கதிர்காமம் சென்றோரின் கார் செட்டிபாளையத்தில் லொறியுடன் மோதி பாரிய விபத்து 5 பேருக்கு காயம்.!!

களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்ப செட்டிபாளையம் பகுதியில் இன்று (25) காலை 8 மணியளவில் பாரிய விபத்துச் சம்பம் ஒன்று பதிவாகியுள்ளது. மட்டு கல்முனை சாலைவழியே வாழைச்சேனையிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த கார் செட்டிபாளையம் சித்திவிநாயகர் ஆயத்திற்கு அருகாமையில் வைத்து கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த லொறியுடன் நேருக்கு நேர் மோதியுள்ளது. அதிவேகமாக பயணித்த வாகனங்கள் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்தில் சிக்கிக்கொண்டுள்ளன. இந்த விபத்தில் காரில் இருந்த குழந்தைகள் உட்பட மூவரும் லொறியில் பயணித்த இருவருமாக மொத்தம் ஐந்துபேர் […]

கறுப்பு ஜூலை மற்றும் வெலிக்கடை சிறைப் படுகொலை நினைவேந்தல்

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் 53 தீபங்கள் ஏற்றி உணர்வுபூர்வ அஞ்சலி!கறுப்பு ஜூலை தமிழினப் படுகொலை நிகழ்வுகளையும், அதன்போது கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உள்ளிட்ட 53 தமிழ் அரசியல் கைதிகளையும் நினைவுகூரும் அஞ்சலி நிகழ்வு, யாழ்ப்பாணம் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தலைமைச் செயலகத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் பிரதான ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின. அதனைத் தொடர்ந்து, உப தவிசாளர் தர்மலிங்கம் […]

யாழ்ப்பாணத்தில் சிறுமி மீதான பாலியல் வல்லுறவு வழக்கு: குற்றவாளிக்கு 30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை!

16 வயதிற்குட்பட்ட சிறுமி ஒருவரைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட நபருக்கு, மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் தலா 10 ஆண்டுகள் வீதம் மொத்தம் 30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி வெள்ளிக்கிழமை (24) தீர்ப்பளித்துள்ளார். எதிரி நீதிமன்றத்தில் சமுகமளிக்காத நிலையில் நடைபெற்ற இந்த விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட சிறுமி இச்சம்பவத்தினால் கர்ப்பமடைந்ததும், அச்சிறுமியின் அறிவின்றியே அவரைச் சட்டவிரோதக் கருக்கலைப்பு நிலையத்திற்கு அழைத்துச் சென்று சுமார் 6 மாதக் கருவைக் கலைத்ததும் […]

ஜனாதிபதி மாளிகைகளில் 3000க்கும் மேற்பட்ட வெளிநபர்கள் தங்கியுள்ளதாக அறிக்கை

2025 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் உள்ள ஜனாதிபதி மாளிகைகளில் ஜனாதிபதி தங்கியிருக்காவிட்டாலும், அவற்றில் பெரும்பாலானவற்றில் பல்வேறு நபர்கள் 3,089 பேர் தங்கியுள்ளதாகத் தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. குறித்த காலத்தில் நடத்தப்பட்ட கூட்டங்களின் எண்ணிக்கை மூன்று மட்டுமே என அந்த அலுவலகம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏழு ஜனாதிபதி மாளிகைகளின் மின்சாரம், தொலைபேசி உள்ளிட்ட ஏனைய வசதிகளுக்காக அந்த ஆண்டில் 32,982,675 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. கதிர்காமம், மஹியங்கனை மற்றும் பெந்தோட்ட ஆகிய மாளிகைகளில் 2025 […]

பிரதான வீதியில் பயங்கர விபத்து: 19 பேர் வைத்தியசாலையில்

மாத்தறை – திஸ்ஸ பிரதான வீதியின் வீரவில பகுதியில் பேருந்தும் மோட்டார் சைக்கிளொன்றும் ஒன்றோடொன்று மோதி இடம்பெற்ற விபத்தில் 19 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் 11 ஆண்களும் 8 பெண்களும் அடங்குவதாகப் பொலிஸார் தெரிவித்தனர். திஸ்ஸமஹாராமவிலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தொன்று, வீரவில பிரதேச செயலகத்திற்கு அருகில் வைத்து மோட்டார் சைக்கிளுடன் மோதியதுடன், கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மரத்தில் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் […]

