பிக்கரிங் சூதாட்ட விடுதி பாதுகாப்பு அதிகாரி படுகொலை (2023): சந்தேகநபர் கைது!

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு டுர்ஹாம் பிராந்தியத்தில் (Durham Region) உள்ள சூதாட்ட விடுதி (Casino) ஒன்றில் பாதுகாப்பு அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய தேடப்பட்டு வந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக டுர்ஹாம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2023 அக்டோபர் 9 ஆம் திகதி, நெடுஞ்சாலை 401 மற்றும் புரோக் வீதிக்கு அருகில் அமைந்துள்ள ‘பிக்கரிங் கெசினோ ரிசார்ட்’ (Pickering Casino Resort) பகுதியில் வைத்து, விட்பி (Whitby) பகுதியைச் சேர்ந்த மைக்கேல் ஃபெர்டினாண்ட் (34) என்ற பாதுகாப்பு அதிகாரி […]

ஊடகவியலாளரை அச்சுறுத்திய இராணுவம்; ஜனாதிபதி தலையிட வேண்டுமெனக் கோரிக்கை

ஊடகவியலாளர் லஹிரு தொலஸ்வல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட அச்சுறுத்தல் மற்றும் சட்டவிரோதமான துன்புறுத்தல்கள் தொடர்பாக உடனடியாக தலையிடுமாறு இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அச்சங்கம் ஜனாதிபதிக்கு விடுத்திருக்கும் கோரிக்கையில் தெரிவித்துள்ளதாவது, தினசரி ஆங்கில பத்திரிகையின் இணையத்தள ஆசிரியரான லஹிரு தொலொஸ்வல ஜூலை 15 ஆம் திகதி தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் காரில் தனது இல்லம் நோக்கிச் சென்று […]

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை உடனடியாகக் கைது செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என ‘ஈஸ்டர் நீதிக்கான மக்கள் கூட்டமைப்பின்’ அழைப்பாளர் சமீர பெரேரா வலியுறுத்தியுள்ளார். உயிர்த்த ஞாயிறுத் தினத்தன்று நடத்தப்பட்ட கொடூரப் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ள உண்மைச் சதி தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்தச் சதித்திட்டம் தொடர்பாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன தீர்மானமிக்க சாட்சியங்களை வழங்கியுள்ளார் என தெரிவித்துள்ளார். […]

புதிய சட்ட விதிகள்: நச்சு இரசாயனங்களை பயன்படுத்திப் பழுக்க வைக்கப்படும் பழங்கள்

பழங்களை பழுக்க வைப்பதற்கு நச்சு இரசாயனங்களை பயன்படுத்துவதை தடுப்பதற்கான சட்ட விதிகளை அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். நச்சு இரசாயனங்களை பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுவது தொடர்பாக நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு பல முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகள் பங்கேற்புடன் நடைபெற்ற ஒரு கலந்துரையாடலின் போது அமைச்சர் வசந்த சமரசிங்க இந்த […]

நெதன்யாகு கைது செய்யப்பட மாட்டார்!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவிற்கு வருகை தரும்போது அவர் எந்த வகையிலும் கைது செய்யப்பட மாட்டார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதியளித்துள்ளார். இது தொடர்பாகத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அமெரிக்காவில் இருக்கும் வரை இஸ்ரேல் பிரதமர் எந்த வடிவத்திலும், எந்த சூழ்நிலையிலும் கைது செய்யப்பட மாட்டார் என உறுதியளித்து பதிவிட்டுள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் நியூயார்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக நெதன்யாகு அமெரிக்கா விஜயம் செய்ய […]

பெண் பிரதிநிதித்துவத்தை 33% ஆக அதிகரிக்க யோசனை?

மாகாண சபைத் தேர்தலில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட தொழில்நுட்ப அறிக்கை மாகாண சபைத் தேரர்தல்கள் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் விஜித ஹேரத்தின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய குறித்த விசேட குழுவில், பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் உள்ளிட்ட ஒன்றியத்தின் […]

பொதுச் சந்தையில் பதற்றம்

ஹட்டன் பொது சந்தை வளாகத்தில் நடைபாதையை மறித்து, அனுமதியற்ற கட்டுமானங்களை மேற்கொண்டு வியாபாரம் செய்த கடைகளை அகற்றுவதற்கு முற்பட்ட போது, ஹட்டன் டிக்கோயா நகர சபை அதிகாரிகளுக்கும் கடை உரிமையாளர்களுக்கும் இடையில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. ஹட்டன் டிக்கோயா நகர சபையின் நிர்வாகத்தின் கீழுள்ள ஹட்டன் பொது சந்தை வளாகத்தில், பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் கடைகளுக்கு வெளியே தட்டுகளை அமைத்து வியாபாரம் செய்த வர்த்தகர்களின் புதிய கட்டுமானங்களை அகற்றுவதற்கு முற்பட்ட போதே, இன்று (20) ஹட்டன் […]

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நீதி அமைச்சருக்கு கடிதம்!

உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது. இதன்மூலம், எவ்வித அடுத்தகட்ட நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு முன்னர், இந்த முன்மொழிவை முழுமையாக ஆராய்ந்து விடயப்பரப்பு சார்ந்த அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்கும் நோக்கில் பொருத்தமான குழுவொன்றை நியமிக்குமாறு அவர்கள் கோரியுள்ளனர். அரசாங்கம் கொண்டுவரத் தயாராகி வருவதாகக் கூறப்படும் உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு […]

ஸ்பெயினில் 13 வயது சிறுவன் உலகக்கோப்பை கொண்டாட்டத்தின்போது பலி

ஸ்பெயின் நாட்டின் உலகக்கோப்பை கால்பந்து வெற்றி கொண்டாட்டங்களின்போது, வடமேற்கு ஸ்பெயினின் சலமன்கா (Salamanca) மாகாணத்தில் உள்ள நீரூற்று ஒன்றின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில், 13 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இந்தச் சம்பவத்தில் மேலும் இரண்டு இளைஞர்கள் காயமடைந்தனர் என்று அவசர சேவைகள் பிரிவினர் தெரிவித்தனர். இதில் காயமடைந்த ஒரு குழந்தை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12:30 மணியளவில் (இலங்கை […]

நிதி ஆணைக்குழுவின் புதிய தலைவரும் உறுப்பினர்களும் நியமனம்

நிதி ஆணைக்குழுவின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும் என். ஆர். அனீஸ், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். அதன் ஏனைய உறுப்பினர்களாக ஜே. எம். சி. ஜே. விஜேதுங்க மற்றும் கே. கருணாகரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இன்று (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அவர்களிடம் வழங்கி வைத்தார். நிதி ஆணைக்குழு உறுப்பினர்களின் பதவிக் காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடங்களுக்காகவே இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.