கறுப்புயூலை – 23–கவனயீர்ப்புப் போராட்டம்

தமிழரின் நினைவை விட்டு என்றும் அகலாத தமிழின அழிப்பு நாட்கள். இனக்கலவரம் என்ற பெயரில் நடாத்திய மாபெரும் தமிழினப்பின் 43 ஆண்டுகள் இன்று செம்மணி மண்ணில் புதைக்கப்பட்டு இதுவரை கண்டெடுக்கப்பட்ட 448 உயிரற்ற பிஞ்சு முதல் பெரியவர்கள் வரை நீதிகேட்டு நிற்கின்றனர். அதற்கு வலுச்சேர்க்கும் கவனயீர்ப்புப் போராட்டம்! 1983 ல் சிறையிலிருந்த அப்பாவி அரசியல் கைதிகள் முதல் சிங்கள இனத்துடன் சகோதரத்துவத்துடன் சேர்ந்து அறத்தோடு வாழ்ந்த தமிழ்மக்கள் 1983 யூலை 23,24,25 இந்த நாட்களில் இனக்கலவரம் என்ற […]

பூனைக் குட்டிகளுக்குப் பெயரிடும் போட்டி

எதிர்வரும் ஆகஸ்ட் 8 ஆம் திகதி உலக பூனைகள் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், பின்னவளை மிருகக்காட்சிசாலையில் உள்ள மூன்று மீன்பிடிப் பூனைக் குட்டிகளுக்குப் பெயரிடுவதற்காகப் பொதுமக்களுக்கான திறந்த போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. விலங்குப் பிரியர்கள் இந்த இளம் பூனைகளுக்குச் படைப்பாற்றல் மிக்க மற்றும் அர்த்தமுள்ள பெயர்களைப் பரிந்துரைக்குமாறு மிருகக்காட்சிசாலை அழைப்பு விடுத்துள்ளது. சிறந்த பெயர்ப் பரிந்துரைகள் நடுவர் குழுவினால் தேர்ந்தெடுக்கப்படுவதுடன், வெற்றி பெறுபவர்களுக்கு உலக பூனைகள் தினக் கொண்டாட்டங்களின் போது சிறப்புக் பரிசுகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

சிக்கலில் நீதி அமைச்சர்?

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம், எதிர்வரும் ஜூலை 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை பாராளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ளது.

பிரதேச சபையின் வருமான பரிசோதகர் கைது

இலஞ்சக் குற்றச்சாட்டின் பேரில் கொட்டிகாவத்தை – முல்லேரியா பிரதேச சபையின் உப அலுவலகத்தில் பணிபுரியும் வருமான பரிசோதகர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். முறைப்பாட்டாளர் 2018 ஆம் ஆண்டு கொள்முதல் செய்து இதுவரை வசித்து வரும் வீட்டிற்கு முல்லேரியா பிரதேச சபை அதிகாரிகள் வருகை தந்து, வீட்டின் மேல் தளத்திற்கும் கீழ் தளத்திற்கும் தனித்தனியாக வரி செலுத்துமாறு அறிவித்துள்ளனர். அதற்கமைய, முறைப்பாட்டாளர் அந்த அதிகாரிகள் கோரிய ஆவணங்களைத் தயாரித்து ஒப்படைத்துள்ளார். பின்னர், முல்லேரியாவ […]

சுரேஷ் சலேவின் மனு ஒத்திவைப்பு

ஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாகத் தன்னை கைது செய்து தடுத்து வைப்பதைச் சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனுவை மேலதிக பரிசீலனைக்காக வரும் ஜூலை 27 ஆம் திகதிக்கு அழைக்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இம்மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சுரேஷ் சலே சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன தனது வாய்மொழி வாதங்களை நிறைவு செய்தார். இதனைத் தொடர்ந்து, […]

பேருந்து நிலையங்களைச் சூழவுள்ள கடைகளில் திடீர் சோதனை

நாடு முழுவதிலும் உள்ள முக்கிய பேருந்து நிலையங்கள் மற்றும் தூரசேவை பேருந்து முனையங்களைச் சூழவுள்ள பல கடைகளில் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையின் போது, அதிகாரசபையின் அதிகாரிகளால் 112 கடைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்களும் பயணிகளும் அதிகளவில் கூடும் போக்குவரத்து மையங்களைச் சூழ இடம்பெறும் நியாயமற்ற வர்த்தக முறைகேடுகளிலிருந்து நுகர்வோரைப் பாதுகாப்பதே இந்த விசேட நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும். இச்சோதனைகளின் போது, உற்பத்தியாளரால் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலையை விட […]

இலங்கையின் முதல் ‘கால்வாய் சூரிய சக்தி’ திட்டம்

இலங்கையில் கால்வாய் ஒன்றின் மீது அமைக்கப்படவுள்ள முதலாவது ‘Canal-Top Solar’ சூரிய மின்சக்தி திட்டத்தை ஆரம்பிப்பதற்கான முதற்கட்ட சாத்தியக்கூறு ஆய்வு மஹியங்கனையின் ‘வியானா கால்வாய்’ பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 20 கிலோமீற்றருக்கும் அதிகமான நீளத்தைக் கொண்ட பரந்த கால்வாயாக இருப்பதால், தேசிய மின்சார அமைப்பிற்கு அதிகளவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை சேர்க்கும் சாத்தியம் மற்றும் ஆண்டின் பெரும்பகுதியில் கிடைக்கும் சிறந்த சூரிய ஒளி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இத்திட்டத்திற்காக வியானா கால்வாய் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சூரிய மின்தகடுகள் மூலம் கால்வாயை […]

தேவேந்திரமுனையில் துப்பாக்கிச் சூடு

தேவிநுவர பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு தேவேந்திரமுனை, கந்தர பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று (22) அதிகாலை காரில் வந்த சிலர் கைத்துப்பாக்கி ஒன்றினால் இத்துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் எவருக்கும் காயம் அல்லது பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏதண்ட வீதி, தேவேந்திரமுனை பகுதியில் அமைந்துள்ள மீனவர் […]

ஐரோப்பாவைச் சென்றடைய முயன்ற அகதிகள் படகு விபத்து: 143 பேர் பலி

ஐரோப்பாவைச் சென்றடைய முயன்ற அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் பயணித்த ஒற்றைப் படகு ஒன்று மௌரிடேனியா கடற்கரை அருகே விபத்துக்குள்ளானதில், குறைந்தது 143 பேர் உயிரிழந்துள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் முகாமையான UNHCR தெரிவித்துள்ளது. மௌரிடேனியா கடற்பகுதியில் ஜூலை 14 மற்றும் 18 ஆம் திகதிகளுக்கு இடையில் சிக்கிய பிற படகுகளிலிருந்து 387 பேரைப் பாதுகாப்பாக மீட்ட போதிலும், இந்த உயிரிழப்புகள் மிகுந்த வேதனையளிப்பதாக செவ்வாய்க்கிழமையன்று அந்த முகமை தெரிவித்துள்ளது. காம்பியாவின் […]

இளைஞர்கள் கடத்தல் வழக்கு: முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன பிணையில் விடுதலை

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 2008ஆம் ஆண்டு 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் சந்தேகநபராக ஆஜர்ப்படுத்தப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்னவிற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கில் முக்கிய சந்தேகநபருக்கு உதவினார் மற்றும் மறைமுகமாகத் துணை நின்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில், நீதிமன்றம் பிறப்பித்த அறிவித்தலுக்கு அமைய அவர் நீதிமன்றத்தில் ஆஜரானார். இதன்போது தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், தான் குற்றமற்றவர் […]