இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் மீண்டும் மக்களிடமே கையளிக்கப்படும் போது, தென்னிலங்கையில் சிலர் ‘இராணுவத்தினரின் காணிகளை மக்களுக்கு வழங்குவதாக’ இனவாத நோக்கில் குரல் எழுப்புகின்றனர்.-வடக்கு மாகாண  ஆளுநர்

போர் முடிவடைந்து விட்டது. இனியுமொரு போர் ஏற்படும் என நான் நம்பவில்லை. இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் மீண்டும் மக்களிடமே கையளிக்கப்படும் போது, தென்னிலங்கையில் சிலர் ‘இராணுவத்தினரின் காணிகளை மக்களுக்கு வழங்குவதாக’ இனவாத நோக்கில் குரல் எழுப்புகின்றனர். ஆனால், இராணுவம் விடுவிப்பது அந்த மக்களின் சொந்தக் காணிகளையே தவிர இராணுவத்தினரின் காணிகளை அல்ல. இந்த அரசாங்கம் பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கான செயன்முறைகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்கும், என வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் தலைமையிலான ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் தூதுவர்கள், வடக்கு மாகாண ஆளுநரை ஆளுநர் செயலகத்தில்நேரில் சந்தித்துக் கலந்துரையாடினர். இச்சந்திப்பின் போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
May be an image of one or more people, dais, newsroom and text that says 'Northern Province MEDIA Division D Division'
வடக்கு மாகாணத்தின் சமகால நிலவரங்கள் மற்றும் அங்கு முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகள் குறித்து நேரில் ஆராய்ந்து அறிந்துகொள்வதே தமது இந்தப் பயணத்தின் பிரதான நோக்கம் எனத் தூதுக்குழுவினர் இதன்போது குறிப்பிட்டனர்.
இதற்குப் பதிலளித்த ஆளுநர், கடந்த காலங்களை விட தற்போது வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியதுடன், அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அபிவிருத்திச் செயற்பாடுகள் குறித்தும் விளக்கமளித்தார். குறிப்பாக, வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் என்பவற்றால் கடந்த காலங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிப்பது தொடர்பில் மாவட்டக் குழுக்களில் எட்டப்பட்ட முன்னேற்றங்கள் குறித்தும் ஆளுநரால் தெளிவுபடுத்தப்பட்டது. அத்துடன், பாதுகாப்புத் தரப்பினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பிலும் சுட்டிக்காட்டிய ஆளுநர், இந்த விடயங்களை அரசாங்கம் மிகவும் நேரிய சிந்தனையுடனேயே அணுகி வருவதாகக் குறிப்பிட்டார்.
மேலும், மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படுவது தொடர்பிலும், செம்மணிப் புதைகுழி அகழ்வுப் பணிகள் குறித்தும் ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவினர் ஆளுநரிடம் கேட்டறிந்துகொண்டனர்.
வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகள், குறிப்பாக இந்தியாவின் பங்களிப்புடனான செயற்றிட்டங்கள் தொடர்பிலும் இச்சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டது. காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கான இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பு, துறைமுகம் எவ்வாறு அபிவிருத்தி செய்யப்படவுள்ளது, அதன் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் பலாலி விமான நிலைய விரிவாக்கம், விமான சேவைகள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
வடக்கு மாகாணத்தில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் தூதுக்குழுவினர் ஆளுநரிடம் கேட்டறிந்தனர். வடக்கு மாகாணமானது விவசாயம் மற்றும் மீன்பிடி ஆகிய துறைகளில் அதியுயர் வளங்களைக் கொண்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய ஆளுநர், அத்துறைகளில் முதலீடு செய்வதற்கான சிறந்த வாய்ப்புகள் தற்போதும் காணப்படுவதாகத் தெரிவித்தார். அத்துடன், இலங்கை முதலீட்டுச் சபையின் ஊடாக வடக்கு மாகாணத்தில் மூன்று புதிய முதலீட்டு வலயங்களை உருவாக்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளமை குறித்தும் அவர் தூதுவர்களுக்குத் தெளிவுபடுத்தினார்.
754700354_1568716991311680_3574303954992461174_n

