மாணிக்கக்கல் மோசடி முற்றுகை

ஹொரணை, கொபவகவத்தை களுகங்கை மோதரப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வந்த பாரிய அளவிலான மாணிக்கக்கல் அகழ்வு மோசடி ஒன்றை வலானை மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் முற்றுகையிட்டுள்ளனர். இதன்போது, 3 மாணிக்கக்கல் வியாபாரிகள் உட்பட 25 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த முற்றுகையின் போது, 11 படகுகள், 5 மோட்டார்கள் உட்பட மாணிக்கக்கல் அகழ்விற்குப் பயன்படுத்தப்பட்ட 7 கோடி ரூபா பெறுமதியான உபகரணங்கள் வலானை மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.

மேகதாது அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை: மத்திய அரசு திட்டவட்ட அறிவிப்பு!

புதுடெல்லி: காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பகிரங்கமாக அறிவித்துள்ளது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி மேகதாது அணை குறித்து எழுத்துப் பூர்வமாக சில முக்கிய கேள்விகளை எழுப்பி இருந்தார். 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, கர்நாடகா காவிரி ஆற்றின் குறுக்கே எந்த வகையான கட்டமைப்பையும் அமைப்பதற்கு, தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒப்புதலைப் பெற […]

ஓட்டமாவடி ஆற்றில் பாய்ந்த குடும்பப்பெண் இளைஞர்களால் உயிருடன் மீட்பு – வைத்தியசாலையில் அனுமதி.!!

ஓட்டமாவடி ஆற்றில் குதித்த பெண் ஒருவரை இரு இளைஞர்கள் காப்பாற்றி மீட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று (28) செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. ஓட்டமாவடி பாலத்தினால் முச்சக்கர வண்டியில் பயணித்த பெண் ஒருவர் தான் தொலைபேசியில் உரையாட வேண்டும் என முச்சக்கர வண்டியை நிறுத்துமாறு சாரதியுடன் வேண்டியுள்ளார். குறித்த பெண் சொன்ன கதையைக் கேட்டு முச்சக்கர வண்டியை சாரதி நிறுத்திய போது பெண் திடீரென ஆற்றில் குதித்து தத்தளித்துள்ளார். இதனைக் கண்டு கொண்ட இரு இளைஞர்கள் ஆற்றங்கரையில் நிறுத்தி […]

செம்மணி மனித புதைகுழி பின்னணியில் உள்ள குற்றவாளிகளுக்குத் தண்டனை உறுதி – நீதி அமைச்சர்

செம்மணி மனித புதைக்குழி விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை வழங்கப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார உறுதியளித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (28) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த நீதி அமைச்சர், “இந்த பேரவலத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகளா, இந்திய அமைதிப்படையினரா அல்லது இலங்கை ஆயுதப்படைகளா […]

நம் ஒற்றுமைக்கு சக்தி இருக்கிறது, அந்த சக்திக்கு நோக்கமும் உண்டு – நடிகர் தனுஷ்!

சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் தனது ரசிகர் மன்ற செயல்பாடுகளில் சமீபகாலமாக அதிக கவனம் செலுத்தி வருகிறார். நடிகர் விஜய் அரசியல் கட்சியைத் தொடங்கி தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், தனுஷும் அவரைப் பின்பற்றி விரைவில் அரசியலுக்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பும், கேள்வியும் பொதுமக்கள் மற்றும் திரைத்துறையினரிடையே பரவலாக எழுந்துள்ளது. இந்த நிலையில், நடிகர் தனுஷ் இன்று (ஜூலை 28) தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி, திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே அமைந்துள்ள தனியார் […]

புளியம்பொக்கனை பாலம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு

A35 பரந்தன்–முல்லைத்தீவு பிரதான வீதியின் 12ஆவது கிலோமீற்றர் பகுதியில் அமைந்துள்ள 40 மீற்றர் நீளமுடைய புளியம்பொக்கனை பாலம், புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இன்று (28.07.2026) பொதுமக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. குறித்த பாலத்தின் புனரமைப்புப் பணிகள் 2020ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்த போதிலும், கொரோனா பெருந்தொற்று மற்றும் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன. தற்போது அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் ரூபா 206 மில்லியன் செலவில் புனரமைப்புப் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டு, வெற்றிகரமாக நிறைவுசெய்யப்பட்டதைத் […]

ஊழலற்ற நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவதை வலியுறுத்தும் வகையிலான ‘நேர்மை நடைபவனி

அரச சேவையின் தரம், வினைத்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தி ஊழலற்ற நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவதை வலியுறுத்தும் வகையிலான  ‘நேர்மை நடைபவனி’ நிகழ்வானது இன்று (28.07.2026) செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்றது. ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலுக்கு அமைய முன்னெடுக்கப்படும் ‘நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா’ தேசிய செயற்பாட்டின் கீழ், நேர்மையான அரச சேவையை வலுப்படுத்தும் நோக்கில், நேர்மை வாரத்தின் (2026 ஜூலை 27 முதல் 31 வரை) இரண்டாம் நாள் நிகழ்வுகள் ‘நேர்மைமிக்க டிஜிட்டல் […]

அமெரிக்க உயர்ஸ்தானிகர் காரியாலய அரசிய அதிகாரி ரேச்சல் ஹக்கின்ஸிற்கும், ரவிகரன் எம்.பிக்குமிடையில் சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்க உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அரசியல் அதிகாரி ரேச்சல் ஹக்கின்ஸ் அவர்களுக்கும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுக்குமிடையில் 28.07.2026இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது. அந்தவகையில் முல்லைத்தீவு – கள்ளப்பாடு பகுதியில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் சமகால விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன

SJB நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு 1½ ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

2019 ஆம் ஆண்டு பொலிஸ் அதிகாரிகளுடன் தொடர்புடைய சம்பவம் தொடர்பாக பதுளை மேல் நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பண்டாரவளை கடவைக்கு அருகில் இடம்பெற்ற மோதலின் போது பொலிஸ் அதிகாரிகளை சட்டவிரோதமாகத் தடுத்து நிறுத்தியமை, உடற்காயம் ஏற்படும் வகையில் தாக்குதல் நடத்தியமை மற்றும் குற்றவியல் அச்சுறுத்தல் விடுத்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் விஜேசிறி குற்றவாளி என மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 2019 ஆம் ஆண்டில் […]

காணி விடுவிப்புத் தொடர்பில் மயிலிட்டி மக்களுடன் கலந்துரையாடிய சிறீதரன் எம்.பி…!

வலிகாமம் வடக்கு காணி விடுவிப்புத் தொடர்பாக, மயிலிட்டி மக்கள் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுடன் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டனர். பலாலி விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தை முன்னிறுத்தி, மயிலிட்டி மக்களின் பூர்வீகக் காணிகளை அரசாங்கம் சுவீகரிப்பதற்காக அண்மையில் அனுப்பப்பட்டுள்ள எழுத்துமூல அறிவித்தல்கள் தொடர்பில், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களிடம் தமது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினர். பல தலைமுறைகளாகத் தாம் வாழ்ந்து வந்த பூர்வீகக் காணிகளே தங்களது […]