யோஷித ராஜபக்‌ஷவின் பணமோசடி வழக்கிற்குத் தடை விதிக்க சட்டமா அதிபர் எதிர்ப்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்‌ஷவிற்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள பணமோசடி வழக்கை விசாரணை செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு அவரது சட்டத்தரணிகள் முன்வைத்த கோரிக்கைக்குச் சட்டமா அதிபர் திணைக்களம் இன்று கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. யோஷித ராஜபக்‌ஷ சமர்ப்பித்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் […]

செம்மணி மனிதப்புதைகுழி அகழாய்வை பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்ட தூதுக்குழு!

நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடைபெற்று வரும் செம்மணி மனிதப்புதைகுழி அகழாய்வுப் பணிகளை பார்வையிடும் நோக்கில், ஐரோப்பிய ஒன்றிய (EU) உயர்மட்ட பிரதிநிதிகள் குழு இன்று அகழாய்வு தளத்திற்கு விஜயம் செய்தது.   இந்தக் குழுவில் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் கார்மென் மொரேனோ, ஜெர்மனி தூதுவர் டாக்டர் ஃபெலிக்ஸ் நியூமன், பிரான்ஸ் தூதுவர் ரெமி லாம்பெர்ட், இத்தாலி தூதுவர் டாமியானோ பிரான்கோவிக், நெதர்லாந்து தூதுவர் வீபே டி போர், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதித் தூதுக்குழுத் தலைவர் கலியா அகிஷேவா, […]

குறிகட்டுவான் 776 வழித்தட தனியார் பேருந்தின் சாரதி ரமேஷ் கடமையின்போது திடீர் மறைவு!

குறிகாட்டுவானில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி இன்று (22/07) காலை பயணிகளுடன் தனியார் பேருந்தை செலுத்திச் சென்றுகொண்டிருந்தபோது, மண்கும்பான் சந்திக்கு அருகில்சாரதிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் , சாதுரியமாக செயற்பட்ட சாரதி பேரூந்தினை அந்த உயிர்ப்போராட்டத்தின் இறுதி நொடிகளிலும், தனது பொறுப்பை மறக்காமல், பயணிகள் எவருக்கும் எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாதவாறு பாதுகாப்பாக நிறுத்திவிட்டு நடத்துனரின் உதவியுடன் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிர் பிரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இதேவேளை இவரது உடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக […]

செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழி: சர்வதேச விசாரணைக்கான கோரிக்கை

யாழ்ப்பாணம் செம்மணி – சிந்துபாத்தி மயானப் பகுதியில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழி விவகாரத்தில், சர்வதேச சமூகத்தின் கண்காணிப்பு மற்றும் சுயாதீன சர்வதேச விசாரணை கோரி மக்கள் அமைப்புகளாலும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களாலும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன  

இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் மீண்டும் மக்களிடமே கையளிக்கப்படும் போது, தென்னிலங்கையில் சிலர் ‘இராணுவத்தினரின் காணிகளை மக்களுக்கு வழங்குவதாக’ இனவாத நோக்கில் குரல் எழுப்புகின்றனர்.-வடக்கு மாகாண  ஆளுநர்

போர் முடிவடைந்து விட்டது. இனியுமொரு போர் ஏற்படும் என நான் நம்பவில்லை. இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் மீண்டும் மக்களிடமே கையளிக்கப்படும் போது, தென்னிலங்கையில் சிலர் ‘இராணுவத்தினரின் காணிகளை மக்களுக்கு வழங்குவதாக’ இனவாத நோக்கில் குரல் எழுப்புகின்றனர். ஆனால், இராணுவம் விடுவிப்பது அந்த மக்களின் சொந்தக் காணிகளையே தவிர இராணுவத்தினரின் காணிகளை அல்ல. இந்த அரசாங்கம் பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கான செயன்முறைகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்கும், என வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் […]

ஐரோப்பிய ஒன்றிய உயர் மட்ட தூதுக்குழுவிடம் சி.வீ.கே எடுத்துக்கூறிய முக்கிய விடயங்கள்

செம்மணி மனித புதைகுழி சம்பந்தமாக தனியாக ஒரு ஆய்வை நடத்தி, எந்த காலத்தில் இந்த புதைகுழியில் புதைக்கப்பட்டார்கள் என்பதைப் பார்ப்பதன் மூலம் இதனை செய்தவர்களை அடையாளம் காண முடியும் என ஐரோப்பிய ஒன்றிய உயர் மட்ட தூதுக்குழுவிடம் தான் எடுத்துக்கூறியதாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்ட தூதுக்குழுவை நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சி.வீ.கே.சிவஞானம் இதனை […]

பொதுச் சுகாதார சேவையின் நூற்றாண்டு விழா

பொதுச் சுகாதார சேவையின் பெருமைமிக்க நூற்றாண்டு விழா ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (21) முற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. தெற்காசிய பிராந்தியத்தின் முதலாவது கள சுகாதாரப் பிரிவாக 1926 ஆம் ஆண்டு களுத்துறை தேசிய சுகாதாரப் பிரிவு நிறுவப்பட்டமையுடன் இலங்கையின் பொதுச் சுகாதார சேவை ஆரம்பமானது. இன்று 362 க்கும் மேற்பட்ட சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகளைக் கொண்ட பரந்த வலையமைப்பாக வளர்ந்துள்ள பொதுச் சுகாதார சேவையின் […]

5 பேரின் உயிரைப் பறித்த தீ விபத்து

ஹோமாகம கட்டுவான தொழிற்பேட்டையில் தீப்பற்றிய தொழிற்சாலை, 2024 ஆம் ஆண்டிற்குப் பிறகு சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமத்தைப் புதுப்பிக்கவில்லை எனவும், அவசரகால சூழ்நிலையை எதிர்கொள்வதற்கான திட்டத்தைக் கூட தயாரிக்கவில்லை எனவும் மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை தெரிவித்துள்ளது. 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் தொழிற்சாலை, 2024 ஆம் ஆண்டிற்குப் பிறகு தனது சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமத்தைப் புதுப்பிக்கவில்லை என்பதை மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை உறுதிப்படுத்தியுள்ளது. தொழிற்சாலையின் உற்பத்தி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் PVC உள்ளிட்ட இரசாயனப் பொருட்கள் தீப்பற்றும்போது மனித […]

உலக வங்கியின் புதிய திட்டம்!

‘டித்வா’ அனர்த்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட நாட்டின் கால்நடை வளர்ப்புத் துறையை மீளக் கட்டியெழுப்புவதற்கும், பால் பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கும் விசேட அவசர நிவாரணத் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விலங்குகளுக்காக அரசாங்கத்தினால் ஏற்கனவே வழங்கப்படும் நஷ்டஈட்டுத் தொகைக்கு மேலதிகமாக இந்த புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக விவசாய, கால்நடை, நில மற்றும் நீர்ப்பாசன அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த அவசர மீட்புத் திட்டம் உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் செயல்படுத்தப்படுவதாகவும், திட்டத்துடன் தொடர்புடைய அனைத்து ஆரம்பக் […]

தொழில் பிரதி அமைச்சர் அதிரடி உத்தரவு!

ஹோமாகம, கட்டுவான தொழில்பேட்டை அமைந்துள்ள ஹெல்மட் தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக விரிவான விசாரணை நடத்தி, தாமதமின்றி முழுமையான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு தொழில் அமைச்சைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு தொழில் பிரதி அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். நேற்று(21) காலை சுமார் 9:45 மணியளவில் குறித்த மூன்று மாடி தொழிற்சாலைக் கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 80-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் இருந்தபோது பரவிய இந்தத் தீயில், 5 […]