புளியம்பொக்கனை பாலம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு

July 28, 2026

A35 பரந்தன்–முல்லைத்தீவு பிரதான வீதியின் 12ஆவது கிலோமீற்றர் பகுதியில் அமைந்துள்ள 40 மீற்றர் நீளமுடைய புளியம்பொக்கனை பாலம், புனரமைப்புப் பணிகள்

754126920_3989629514678608_5016126000290553254_n

ஊழலற்ற நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவதை வலியுறுத்தும் வகையிலான ‘நேர்மை நடைபவனி

July 28, 2026

அரச சேவையின் தரம், வினைத்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தி ஊழலற்ற நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவதை வலியுறுத்தும் வகையிலான ‘நேர்மை

759299420_1728341295963057_5986583890373510739_n

அமெரிக்க உயர்ஸ்தானிகர் காரியாலய அரசிய அதிகாரி ரேச்சல் ஹக்கின்ஸிற்கும், ரவிகரன் எம்.பிக்குமிடையில் சந்திப்பு

July 28, 2026

இலங்கைக்கான அமெரிக்க உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அரசியல் அதிகாரி ரேச்சல் ஹக்கின்ஸ் அவர்களுக்கும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுக்குமிடையில்

court-judge-hammer-gavel-696x398

SJB நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு 1½ ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

July 28, 2026

2019 ஆம் ஆண்டு பொலிஸ் அதிகாரிகளுடன் தொடர்புடைய சம்பவம் தொடர்பாக பதுளை மேல் நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பதுளை

758874719_1597010588461601_4345952432120067241_n

காணி விடுவிப்புத் தொடர்பில் மயிலிட்டி மக்களுடன் கலந்துரையாடிய சிறீதரன் எம்.பி…!

July 28, 2026

வலிகாமம் வடக்கு காணி விடுவிப்புத் தொடர்பாக, மயிலிட்டி மக்கள் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்

SAUDHI COURT

சவூதியில் இலங்கையருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை; சமூக ஊடக பதிவு தொடர்பில் தீர்ப்பு

July 28, 2026

சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவொன்றைத் தொடர்ந்து சவூதி அரேபியாவில் பணியாற்றி வந்த இலங்கையர் ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், பல

E7OQZHSI4BFLXIQ6AVSVBLR2IE

பெர்லின் பிரைட் (Berlin Pride) நிகழ்வில் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலைத் தொடர்ந்து மொன்றியல் ஃபியர்டே (Fierté Montreal) பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது

July 28, 2026

கடந்த வார இறுதியில் பெர்லின் பிரைட் நிகழ்வில் ஒரு நபர் கொல்லப்பட்டுப் பல காயமடைந்த தாக்குதலைத் தொடர்ந்து, மொன்றியல் ஃபியர்டே

IHRULYUKZJG3VPPAZFZSRKMH2M

சிறுவர்களை காரில் வைத்துக்கொண்டு அதிவேகமாக காரைச் செலுத்திய ஓட்டுநருக்கு வழக்கு பதிவு

July 28, 2026

திங்கட்கிழமை காலை 10 ஆவது வீதியில் (10th Line) மணிக்கு 50 கி.மீ வேகம் அனுமதிக்கப்பட்ட பகுதியில், மணிக்கு 93

savak

சாவகச்சேரி நகர சபையின் விசேட கூட்டம்

July 28, 2026

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் பதவியிலிருந்தும் நகர சபை உறுப்புரிமையில் இருந்தும் ஞானப்பிரகாசம் கிஷோரை நீக்கி

arjun

அர்ச்சுனா இராமநாதனுக்குப் பிணை

July 28, 2026

கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, நேற்று (27) ஒரு சட்டத்தரணி

ne

நீர்கொழும்பு சிறை கலவரம்;சந்தேக நபர்களாக நால்வர்!

July 28, 2026

அண்மையில் நடைபெற்ற நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரம் தொடர்பில் நான்கு பேர் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர். கடந்த 5ஆம் மற்றும் 6ஆம்

ner

அரச சேவையில் தேசிய நேர்மை வாரம்!

July 28, 2026

அரச சேவையில் நேர்மை, பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படைத்தன்மையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா”