வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டு சிறையிலிடப்படும் ஆபத்தில் இலங்கை இராணுவ வீரர்கள்:இணைந்த எதிர்க்கட்சி

மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தால் (OHCHR) நிறுவப்பட்ட விசாரணை பொறிமுறையின் காரணமாக, உலகளாவிய அதிகார வரம்பு (universal jurisdiction) என்ற கோட்பாட்டின் அடிப்படையில், இலங்கையின் இராணுவத் தலைவர்கள் வெளிநாடுகளின் தேசிய நீதிமன்றங்களால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படும் ஆபத்து நிலவுவதாக இணைந்த எதிர்க்கட்சி (Joint Opposition) எச்சரித்துள்ளது. வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அதன் அழைப்பாளர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், இந்த சிறப்பு விசாரணை அமைப்பின் அதிகாரிகள் பல நாடுகளுக்கு விஜயம் செய்து இலங்கையின் இராணுவத் […]
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 15 வருடங்கள் விளக்கமறியலில் இருந்தவருக்கு பிணை – மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சுமார் 15 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நபரொருவருக்கு பிணை வழங்கி மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முறையான வழக்கு விசாரணைகள் எதுவுமின்றி இவ்வாறு நீண்ட காலம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தமையானது, அவரை பிணையில் விடுவிப்பதுக்கு போதுமான விசேட சூழ்நிலை காணப்படுவதாக தெரிவித்து நீதிமன்றம் இதன்போது தீர்ப்பளித்துள்ளது. குறித்த பிரதிவாதி பிணை மனுவைத் தாக்கல் செய்யும் போது சுமார் 15 வருட காலம் சிறை வைக்கப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், அவர் கைது செய்யப்படும் […]
பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்வது தொடர்பாக ஆராயும் நிபுணர் குழுவின் பணிகள் தீவிரம் – ஹர்சன நாணயக்கார

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கான பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சட்டம் இரத்துச் செய்வதற்கான சட்டமூலம் வெகுவிரைவில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்ற அமர்வின்போது வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின்போது ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக வளமான […]
பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்வது தொடர்பாக ஆராயும் நிபுணர் குழுவின் பணிகள் தீவிரம் – ஹர்சன நாணயக்கார

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கான பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சட்டம் இரத்துச் செய்வதற்கான சட்டமூலம் வெகுவிரைவில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்ற அமர்வின்போது வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின்போது ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக வளமான […]
மின் இணைப்புக்கு பணம் செலுத்தி பல மாதங்களாகிவிட்டன ; இதுவரை இணைப்புக்கள் வழங்கப்படவில்லை ; கிளிநொச்சி மக்கள் குற்றச்சாட்டு!

கிளிநொச்சியில் புதிய மின் இணைப்பைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கை மின் விநியோக சேவைகள் நிலையத்தில் கட்டணம் செலுத்தி பல மாதங்கள் கடந்த நிலையிலும், இதுவரை மின் இணைப்புக்கள் வழங்கப்படவில்லை எனப் பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். அவசரத் தேவைகளுக்காக மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு, இணைப்புக்கட்டணமாக 42,000 ரூபாய் செலுத்தியும் தமக்கு இன்னும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை எனப் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். கட்டணத்தைச் செலுத்திய பின்னர், இது குறித்து அறிவதற்காகப் பல தடவைகள் இலங்கை மின் விநியோக சேவைகள் நிலையத்திற்கு […]
நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று சபாநாயகரிடம் கையளிக்கப்பபடவுள்ளது

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (21) செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சியினால் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது. நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை சம்வத்தை தடுக்க தவறியதால், அவர் தனது பாெறுப்பை சரிவர நிறைவேற்ற தவறியை ஏற்றுக்கொண்டு பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சியினர் தொடர்ந்து வலியுத்தி வந்தனர். என்றாலும் நீதி அமைச்சர் பதவி விலகாத நிலையில் அவருக்கு நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவர எதிர்க்கட்சிகள் தீர்மானித்து, கடந்தவாரம் அதுதொடர்பான பிரேரணையில் கைச்சாத்திட்டிருந்தனர். இந்நிலையில் இன்றைய தினம் […]
செம்மணியில் கால்கள் மடித்து அமர்ந்திருக்கும் எலும்புக்கூடு: தனியாக ஆய்வு?

செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியில் கால்கள் மடித்து செங்குத்தாக அமர்ந்திருந்த நிலையில் அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதி தொடர்பில் யாழ்.பல்கலைக்கழக இந்துக் கற்கைகள் பீட பீடாதிபதியுடன் கலந்துரையாடி, பேராசிரியர் ராஜ்சோமதேவாவின் அபிப்பிராயங்களை கேட்ட பின் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையர்களுக்கான சுற்றுலா வீசா இடைநிறுத்தம்

இலங்கை பிரஜைகளுக்கான சுற்றுலா வீசா விண்ணப்பங்களை ஏற்பதை தாய்வான் அரசாங்கம் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தியுள்ளது. தாய்வான் வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள புதிய வீசா கொள்கை அறிவிப்பின்படி இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா வீசாக்கள் நிறுத்தப்பட்டுள்ள போதிலும், இலங்கைப் பிரஜைகள் பின்வரும் குறிப்பிட்ட காரணங்களுக்காகத் தொடர்ந்து வீசாவிற்கு விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையர்களுக்கான சுற்றுலா வீசாவை உடனடியாக இடைநிறுத்திய நாடு! தாய்வான் அரசாங்க அமைப்புகளின் அதிகாரப்பூர்வ அழைப்பின் பேரில் மேற்கொள்ளப்படும் விஜயங்கள், கல்வி மற்றும் […]
ஹைவே 401 இல் கழன்று ஓடிய சக்கரம் மோதி எஸ்.யூ.வி வாகனம் விபத்து: இருவர் காயம், ஓட்டுநர் மீது வழக்கு!

ஒன்டாரியோவின் கிளாரிங்டன் (Clarington) பகுதியில் உள்ள ஹைவே 401 (Highway 401) நெடுஞ்சாலையில், வாகனம் ஒன்றிலிருந்து கழன்று ஓடிய சக்கரம் எதிரே வந்த எஸ்.யூ.வி (SUV) ரக வாகனம் மீது மோதியதில் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, மூடப்பட்டிருந்த வீதிகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. திங்கள்கிழமை காலை 11:30 மணியளவில், கிழக்கு நோக்கிச் சென்ற வாகனம் ஒன்றின் டயர் கழன்று, மேற்கு நோக்கிய பாதையில் பாய்ந்து சென்று எதிரே வந்த எஸ்.யூ.வி வாகனம் மீது மோதியது. […]
டொராண்டோ நகர்ப்புற வீட்டில் $30,000 மதிப்பிலான பொருட்கள் திருட்டு: 3 ஆண்கள், 1 பெண்ணைத் தேடும் பொலிஸார்!

டொராண்டோவின் ‘அனெக்ஸ்’ (Annex) பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து சுமார் 30,000 டொலர் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்ட சம்பவ தொடர்பாக, மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் உட்பட நான்கு சந்தேகநபர்களை டொராண்டோ பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கடந்த ஜூன் 18 ஆம் திகதி, ஸ்பாடினா அவென்யூ (Spadina Avenue) மற்றும் டுபோன்ட் வீதிக்கு (Dupont Street) அருகில் அமைந்துள்ள வீடு ஒன்றிற்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர். ஜூன் 16 முதல் ஜூன் 18 வரையிலான […]