சட்டத்தரணிகளை நியமிப்பதற்கான வழிகாட்டலில் திருத்தம்

ஜனாதிபதி சட்டத்தரணிகளை நியமிப்பது தொடர்பான வழிகாட்டல் கோவையின் ஒரு பிரிவைத் திருத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைவாக ஜனாதிபதியின் செயலாளரினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய, குறைந்தபட்சம் 20 வருட காலப்பகுதிக்கு உயர்நீதிமன்ற சட்டத்தரணியாக பணியாற்றியிருக்காவிட்டால், ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்கப்படக்கூடாது என அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னர் இருந்த வழிகாட்டல் கோவைக்கு அமைவாக, ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்கப்படுவதற்கு குறைந்தபட்சம் 20 வருட காலம் உயர்நீதிமன்ற […]

17 வயதுச் சிறுமி கல்குவாரியில் சடலமாக மீட்பு!

மஹவலதென்ன கஜுவத்த பகுதியில் உள்ள கல்குவாரி ஒன்றில் இருந்து சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பலங்கொடை, மஹவலதென்ன பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுமி என தெரிவிக்கப்படுகிறது. இச்சிறுமி கடந்த 23 ஆம் திகதி முதல் வீட்டிலிருந்து காணாமல் போயிருந்த நிலையில், இது தொடர்பாக அவரது தந்தையினால் பலங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும் பதிவு செய்யப்பட்டிருந்தது. எனினும், இது கொலையா, தற்கொலையா அல்லது நீரில் மூழ்கி ஏற்பட்ட மரணமா என்பது தொடர்பான தகவல்கள் […]

தனுஷ்கோடியில் கைதான இரு இலங்கையர்களும் வத்தளை துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்பா?

சட்டவிரோதமாகப் படகில் தனுஷ்கோடி சென்ற இரு இலங்கையர்களும் அண்மையில் வத்தளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்பிருக்கலாம் என இலங்கை அதிகாரிகள் சந்தேகம் வெளியிடுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சட்டவிரோதமான முறையில் படகொன்றின் மூலம் தனுஷ்கோடிக்குச் சென்ற இரு இலங்கையர்களை இந்தியக் கடலோரப் பொலிஸார் நேற்று (24) கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 30 மற்றும் 31 ஆகிய வயதுடைய வத்தளை மற்றும் கம்பஹா பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை வத்தளைப் […]

நாவலப்பிட்டியைச் சேர்ந்த குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!

கம்பளை, போத்தலாப்பிட்டிய பாத்திமா கார்டன் பகுதிக்கு அருகிலுள்ள மகாவலி ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஆற்றில் சடலமொன்று மிதப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாகக் கம்பளை பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். அதனையடுத்துச் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்டவர் நாவலப்பிட்டி, சேலம்பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்த சுமார் 48 வயதுடைய நபர் எனக் கண்டறியப்பட்டுள்ளது. சடலம் பிரேத பரிசோதனைகளுக்காகக் கம்பளை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக […]

ஐரோப்பாவிற்கு கடத்தப்படவிருந்த போதைப்பொருள் பறிமுதல்

மேற்கு ஆபிரிக்க நாடான லைபீரியாவில், ஐரோப்பாவிற்கு கடத்தப்படவிருந்த சுமார் $317 மில்லியன் பெறுமதியான கொக்கைன் போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இது அந்நாட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய போதைப்பொருள் வேட்டைகளில் ஒன்றாகும். தலைநகர் மன்ரோவியாவிற்கு கிழக்கே உள்ள டுவாசோன் என்ற நகரில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்திய காவல்துறையினர், 3,971 கிலோ எடையுள்ள கொக்கைன் போதைப்பொருளைக் கைப்பற்றினர். அட்டைப்பெட்டிகள் மற்றும் பயணப் பைகளில் ‘கோகோ’ மற்றும் ‘போஸைடான்’ எனக் குறியிடப்பட்டு இவை மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இந்த கடத்தல் […]