ரஷ்யாவிற்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை

ஈரான் போர் தொடர்பில் சீனா மற்றும் ரஷ்யாவிற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க-ஈரான் நாடுகளுக்கு இடையில் தற்பொழுது நடைபெற்று வரும் போரில் சீனாவோ அல்லது ரஷ்யாவோ பங்கேற்கவில்லை என்று தாம் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார். எனினும், அந்த நாடுகள் இதில் தலையிட்டால் அது அவர்களுக்கு “மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்” என அவர் எச்சரித்துள்ளார். இது குறித்து தமது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், […]

இரு பெண்களின் சடலங்கள் மீட்பு

அம்பாறை மாவட்டத்தின் இருவேறு பிரதேசங்களில் தவறான முடிவெடுத்த நிலையில் இரு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த மரணம் தொடர்பில் மரண விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் நல்லடக்கத்திற்காக சடலம் கையளிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மருதமுனையை சேர்ந்த (வயது 20) திருமணமாகாத பெண் கடந்த செவ்வாய்க்கிழமை (21) மாலை தனது வீட்டில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த மரணம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் பரவியதை தொடர்ந்து சம்பவம் குறித்து பல […]

ரஷ்ய நாட்டவர் இலங்கையில் கைது

அளுத்கம, மொரகல்ல சுற்றுலாப் பிரதேசத்தில் ரஷ்ய நாட்டவர் ஒருவர் அளுத்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வாடகை அடிப்படையில் பெற்றுக் கொள்ளப்பட்ட வீடொன்றில் தங்கியிருந்து இணையம் ஊடாக பணம் உழைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த 35 வயதுடைய ரஷ்ய நாட்டவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். எந்தவொரு சட்டபூர்வமான விசா அனுமதியும் இன்றி சுமார் 7 ஆண்டுகளாக இவர் இவ்வாறு நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது. கடந்த 23ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பின் போது, வெளிநாட்டவரிடம் இருந்த 5 […]

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் டெங்கு காய்ச்சலால் அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் 80 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் ஜனவரி முதலாம் திகதி முதல் வியாழக்கிழமை (23) வரையான காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 80 ஆயிரத்து 114 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இம்மாதத்தில் கடந்த 23 நாட்களில் 24,739 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளமை காணக்கூடியதாக உள்ளது. அத்தோடு டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 59 ஆக உயர்வடைந்துள்ளதோடு, டெங்கு […]

யாழில் கறுப்பு ஜூலை நினைவேந்தல்

1983 கறுப்பு யூலை கலவரத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம்(24) வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் கோட்டை முனியப்பர் கோவில் முன்பாக நினைவேந்தல் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு ஏனையவர்களும் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

பிரகீத் எக்னலிகொட கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட விவகார வழக்கு

கடத்தி காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட விவகாரத்தில் வழக்கின் நான்காவது சாட்சியாளரான சுமதிப்பால சுரேஷ்குமார் எனும் தவேந்திரன் அல்லது முரளியிடம் மீண்டும் சாட்சியங்களைப் பெறுவதற்கு கொழும்பு மூவர் அடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் வெள்ளிக்கிழமை (24) அனுமதி அளித்தது. கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட பிரகீத் எக்னலிகொட விவகாரம் தொடர்பிலான வழக்கு வெள்ளிக்கிழமை (24) மேல் நீதிமன்ற நீதிபதி நயனா செனவிரத்ன தலைமையிலான நலின் ஹேவாவசம், லக்மாலி ஹேவாவசம் ஆகியோரை உள்ளடக்கிய மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் […]

யானையுடன் மோதிய வேன்: ஐவர் காயம்

பாதுக்கையிலிருந்து அனுராதபுரத்திற்குச் சென்ற குழுவினர் பயணித்த வேன் ஒன்று, அனுராதபுரம் – பாதேனிய பிரதான வீதியின் சிராவஸ்திபுர, மொரகொட பகுதியில் காட்டு யானை ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்து அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காட்டிலிருந்து கிராமத்திற்குள் நுழைந்த இந்த யானை, வௌ்ளிக்கிழமை (24) அதிகாலை மீண்டும் காட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது வீதியில் பயணித்த வேனுடன் மோதியுள்ளது. விபத்திற்குப் பிறகு கோபமடைந்த யானை, வேனையும் தாக்கி சேதப்படுத்தியுள்ளது. விபத்து நடந்த நேரத்தில் வேனில் […]

சிறைச்சாலை ஒன்றிற்குள் போதைப்பொருள் கடத்த முயன்ற பூனை?

