செம்மணி மனித புதைகுழி பேரவலத்திற்கு யார் காரணமென்பது விசாரணைகளின் இறுதியிலேயே தெரிய வரும் – நீதி அமைச்சர்

செம்மணி மனித புதைக்குழி விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை வழங்கப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார உறுதியளித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (28) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த நீதி அமைச்சர், “இந்த பேரவலத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகளா, இந்திய அமைதிப்படையினரா அல்லது இலங்கை ஆயுதப்படைகளா […]

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

இலவசக் கல்வியைப் பாதுகாக்கவும், தனியார் பட்டப்படிப்பு மையங்களுக்கு எதிராகவும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் துணை மருத்துவப் பட்டதாரிகள் இணைந்து நடத்தும் மாபெரும் எதிர்ப்புப் பேரணி தற்போது கொழும்பில் இடம்பெற்று வருகின்றது. கொழும்பில் உள்ள சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சுக்கு முன்னாள் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. “ஹரிணி – நளிந்த கொள்கையை உடனடியாகத் திரும்பப் பெறு…!”, “பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்ய திறமைக்கு முன்னுரிமை அளிக்கும் முறைமையை உருவாக்கு…!” முதலான வாசகங்கள் அடங்கிய பதாதைகளை […]

கிளிநொச்சி மாவட்ட A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் A35 பரந்தன் – முல்லைத்தீவு பிரதான வீதியில் 12 ஆவது கிலோமீற்றர் தூரத்தில் உள்ள முதலாவது பாலம் இன்று (28) திறந்து வைக்கப்பட்டது. குறித்த பாலமானது 40 மீற்றர் நீளமானது, திறந்து வைக்கப்பட்ட புளியம்பொக்கனை 06 வருடங்களின் பின்னர் மக்கள் பாவணைக்கு இன்று கையளிக்கப்பட்டது. கடந்த 2020 ஆம் ஆண்டு கடந்த ஆட்சியாளர்களினால் புணரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக பொருளாதார நெருக்கடி காரணமாகவும் இடை நடுவே கைவிடப்பட்ட நிலையில் இருந்த குறித்த […]

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானின் கியூஷூ (Kyushu) தீவில் அமைந்துள்ள குமாமோட்டோ (Kumamoto) பகுதியை மையமாகக் கொண்டு இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவில் 7.1 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம், பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நீதிபதிகளின் ஓய்வு; சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை – அமைச்சரவை பேச்சாளர்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது தொடர்பான தீர்மானம் குறித்து சர்வஜன வாக்கெடுப்பிற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசியலமைப்பில் அவ்வாறு எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். இன்று (28) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். “1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பை உருவாக்கும் போது, அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான சட்ட வல்லுநர்கள் […]

கிரிக்கெட்டின் புதிய அரசியலமைப்பு வரைவு கையளிப்பு!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் புதிய அரசியலமைப்பின் வரைவு, விளையாட்டுத்துறை அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழு தெரிவித்துள்ளது. புதிய அரசியலமைப்பின் கீழ் வாக்களிக்கும் உரிமையுடையவர்களின் எண்ணிக்கையை 39 ஆகக் குறைக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அக்குழுவின் உறுப்பினரான சிதத் வெத்தமுனி குறிப்பிட்டார். கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபடாத விளையாட்டுச் சங்கங்களுக்கு வாக்குரிமை வழங்குவது தொடர்பிலும் புதிய நடைமுறை ஒன்றை அறிமுகப்படுத்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். தொடர்களில் விளையாடும் விளையாட்டுச் சங்கங்களுக்கு இரண்டு வாக்குகள் கிடைக்கப்பெறும் என்றும், அவர்கள் […]

கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட சீன பிரஜையின் மரணம் தொடர்பில் மேலும் பல தகவல்கள்

துறைமுக நகரத்தில் (Port City) கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட சீன பிரஜை, கணினி சார்ந்த மோசடிகளில் ஈடுபட்டு சட்டவிரோதமாகப் பணம் ஈட்டிய ஒருவர் என அடையாளங்காணப்பட்டுள்ளதாக கொழும்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஷாந்த டி சொய்சா தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களில் கொழும்பு மற்றும் மேல் மாகாணத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாகச் சமூக ஊடகங்களில் பரவிய தகவல்களின் உண்மை நிலையை விளக்குவதற்காக நேற்று (27) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் […]

மதுவரித் திணைக்களத்தின் தீர்மானத்திற்கு நிறுவனங்கள் எதிர்ப்பு

மதுபான உற்பத்தி மற்றும் சேமிப்பின் போது ஏற்படும் மதுசார வீணடிப்புச் சதவீதத்தை 1.5% இல் இருந்து 0.1% ஆகக் குறைப்பதற்குப் மதுவரித் திணைக்களம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு நாட்டின் மதுபான உற்பத்தியாளர்கள் தமது கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். மதுவரித் திணைக்களத்தின் இந்த புதிய அறிவிப்பினால், தற்போது இலங்கை அரசாங்கத்திற்கு 23 பில்லியன் ரூபாயை மிகப்பெரிய வரிப் பணமாகச் செலுத்தி வரும் நாட்டின் முன்னனி நிறுவனங்கள் மீண்டும் ஒருமுறை வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். […]

நீட் போராட்ட மாணவர்களின் சட்ட உதவிக்காக ரூ.1 கோடி நிதியுதவி அளித்தார் கபில் சிபல்!

புதுடெல்லி: தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராகத் தொடர்ந்து அறவழியில் போராட்டம் நடத்திவிட்டு, தற்போது காவல்துறை தரப்பில் பதியப்பட்ட வழக்குகளைச் சந்தித்து வரும் ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ மாணவர்களின் சட்ட உதவிக்காக, உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல் தனது சொந்தப் பொறுப்பில் ரூபாய் 1 கோடியை நிதியுதவியாக வழங்குவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் […]

எம்.பிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. பதுளை மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று (28) விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போதே இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.