முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை உடனடியாகக் கைது செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என ‘ஈஸ்டர் நீதிக்கான மக்கள் கூட்டமைப்பின்’ அழைப்பாளர் சமீர பெரேரா வலியுறுத்தியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறுத் தினத்தன்று நடத்தப்பட்ட கொடூரப் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ள உண்மைச் சதி தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சதித்திட்டம் தொடர்பாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன தீர்மானமிக்க சாட்சியங்களை வழங்கியுள்ளார் என தெரிவித்துள்ளார்.

ராஜபக்ஷ குடும்பத்தினரும் அவர்களைச் சுற்றியுள்ள குழுவினரும் பாதாள உலகக் குழுவைப் போல் செயற்பட்டு, கூலிப்படையினரைப் பயன்படுத்தி விசாரணைகளைத் திசைதிருப்ப முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலைக் பகடைக்காயாகப் பயன்படுத்தி, ‘தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்’ எனக் கூறிக்கொண்டு கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரத்தைக் கைப்பற்றினார். இது ஒரு திட்டமிடப்பட்ட அரசியல் சதியாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

பிணங்களை வைத்துக்கொண்டு அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள் யார் என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்தக் கொடூரத் தாக்குதலின் பின்னணியில் இருந்த சூத்திரதாரிகள் யார் என்பது முழு நாட்டுக்குமே இப்போது தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள பௌத்த அடையாளத்தைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு முன்னெடுக்கப்பட்ட பெருமளவிலான மோசடிகளும் குற்றங்களும் தற்போது அம்பலமாகி வருகின்றன. உண்மையான பௌத்தர்கள் இத்தகைய கொடூர அரசியலுக்கு ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

மதத் தலைவர்களைக் கூட ஏமாற்றி அதிகாரத்தைக் கைப்பற்றிய இந்த சீரழிந்த அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய அரசாங்கமும் ஜனாதிபதியும் இந்த விசாரணைகளை மேலும் தாமதிக்காமல் உடனடியாகச் செயற்பட்டு குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என சமீர பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

இதை மேலும் ஓரிரு மாதங்களுக்கு இழுத்தடிக்க வேண்டாம் எனவும் இந்த சதித்திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, மக்களுக்கு நீதியை நிலைநாட்டுங்கள் எனவு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Sajith-Premadasa-2 (1)

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும்  

October 10, 2026

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும். இச்சம்பவத்தினால் அநீதிக்குள்ளான தமிழ் சமூகத்திடம்

trum

நோபல் பரிசுக்கான அத்தனை தகுதியும் தனக்கு இருப்பதாக ட்ரம்ப் கருத்து

October 10, 2026

“அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தான் 2026-ம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசைப் பெறுவதற்கான அத்தனை தகுதிகளும் உள்ளது. ஆனால்

WhatsApp Image 2026-10-06 at 23.09.24

Majestic Asian உணவுத் திருவிழா!

October 10, 2026

Scarborough-வில் இன்று தொடக்கம் நடைபெறவுள்ள Majestic Asian Food Festival-இல் மறக்க முடியாத உணவுத் திருவிழாவில் கலந்து மகிழ்ந்து களிப்பாகக்

1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1200-675-27342147-thumbnail-16x9-anbumani

“அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? ‘அரசியலில் எதுவேணா நடக்கலாம்’” – பா.ம.க அன்புமணி ராமதாஸ் சூசகம்!

October 10, 2026

கோயம்புத்தூர்: பாமக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்

can

கனடாவைச் சேர்ந்த பாட்டி புதிய உலக சாதனை

October 10, 2026

கனடாவைச் சேர்ந்த 61 வயது வீராங்கனை டோனாஜீன் வைல்ட் (DonnaJean Wilde), அமெரிக்காவின் உடாவில் நடைபெற்ற உலக சீனியர் விளையாட்டுப்

cyb

போலி சமூக ஊடக கணக்குகள் மீது கடும் நடவடிக்கை

October 10, 2026

தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் போலியான முகநூல் (Facebook) கணக்குகளைத் தயாரித்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும்

rus

உக்ரைனின் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய அமெரிக்கா முடிவு!

October 10, 2026

அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் டீசல் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி

sau

ஹவுதி இலக்குகள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்

October 10, 2026

மெக்கா ஒப்​பந்​தத்​தின்​படி ஏமனில் உள்ள ஹவுதி இலக்​கு​களை குறி​வைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்​குதல் நடத்​தி​ய​தாக செய்​தி​கள் வெளியாகி உள்​ளன.

bud_AU

மெல்பேர்ண் விஹாரையில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; இலங்கைப் பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் சிறை

October 10, 2026

மெல்பேர்ண் நகரில் உள்ள பௌத்த விஹாரை ஒன்றில் 6 இளம் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை இழைத்த குற்றத்திற்காக, இலங்கையைச் சேர்ந்த

is

இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் அரசின் வீரதீர விருது

October 10, 2026

விமான கடத்​தலை தடுத்த இந்திய பைலட் ஸ்மித் மச்​சா​ருக்கு உலகம் முழு​வ​தி​லும் இருந்து பாராட்​டுக்​கள் குவிந்து வரு​கின்​றன. இந்​நிலை​யில் இஸ்ரேல்