பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 15 வருடங்கள் விளக்கமறியலில் இருந்தவருக்கு பிணை – மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சுமார் 15 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நபரொருவருக்கு பிணை வழங்கி மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முறையான வழக்கு விசாரணைகள் எதுவுமின்றி இவ்வாறு நீண்ட காலம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தமையானது, அவரை  பிணையில் விடுவிப்பதுக்கு போதுமான விசேட சூழ்நிலை காணப்படுவதாக தெரிவித்து நீதிமன்றம் இதன்போது தீர்ப்பளித்துள்ளது.

குறித்த பிரதிவாதி பிணை மனுவைத் தாக்கல் செய்யும் போது சுமார் 15 வருட காலம் சிறை வைக்கப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், அவர் கைது செய்யப்படும் போது 26 வயதுடைய இளைஞனாக இருந்தாரெனவும், வழக்கு விசாரணையை எதிர்பார்த்து அவரது இளமைக் காலத்தின் மிக முக்கியமான பகுதி சிறையிலேயே கழிக்க நேரிட்டுள்ளதெனவும் குறிப்பிட்டுள்ளது.

நீண்ட காலமாக விசாரணை செய்யப்பட்டு வரும் இந்த பயங்கரவாத வழக்கின் மூன்றாவது  பிரதிவாதியான  தம்பையா பிரகாஷ் அல்லது தனுஷ் என்பவருக்கு பிணை வழங்குவதை நிராகரித்து கொழும்பு மேல் நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவை இரத்து செய்தே மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்பானது நீதிபதிகளான பிரதீப் ஹெட்டியாரச்சி மற்றும் பி. குமாரரத்தினம் ஆகியோரடங்கிய நீதியரசர்கள்  அமர்வு  இந்த உத்தரவை  அறிவித்திருந்தது.

கடந்த 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட இந்த  பிரதிவாதிக்கு எதிராக, 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குறித்த குற்றப்பத்திரிகையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 115 குற்றச்சாட்டுகளும், அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் மேலும் 115 குற்றச்சாட்டுகள்  என மொத்தம் 230 குற்றச்சாட்டுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், வழக்கின் சாட்சியாளர்களாக 106 பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, கடுமையான நிபந்தனைகளின் கீழ்  பிரதிவாதிக்கு 200,000 ரூபா ரொக்கப் பிணை, தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான நான்கு சரீரப் பிணைகள் விதித்து பிணை வழங்கி  நீதிமன்றம் உத்தரவிட்டது.  மேலும் இரு வாரங்களுக்கு ஒருமுறை பொலிஸ் தலைமையகத்தின் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகி கையொப்பமிடுமாறும் மற்றும் பிரதிவாதியின் கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்  எனவும் பிணை நிபந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ளன. மேற்படி பிணை நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் பிணை இரத்து செய்யப்படும் எனவும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின் மூலம் நாடாளுமன்றத்தினால் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் 15 பி  பிரிவு உள்ளடக்கப்பட்டு,  விசேட நிலைமைகளின் கீழ் பிணை வழங்குவதற்கு நீதிமன்றத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ள போதிலும், மேல் நீதிமன்றம் பிணையை நிராகரித்த போது அந்தத் திருத்தத்தின் சட்டத்தின் நோக்கத்தை முழுமையாக கருத்திற் கொள்ளவில்லை என மேல்முறையீட்டு நீதிமன்றம்  இதன்போது அவதானித்துள்ளது.

பிரதிவாதி கைது செய்யப்படும் சந்தர்ப்பத்தில் அவருக்கு ஒரு வயது நிறம்பிய மகள்  இருந்ததாகவும் இந்த நீண்டகாலத் தடுப்புக்காவல் காரணமாக, அவரது குடும்பத்தினருக்கு அவரது அரவணைப்பும் பாதுகாப்பும் இல்லாது போயுள்ளதாகவும் தீர்ப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றில்  பிரதிவாதி சார்பில் சட்டத்தரணி அருண மதுசங்கவுடன் சட்டத்தரணி அஸ்திக தேவேந்திர முன்னிலையாகியிருந்ததோடு, சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் அனூபா டி சில்வா முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

nav

‘தீமையின் மீது நன்மை பெற்ற வெற்றி’ – இன்று ஆரம்பிக்கிறது நவராத்திரி விரதம்!

October 11, 2026

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விரதம் இன்று (11) தொடங்குகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் அம்பிகையை துர்க்கையாக,

ch

சீனத் தூதுவர் – விஜித ஹேரத் சந்திப்பு

October 11, 2026

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதையும், இரு நாடுகளுக்கும் இடையிலான இறப்பர் – அரிசி

sm

புகையை வெளியேற்றும் வாகனங்களை கண்டறிவதற்கு புகைப்படப் பிரிவு

October 11, 2026

அதிகளவில் புகையை வெளியேற்றும் வாகனங்களைக் கண்டறிவதற்காக, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகனப் புகை பரிசோதனைத் திட்டத்தின் கீழ் விசேட புகைப்படப்

acci main

மெட்ரோ பஸ்ஸுடன் மோதிய குற்றச்சாட்டில் பஸ் சாரதி கைது

October 11, 2026

கொழும்பு – கெஸ்பேவ வீதியில், மிரிஸ்வத்த பகுதியில் மெட்ரோ பஸ்ஸுடன் வேண்டுமென்றே மோதியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், 44 வயதுடைய

chow

சௌவின் முன்னிலையை நெருங்கும் பிரட்போர்ட்: புதிய கருத்துக்கணிப்பு

October 11, 2026

செப்டம்பர் இறுதிப் பகுதியில் வெளியிடப்பட்ட முந்தைய கருத்துக்கணிப்புடன் ஒப்பிடுகையில் சௌவின் முன்னிலை 6 புள்ளிகளிலிருந்து 2.9 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. ரொறன்ரோ

Ont

பார்வையற்ற வாக்காளருக்கு ரகசியமாக வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டது? Ontario மனித உரிமைகள் தீர்ப்பாயத்தில் விசாரணை!

October 11, 2026

வாக்களிக்கும் போது தனது வாக்கின் ரகசியத்தன்மையையும் சுயாதீனத்தையும் உறுதிசெய்யத் தவறியதன் மூலம், ‘ஒன்டாரியோ தேர்தல் ஆணையம்’ தனது மனித உரிமைகளை

Sajith-Premadasa-2 (1)

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும்  

October 10, 2026

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும். இச்சம்பவத்தினால் அநீதிக்குள்ளான தமிழ் சமூகத்திடம்

trum

நோபல் பரிசுக்கான அத்தனை தகுதியும் தனக்கு இருப்பதாக ட்ரம்ப் கருத்து

October 10, 2026

“அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தான் 2026-ம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசைப் பெறுவதற்கான அத்தனை தகுதிகளும் உள்ளது. ஆனால்

WhatsApp Image 2026-10-06 at 23.09.24

Majestic Asian உணவுத் திருவிழா!

October 10, 2026

Scarborough-வில் இன்று தொடக்கம் நடைபெறவுள்ள Majestic Asian Food Festival-இல் மறக்க முடியாத உணவுத் திருவிழாவில் கலந்து மகிழ்ந்து களிப்பாகக்

1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1200-675-27342147-thumbnail-16x9-anbumani

“அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? ‘அரசியலில் எதுவேணா நடக்கலாம்’” – பா.ம.க அன்புமணி ராமதாஸ் சூசகம்!

October 10, 2026

கோயம்புத்தூர்: பாமக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்