சிறைச்சாலை ஒன்றிற்குள், போதைப்பொருள்களைப் கடத்த முயன்ற பூனை ஒன்றை பொலிஸார் மடக்கிப்பிடித்த சுவாரசியமான சம்பவம் ஜூலை 21ஆம் திகதி நடைபெற்றுள்ளது. மேற்கு ரஷ்யாவின் ‘நிழ்னி நோவ்கோரோட்’ (Nizhny Novgorod) பகுதியில் அமைந்துள்ள சிறைக்குள்ளே இந்த பூனை போதைப்பொருளை கடத்தியுள்ளது. அச்சிறைச்சாலையின் அதிகாரிகள் அந்தப் பூனையைப் பிடித்து, அதன் கழுத்தில் சுற்றப்பட்டிருந்த இரண்டு கைவினைப் பட்டைகளைப் (Collars) பிரித்தெடுத்து, அதற்குள் பொதி செய்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள்களைப் பறிமுதல் செய்யும் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது. நாய் மற்றும் பூனைகளுக்கிடையிலான […]

தீப்பிழம்பாக வெடித்துச் சிதறிய விமானம்

1 பேருடன் பயணித்த சிறிய ரக விமானம் ஒன்று, தூரத்திலுள்ள தீவுக்கு அருகே அவசரமாக நீரிலிறக்க முயன்றபோது விபத்துக்குள்ளாகித் தீப்பிழம்பாக வெடித்துச் சிதறியது. இதில் பயணிகள் பலர் காயமடைந்ததுடன், ஒருவர் உயிருக்குப் போராடி வருகிறார். அவசரமாகத் தரையிறக்க முயன்றபோது விபத்தில் சிக்கிய அந்த விமானம், தீப்பிடித்து முற்றிலும் உருக்குலைந்தது. ‘டி ஹேவிலாண்ட் DHC-3’ (de Havilland DHC-3) ரகத்தைச் சேர்ந்த ஒற்றை எஞ்சின் கொண்ட அந்த மிதவை விமானம் (Floatplane), வாஷிங்டனில் உள்ள சுசியா தீவுக்கு (Sucia […]

ரிச்மண்ட் உணவகத் தீவைப்புச் சம்பவம்: சந்தேகநபரை  அடையாளம்காண கண்காணிப்புக் கேமரா காட்சிகளை வெளியிட்டது காவல்துறையினர்!

ரிச்மண்ட் (கனடா): ரிச்மண்ட் பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் சில மாதங்களுக்கு முன்பு இடம்பெற்ற தீவைப்புச் சம்பவம் தொடர்பாக, சந்தேகநபரை அடையாளம் காண்பதற்காக காவல்துறையினர் கண்காணிப்புக் கேமரா (Surveillance video) காட்சிகளை வெளியிட்டுள்ளனர். கடந்த மார்ச் 3-ஆம் தேதி அதிகாலை வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வெள்ளிக்கிழமை ரிச்மண்ட் கனடிய அரசுக் காவல்துறையினரால் (RCMP) வெளியிடப்பட்ட காணொளியில், நபர் ஒருவர் ‘செக்ஸ்மித் வீதியின்’ 2800-வது பிளாக்கில் அமைந்துள்ள உணவகத்தின் வெளிப்பகுதிக்கு (Patio) வருகிறார். அங்கு பிளாஸ்டிக் தாள்களால் மூடப்பட்டிருந்த […]