கல்கரியைச் சேர்ந்த 11 வயது சிறுவனின் உடல் வடகிழக்கு கல்கரியில் கண்டெடுப்பு: பொலிஸார் தகவல்

இரண்டு வாரங்களாகக் காணாமல் போயிருந்த கல்கரியைச் சேர்ந்த 11 வயதுச் சிறுவனின் உடலாக இருக்கலாம் எனக் கருதப்படும் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்தச் சிறுவனின் உடல் புதன்கிழமை நகரத்தின் வடகிழக்கு பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. பொலிஸ் தலைமையகத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்ட பொலிஸ் தலைமை அதிகாரி கேட்டி மெக்லெலன் (Chief Katie McLellan), “இன்று மிகவும் கடினமான ஒரு நாள்” என்று கூறினார். பார்கர் வெல்ஸ் (Parker Wells) என்ற அந்தச் சிறுவன் ஜூலை 16 […]

தீவிரமடையும் டெங்குத் தொற்று

இலங்கையில் நடப்பு ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகின்றது என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு கவலை வெளியிட்டுள்ளது. தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் புதிய தரவுகளின்படி, நாடு முழுவதிலும் இருந்து இதுவரை 83 ஆயிரத்து 661 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். டெங்குக் காய்ச்சலின் தீவிர தாக்கத்தினால் இதுவரை 61 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அங்கு இதுவரை 17 ஆயிரத்து 779 பேருக்குத் […]

அன்னதானம் வழங்கியவர்கள் மீது வாள்வெட்டு; ஏறாவூரில் சம்பவம்

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மைலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் அன்னதானம் வழங்கியவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று (29) பிற்பகல் நடந்த இத்தாக்குதலில் பெண்கள் உட்பட 4 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வாள்வெட்டு நடத்திய குழுவைச் சேர்ந்த ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்துள்ளதுடன் ஏனையவர்கள் தப்பி ஓடியதாகவும் கூறப்படுகின்றது. குறித்த ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நடைபெற்று வரும் நிலையில் நேற்று பகல் ஆலயத்தில் அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் ஆலயத்திற்குள் நடத்தப்பட்ட கொடூர […]

20 வருடமாக அடிப்படை வசதி இல்லாத மீனவ கிராமத்து மக்கள்

மட்டக்களப்பு பாலமீன்மடு மீனவர் எழுச்சி கிராமம் 50 வீட்டுத் திட்டத்தில் 30 குடும்பங்கள் அடிப்படை வசதிகளான மலசல கூடம், குடிநீர், மின்சாரம் இல்லாமல் கடந்த 20 வருடமாக வாழ்ந்து வரும் மக்களின் அவலங்களை போக்குமாறு ஜனாதிபதி மற்றும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருக்கு அவசரமாக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக ஈ.பி.டி.பி கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார். மட்டக்களப்பு பாலைமீன் மடுவில் உள்ள அவரது காரியாலயத்தில் புதன்கிழமை (29) இடம்பெற்ற வாராந்த ஊடக மாநாட்டில் கட்சியின் […]

நீதித்துறை உள்ளடக்கங்களை மாற்றியமைக்கும்போது அரசியலமைப்பு விதிகள் முறையாகப் பின்பற்றப்பட வேண்டும்

நீதிபதிகளின் பதவிக்கால நிர்ணயம் என்பது நீதித்துறையின் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்தும் முக்கிய விடயமாகும். அவ்வாறிருக்கையில் நீதித்துறை சார்ந்த பதவிகள் தொடர்பான அரசியலமைப்பு உள்ளடக்கங்களை மாற்றியமைக்கும்போது பொது இணக்கப்பாடு, வெளிப்படைத்தன்மை மற்றும் அரசியலமைப்பு விதிகள் என்பன முறையாகப் பின்பற்றப்படவேண்டும் என புதன்கிழமை (29) இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட பொதுச்சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற நீதியரசர்கள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் உள்ளடங்கலாக நாட்டின் சகல நீதிமன்றங்களின் நீதிபதிகளினதும் ஓய்வுபெறும் வயதெல்லையை உயர்த்துவதற்கான யோசனைக்கு கடந்த திங்கட்கிழமை […]