நாட்டில் டெங்கு காய்ச்சலால் அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் 80 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் ஜனவரி முதலாம் திகதி முதல் வியாழக்கிழமை (23) வரையான காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 80 ஆயிரத்து 114 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இம்மாதத்தில் கடந்த 23 நாட்களில் 24,739 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளமை காணக்கூடியதாக உள்ளது.
அத்தோடு டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 59 ஆக உயர்வடைந்துள்ளதோடு, டெங்கு பரவலைக் கருத்தில் கொண்டு 175 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகள் அதி உயர் டெங்கு அபாயமிக்க பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.