பிரான்சும் 15 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்குச் சமூக ஊடகங்களை பயன்படுத்தத் தடை?

15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முழுமையான தடை விதிக்கும் சட்டமூலத்தை பிரான்ஸ் பாராளுமன்றம் இன்று (21) இறுதி வாக்கெடுப்பில் நிறைவேற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், ஐரோப்பிய ஒன்றியத்தில் 15 வயதிற்குட்பட்டோருக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடைசெய்யும் முதல் நாடாக பிரான்ஸ் மாறும். பாராளுமன்றத்தின் மேலவை மற்றும் கீழவை உறுப்பினர்கள் திங்கட்கிழமை இரவு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சட்டமூலத்தின் இறுதி வடிவத்திற்கு ஒருமனதாக இணக்கம் தெரிவித்ததைத் தொடர்ந்து, இறுதி வாக்கெடுப்புக்கு வழிவகுக்கப்பட்டுள்ளது. சட்டத்தின்படி, 2026 […]

படகு விபத்து; 27 பேரின் உடல்கள் மீட்பு; காணாமல் போன 83 பேரை தேடும் பணி தீவிரம்

தென் அமெரிக்க நாடான கயானாவின் வட அத்திலாந்திக் கடற்கரைக்கு அப்பால், பயணிகள் படகு ஒன்று சனிக்கிழமை (18) இரவு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. மீட்புக் குழுவினர் இதுவரை 69 பேரை உயிருடன் மீட்டுள்ள போதிலும், மேலும் 83 பேர் நீரில் மூழ்கி மாயமாகியுள்ளனர். ஆரம்பத்தில் படகில் 133 பேர் மட்டுமே பயணித்ததாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், மீட்கப்பட்ட பலரின் பெயர்கள் உத்தியோகபூர்வப் பட்டியலில் இல்லாததால், படகில் 179 பேர் வரை […]

தோட்ட இளைஞர் தாக்கப்பட்ட குற்றச்சாட்டு ; சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவல்!

பதுளை மாவட்டத்தின் ஹாலிஎல உனுகொல்ல தோட்டத்தில், இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படும் சம்பவம் தொடர்பில் பரபரப்பு நிலவி வருகிறது. மல்வத்தவெளி பிளான்டேஷன் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் குறித்த தோட்டத்தைச் சேர்ந்த இளைஞர், கடந்த வெள்ளிக்கிழமை (17) முகாமையாளர் அலுவலகத்தில் முகாமையாளரால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுயதொழில் ஒன்றைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தில் கையொப்பம் பெறுவதற்காக அந்த அலுவலகத்துக்குச் சென்றபோதே இந்த தாக்குதல் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தைக் கண்டித்து தோட்டப் பொதுமக்கள், இளைஞர்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் தொழிற்சங்க […]

தீவக கடற்றொழிலாளர்களின் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகள் நாசம்!

தமிழக கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களால் தீவக கடற்றொழிலாளர்களின் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகள் அறுத்து நாசமாக்கப்பட்டுள்ளதாக, நெடுந்தீவு பிரதேச கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் உப தலைவர் செபமாலை அந்தோணி சிவராசா தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக கடற்றொழிலாளர்களின் இழுவைமடிப் படகுகள் எமது கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து, அனலைதீவு, எழுவைதீவு, நெடுந்தீவு, […]

பட்டினி புகார்களுக்கு மத்தியில் ஜனாதிபதியின் பிரபலத்தன்மை குறித்து நாமல் கேள்வி!

நாட்டின் பாதியளவு மக்கள் பட்டினியால் வாடுவதாகக் கூறப்படும் அறிக்கைகளுக்கு மாறாக, 75 சதவீதக் குடிமக்கள் ஜனாதிபதியை ஆதரிப்பதாகக் கூறும் கணக்கெடுப்பு முடிவுகள் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சந்தேகம் வெளியிட்டுள்ளார். “இப்போது நாட்டின் பாதியளவு மக்கள் பட்டினியால் வாடுவதாக ஒரு அறிக்கை கூறுகின்றது. ஆனால் 75 சதவீதம் பேர் ஜனாதிபதியை ஆதரிக்கின்றனர். இதில் எது உண்மை? பட்டினி தொடர்பான அறிக்கை தவறாக இருக்க வேண்டும்; ஏனெனில் மூன்று வேளை உணவு […]

நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைச் சமர்ப்பித்தது எதிர்க்கட்சி!

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு (Harshana Nanayakkara) எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை, எதிர்க்கட்சியினர் இன்று (21) பாராளுமன்றத்தில் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்துள்ளனர். பல எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் இந்த நகர்வு முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சி, இது அமைச்சரின் பதவிக்கு எதிரான ஒரு ஒருங்கிணைந்த சவாலாகும் எனக் குறிப்பிட்டுள்ளது. கடந்த ஜூலை 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல்களில், பல சிறைச்சாலை அதிகாரிகளும் […]

உக்ரைன் சரக்கு கப்பல் மீது தாக்குதல்: 4 இந்தியர்கள் உயிரிழப்பு

உக்ரைனில் சரக்கு கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நான்கு இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என தகவல் கிடைத்துள்ளது. இதற்கு இந்திய மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி 22 ஆம் திகதி அன்று உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தது. அது முதல் இதுநாள் வரையில் ஏவுகணைகள், ட்ரோன்களை கொண்டு தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த சூழலில் சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடந்துள்ளது. இது […]

ஹெல்மெட் உற்பத்தித் தொழிற்சாலை தீயில் சிக்கி 5 பேர் பலி

ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் மண்டலத்தில் உள்ள ஹெல்மெட் உற்பத்தித் தொழிற்சாலை ஒன்றில் செவ்வாய்க்கிழமை (21) அன்று காலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கட்டுவான கைத்தொழில் தோட்டத்திற்குள் அமைந்துள்ள இத்தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான தீவிர முயற்சிகளில் தீயணைப்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் மற்றும் தீ விபத்துக்கான காரணங்கள் குறித்த மேலதிகத் தகவல்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

40 முதல் 50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று 21 வெளியிடப்பட்டுள்ள புதுபிக்கப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மொனராகலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவக்கூடும். மத்திய மலை […]

பெருமளவிலான போதைப்பொருட்கள் கைப்பற்றல்

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், அரசாங்கத்தின் ‘முழு நாடும் ஒன்றாக’ போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்திற்கு ஆதரவாக, இலங்கை கடற்படை கடல் எல்லை முழுவதும் தீவிர கண்காணிப்பு மற்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டலின் கீழ், முப்படைகள், இலங்கை பொலிஸ், விசேட அதிரடிப்படை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மற்றும் வெளிநாட்டு உளவுத்துறையினரின் தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மூலம், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளுக்கு கடும் பின்னடைவு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை […]