிமைப் போராட்டங்களில் முன்னின்று உழைத்த ஒரு சிறந்த ஆளுமையுமாவார். அவரது அர்ப்பணிப்புள்ள பணிகள் தமிழ் ஊடக வரலாற்றில் என்றும் அழியாத தடம் பதித்தவை.

நயாகரா ஃபால்ஸ் துப்பாக்கிச் சூடு: தேடப்படும் 2 சந்தேகநபர்களின் வீடியோவை வெளியிட்டது பொலிஸ்

இந்த மாத தொடக்கத்தில் நயாகரா ஃபால்ஸில் (Niagara Falls) இடம்பெற்ற உயிரைப் பறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய, கொலைக் குற்றத்திற்காகத் தேடப்படும் இரண்டு சந்தேகநபர்களின் புதிய வீடியோவை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். 23 வயதான மரூஃப் பாங்கி (Maaroof Bangi) மற்றும் 30 வயதான ஜோஸ்டா கிரேஸ் மெக்னீல் (Josta Grace MacNeal) ஆகியோர் ஒரு ஆடை விற்பனை நிலையத்திற்குள் இருப்பது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோ எப்போது, எங்கு எடுக்கப்பட்டது […]

போர்ட் லேண்ட்ஸ் மோதலில் இ-ஸ்கூட்டர் ஓட்டுநர் படுகாயம்

போர்ட் லேண்ட்ஸ் (Port Lands) பகுதியில் இடம்பெற்ற வாகன மோதலில் இ-ஸ்கூட்டர் (E-scooter) ஓட்டுநர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். டாமி தாம்ஸன் பூங்காவிற்கு (Tommy Thompson Park) அருகில் உள்ள லெஸ்லி வீதி (Leslie Street) மற்றும் அன்வின் அவென்யூ (Unwin Avenue) பகுதியில், வாகனம் ஒன்றும் இ-ஸ்கூட்டரும் மோதிக்கொண்ட சம்பவம் தொடர்பில் மாலை 7:42 மணிக்கு அவசர உதவிப் பிரிவினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஸ்கூட்டரை ஓட்டிச் சென்ற ஆண், உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனைக்கு விரைவாகக் கொண்டு […]