ஈரான் மீது சக்தி வாய்ந்த தாக்குதல்களை ஆரம்பித்தது அமெரிக்கா

மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதில் வழங்கும் வகையில், ஈரான் மீது சக்தி வாய்ந்த தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் உள்ள கப்பல்கள் மீது செவ்வாய்க்கிழமை ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் ஈராக்கில் உள்ள ஈரானிய ஆதரவுப் படைகளை இலக்காகக் கொண்டு, முதல் முறையாக பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட அமெரிக்க – சவூதி கூட்டுத் தாக்குதல்களின் பின்னர் மோதல் மேலும் விரிவடைந்துள்ளது. […]
தற்போதைய சமூக குடும்பக் கட்டமைப்பில் வீழ்ச்சி

தற்போதைய சமூகத்தில் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களுக்கு மக்கள் அடிமையாகியுள்ளதன் காரணமாக குடும்பக் கட்டமைப்பு மற்றும் மனித உறவுகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவிக்கின்றார். திறந்த சந்தைப் பொருளாதாரம் இந்நாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்டதோடு சமூகத்திற்குள் நுகர்வுவாதம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், இதன் மூலம் மக்கள் மத்தியில் செயற்கையான ஆசைகளை உருவாக்கி பணம் சம்பாதிப்பதுவே இன்று சமூகத்தை இயக்கும் பிரதான காரணியாக மாறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சீதுவை பகுதியில் நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்வொன்றில் […]
வவுனியா கனகராயன்குளத்தில் கப் ரக வாகனம் விபத்து: இருவர் உயிரிழப்பு!

தம்புள்ளையில் இருந்து பருத்தித்துறைக்கு மரக்கறி ஏற்றி சென்ற கப் ரக வாகனம் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வவுனியா, கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்தானது ஏ-9 வீதி கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில், உடனடியாக மீட்கப்பட்டு மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்துள்ளனர். மேலும், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் […]
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் : சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில், கைதிகள் படுகொலை செய்யப்பட்டதாகவும் சிறைச்சாலையில் இருந்து வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகள் காணாமல் போயுள்ளதாகவும் இந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக முறையான மற்றும் நியாயமான விசாரணையை நடத்துமாறு கோரி, சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று (30) வியாழக்கிழமை முறைப்பாடு செய்துள்ளது. சிறைச்சாலையில் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் போன கைதிகளின் உறவினர்கள் மற்றும் சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு இணைந்து உத்தியோகபூர்வமாக முறைப்பாடு […]
செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி அமைதிப் போராட்டம்

செம்மணி–சித்துப்பாத்தி மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு நீதி கோரி, யாழ்ப்பாண மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட அமைதிப் போராட்டம் இன்று, ஆடி மாதம் 30ஆம் திகதி வியாழக்கிழமை, செம்மணி பகுதியில் நடைபெற்றது. ஆணைக்குழுவின் தலைவர் அருட்தந்தை அந்தோனிப்பிள்ளை அகஸ்ரின் அவர்களின் ஒழுங்கமைப்பில், அரியாலை புனித யூதாததேயு திருச்சுரூபம் முன்பாக ஆரம்பமான பேரணி செம்மணி சந்தியைச் சென்றடைந்தது. பேரணியின் நிறைவில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் திரு. டெர்க் அவர்களிடம் கையளிக்கப்படவுள்ள அவசர வேண்டுகோள் அறிக்கையை […]
கறுப்பு ஜூலை’ (Black July) நினைவேந்தலின் 43ஆவது ஆண்டு நினைவஞ்சலிக் கருத்தரங்கு

1983ஆம் ஆண்டு தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடூரப் படுகொலையான ‘கறுப்பு ஜூலை’ (Black July) நினைவேந்தலின் 43ஆவது ஆண்டு நினைவஞ்சலிக் கருத்தரங்கு, நேற்றைய தினம் புதன்கிழமை (2026 ஜூலை 29) யாழ்ப்பாணம் YMCA மண்டபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரும் மூத்த சட்டத்தரணியுமான ந. ஸ்ரீகாந்தா தலைமையில் இக் கருத்தரங்கு இடம்பெற்றது. இக் கருத்தரங்கில் தமிழ் இனத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகள் மற்றும் வரலாற்று ஆவணப் பாதுகாப்பு குறித்து முக்கிய உரைகள் நிகழ்த்தப்பட்டன. யாழ்ப்பாணப் […]
ஈரான் 400 ஏவுகணைகளை சீனாவிடம் இருந்து கொள்வனவு

அமெரிக்காவுடனான போருக்கு மத்தியில் தனது பாதுகாப்பை மீள் கட்டமைப்பு செய்து வரும் ஈரான், சீனாவில் தயாரிக்கப்பட்ட தோளில் வைத்து ஏவக்கூடிய 400 விமான ஏவுகணை செலுத்து அமைப்புகளை பெறவுள்ளதாக ரொயிட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது. அதன் முதல் தொகுதியை ஈரான் எதிர்வரும் சில வாரங்களில் பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக நன்கு தகவல் அறிந்த வட்டாரங்களுடன் உறுதிப்படுத்தி ரொயிட்டர்ஸ் இந்த செய்தியை வௌியிட்டுள்ளது. இராணுவத் தளங்கள் மற்றும் மூலோபாய உட்கட்டமைப்புகளைப் பாதுகாக்கும் ஈரானின் திறனில் உள்ள குறைபாடுகளை அம்பலப்படுத்திய, அமெரிக்கா […]
காணிகளை விடுவிக்க வலியுறுத்தி 36வது நாளாக தொடரும் போராட்டம் ; கேப்பாபிலவு மக்களை சந்திக்கவுள்ளார் பாதுகாப்பு பிரதி அமைச்சர்

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்பிலவு பகுதியில், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் நேற்று புதன்கிழமை (29) இரண்டாவது கட்டத்தின் 36வது நாளை எட்டியுள்ளது. கேப்பாப்பிலவு பகுதியில் 55 குடும்பங்களுக்கு சொந்தமான 59.5 ஏக்கர் பூர்வீக வாழ்விடக் காணிகளும், மேலும் 4 குடும்பங்களுக்கு சொந்தமான 100 ஏக்கர் மத்திய வகுப்புக் காணிகளும் இன்னும் இராணுவக் கட்டுப்பாட்டிலே உள்ளது. தமக்குச் சொந்தமான […]
நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான பணமோசடி வழக்கு ஒத்திவைப்பு!

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் அக்டோபர் மாதம் 29 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் ஏனைய சந்தேகநபர்கள் நீதவான் முன்னிலையில் ஆஜராகியிருந்தனர். இது தொடர்பான மேலதிகப் புலனாய்வு விசாரணைகளின் தற்போதைய முன்னேற்ற அறிக்கையை அக்டோபர் மாதம் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு புலனாய்வு அதிகாரிகளுக்கு […]
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு வழிவகுக்கவும் – யாழ். மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு மகஜர்

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு வழிவகுக்க வேண்டும் என்பது உட்பட ஏழு கோரிக்கைகளை முன்வைத்து, யாழ். மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்குக்கு மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். செம்மணியில் இன்றைய தினம் (30) கவனயீர்ப்பு போராட்டத்தினை நடத்தியதன் பின்னர் இந்த மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ்ப்பாண மறைமாவட்டத்தில் பணியாற்றும் குருக்களும் துறவறத்தினரும் ஆகிய நாம், இறந்தவர்கள், அவர்களின் குடும்பங்கள் மற்றும் […]