பாகிஸ்தான் பொலிஸ் சாவடி மீது தாக்குதல்: 11 பொலிஸார் உயிரிழப்பு

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பொலிஸ் சாவடி மீது இன்று அதிகாலை நடத்தப்பட்ட கொடூர தீவிரவாதத் தாக்குதலில் 11 பொலிஸார் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கஸீனா பொலிஸ் சாவடியைக் குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதனையடுத்து இடம்பெற்ற ஒரு மணிநேரத் துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்புப் படையினர் 15 தீவிரவாதிகளைக் கொன்றதாக பொலிஸ் அதிகாரி இர்ஃபான் கான் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் உடனடியாக உரிமை கோரவில்லை. இருப்பினும், […]
அவசர சிவப்பு எச்சரிக்கை

பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் பகுதிகள் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான மற்றும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பகுதிகளுக்கே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இக்கடற்பகுதிகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணிக்கு 60 – 70 கிலோமீற்றர் வரை அதிகரிப்பதுடன், கடற்பகுதிகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். எனவே, மறுஅறிவித்தல் விடுக்கப்படும் வரை இந்த கடற்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என கடற்படை மற்றும் மீனவ சமூகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழி : கொழும்பில் கவனயீர்ப்பு

செம்மணி மனிதப் புதைகுழி குறித்த விடயத்தில் நீதி கோரி இன்று (30) கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.
அனைத்து டெண்டர்களும் இனி ஆன்லைனில் வெளியிடப்படும் – அமைச்சர் ரமேஷ் அதிரடி அறிவிப்பு!

சென்னை: இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து கோயில்களின் டெண்டர்களும் (ஒப்பந்தப்புள்ளி) இனி முற்றிலும் ஆன்லைனில் மட்டுமே நடைபெறும் என அமைச்சர் ரமேஷ் அதிரடியாக அறிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையரக அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரமேஷ் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அனைத்து கோயில்களுக்கும் முறையான உறுதிமொழிப் படிவங்கள் மற்றும் ஒப்பந்தத்திற்கான விண்ணப்பங்கள் ஒரே மாதிரியான வடிவத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயார் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். […]
கர்நாடக முதல்வரை அழைத்து வந்து டெல்டா பகுதிகளை பார்வையிடச் செய்ய வேண்டும் – பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்!

தஞ்சாவூர்: தமிழக முதலமைச்சர் விஜய் கர்நாடகம் சென்றால், கர்நாடக முதல்வரைத் தமிழகத்திற்கு அழைத்து வந்து வறண்டு கிடக்கும் காவிரி டெல்டா பகுதிகளைப் பார்வையிடச் செய்ய வேண்டும் எனத் தமிழகக் காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் மிக உறுதியாக வலியுறுத்தியுள்ளார். தஞ்சாவூரில் இன்று தமிழகக் காவிரி விவசாயிகள் சங்கத்தின் அவசரக் கூட்டம் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அளித்துள்ள […]
ரிஷாட் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த தமிழ் சிறுமி தொடர்பில் வாக்குமூலம்

ழும்பு பௌத்தலோக மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்குச் சொந்தமான வீடொன்றில் 2021 ஆம் ஆண்டில் மர்மமான முறையில் உயிரிழந்த ஹிஷாலினி ஜூட் குமார் என்ற சிறுமியின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று இடம்பெற்றது. கொழும்பு புதுக்கடை மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் சுவசெரிய முதலுதவி அதிகாரி அஸலி உபேக்ஷா நேற்று சாட்சியமளித்தார். மேலதிக நீதவான் லிலான் வருசூவிதாரன முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் இவ்வாறு சாட்சியமளித்தார். “கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சிறுமியைத் தேடி […]
பிள்ளையானுக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு

தம்மைக் கைது செய்து தடுத்து வைத்திருப்பதை எதிர்த்து, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு அழைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கமைவாக, குறித்த மனுவை ஜனவரி மாதம் 19ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பசுமை இயக்கத்தின் சமகால அரசியல் உரையரங்கு கொக்குவில் பொற்பதி அறிவாலயத்தில் இடம் பெற்றது

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியல் தொடர்பான உரையரங்கு நேற்று புதன்கிழமை (29.07.2026) கொக்குவில் பொற்பதி அறிவாலய மண்டபத்தில் நடைபெற்றது. தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இவ்வுரையரங்கில் ‘அரசியல் தீர்வு – எதிர்நோக்கும் சவால்கள்’ என்ற தலைப்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினதும், தமிழ்த் தேசியப் பேரவையினதும் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உரையாற்றியிருந்தார். ‘கறுப்பு ஜீலை – கற்க மறந்த பாடங்கள்’ என்ற தலைப்பில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தனும், […]
நுவரெலியா இளம் பெண் வைத்தியர் கொலை; விளக்கமறியல் விவகாரம்

நுவரெலியாவில் உடற் சிகிச்சை நிபுணர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் நால்வரின் விளக்கமறியல் உத்தரவு எதிர்வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரதான சந்தேகநபர், அவரது மனைவி மற்றும் குற்றத்திற்கு துணை புரிந்ததாக கூறப்படும் மேலும் இருவர் உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியலே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த நால்வரும் இன்று (30) நுவரெலியா நீதவான் நீதிமன்றில் சிறைச்சாலை அதிகாரிகளால் நுவரெலியா நீதவான் புஷ்பிகா ஜயதாச […]
மோட்டார் சைக்கிள் அவசர சிகிச்சை சேவையை ஆரம்பிக்க திட்டம்

மோட்டார் சைக்கிள் அவசர சிகிச்சை சேவையொன்றை ஆரம்பிக்க 1990 சுவசெரிய அறக்கட்டளை தீர்மானித்துள்ளது. அவசர வைத்திய சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை மிகவும் விரைவாகவும் வினைத்திறனாகவும் சென்றடைவதற்காக இந்தச் சேவையைச் செயற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதிக வாகன நெரிசல் உள்ள நகர்ப்புறங்களிலும் மற்றும் வீதித் தடங்கல்கள் உள்ள பகுதிகளிலும் இந்த மோட்டார் சைக்கிள் அவசர சிகிச்சை சேவை முன்னெடுக்கப்படவுள்ளது. அம்புலன்ஸ் வண்டி சென்றடைவதற்கு முன்னர் நோயாளிக்கு விரைவாக முதலுதவி மற்றும் அடிப்படை மருத்துவ வசதிகளை வழங்குவதே இந்த புதிய […]