ஹோம் டிப்போ கடைகளை இலக்கு வைத்த சில்லறைத் திருட்டு கும்பல் பிடிபட்டது: $300,000க்கும் அதிகமான திருடப்பட்ட பொருட்கள் மீட்பு!

ஹேமில்டனில் (Hamilton) சந்தேகத்திற்கிடமான $300,000க்கும் அதிகமான மதிப்புள்ள திருடப்பட்ட சொத்துக்களை பொலிஸார் மீட்டதுடன், 2021 ஆம் ஆண்டு தயாரிப்பான ‘Ram TRX’ வாகனமொன்றைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து 32 பேர் 235 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளனர். ‘ஹோம் டிப்போ’ (Home Depot) நிறுவனத்தைக் இலக்கு வைத்து நடத்தப்பட்ட “ஒழுங்கமைக்கப்பட்ட சில்லறைத் திருட்டு” (organized retail theft) குறித்த விசாரணையைத் தொடர்ந்து 30க்கும் மேற்பட்டோர் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளதாக ஹேமில்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹோம் டிப்போ கடைகளில் திருட்டுகள் 25 சதவீதம் அதிகரித்துள்ளதை […]

பொது நிறுவனங்களுக்கான குழு (COPE) அறிக்கைகளை அரசியல் ஆயுதங்களாகப் பயன்படுத்துவதற்கு எதிராக சாணக்கியன் எச்சரிக்கை!

பாராளுமன்றக் கண்காணிப்பில் நடுநிலைமை மற்றும் வெளிப்படைத்தன்மையின் அவசியத்தை வலியுறுத்தியுள்ள மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், பொது நிறுவனங்களுக்கான பாராளுமன்றக் குழு (COPE) தன்னிச்சையாகவோ அல்லது ஓர் அரசியல் ஆயுதமாகவோ பயன்படுத்தப்படக் கூடாது என எச்சரித்துள்ளார். பொது நிறுவனங்களின் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதில் கோப் (COPE) குழு முக்கிய பங்கு வகிக்கின்ற போதிலும், சுயாதீன விசாரணைகளுக்கான அடிப்படையாகப் பயன்படுத்தப்படுவதற்குப் பதிலாக, அரசியல் ரீதியாக சிலரை இலக்கு வைப்பதற்கே அதன் அறிக்கைகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருவதாகக் கவலைகள் […]

கன்னியா வெந்நீர் ஊற்றில் நாளை புத்த விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு? –

திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கன்னியா வெந்நீர் ஊற்று, தமிழர்களுக்கும் குறிப்பாக இந்து மக்களுக்கும் மத, வரலாறு மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த இடமாகக் கருதப்படுகிறது. இப்பகுதியில் சிவன் ஆலயம், பிள்ளையார் ஆலயம் என்பன இருந்ததுடன், முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக இறுதிக்கிரியைகள் மேற்கொள்ளப்படும் புனிதத் தலமாகவும் இது நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்ததாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், பிள்ளையார் ஆலயம் அமைந்திருந்ததாகக் கூறப்படும் இடத்தில் புத்த விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நாளை நடைபெறவுள்ளதாக தகவல்கள் […]

மயிலிட்டி துறைமுகத்தில் நிறைந்துகிடக்கும் இந்திய இழுவைப்படகுகளை அகற்றுக; துறைமுகத்தை மீனவர்கள் பயன்படுத்தக்கூடிய நிலையை ஏற்படுத்துக – ரவிகரன் எம்.பி வலியுறுத்து.

யாழ்ப்பாணம் – மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தில் நிறைந்துகிடக்கும் இந்திய இழுவைப்படகுகளை உரியவகையில் அகற்றுவதுடன், குறித்த மீன்பிடித் துறைமுகத்தை மீனவர்கள் பயன்படுத்தத் தக்கவாறு நிலைமைகளை ஏற்படுத்துமாறும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் இதுதொடர்பில் கடற்றொழில் அமைச்சர் மற்றும் உரிய துறைசார்ந்த அதிகாரிகளிடமும் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளவேண்டியிருப்பதாகவும், அதன்பின்னர் இதுதொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் அனுர கருணாதிலக பதிலளித்துள்ளார். நடாளுமன்றக் […]

சுரேஷ் சலேவின் எழுத்தானை மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவினால் தாக்கல் செய்யப்பட்ட எழுத்தானை மனு மீதான விசாரணை எதிர்வரும் 27ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து தடுப்புக்காவலில் வைத்துள்ளமையை சவாலுக்குட்படுத்தி, சுரேஷ் சலேவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஹோமாகம தொழிற்சாலைத் தீ விபத்தில் ஐவர் பலி

ஹோமாகம, கட்டுவன தொழிற்பேட்டையிலுள்ள தலைக்கவசம் (helmet) தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று காலை (ஜூலை 21) ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். கட்டுவன தொழிற்பேட்டை வளாகத்தினுள் அமைந்துள்ள குறித்த தொழிற்சாலையில் திடீரெனத் தீப்பற்றியுள்ளதை அடுத்து, தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் மற்றும் தீ விபத்துக்கான காரணம் தொடர்பான மேலதிக விபரங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

பாராளுமன்றத்தில் எனது கடைசி நாட்கள்: பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா!

தனது அரசியல் எதிர்காலம் குறித்துக் குறிப்பிட்ட சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தான் தற்போது பாராளுமன்றத்தில் தனது கடைசி நாட்களைக் கழிப்பதாக இன்று தெரிவித்துள்ளார். “நான் நீண்ட காலம் பாராளுமன்றத்தில் இருக்க மாட்டேன். இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே பாராளுமன்றத்தில் இருப்பேன்,” என்று அவர் சபையில் கூறினார். என்னை பாராளுமன்றத்தில் இருந்து நீக்குமாறு நீதித்துறையைக் கோரி ஓஷால ஹேரத் தாக்கல் செய்த வழக்கு, சிங்கள மக்கள் சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர்களை விரும்பவில்லை என்ற தவறான எண்ணத்தை […]

சொத்துக்கள் தொடர்பான அறிவிப்பை திரும்பப் பெறுமாறு கோரிக்கை

சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட சொத்துக்கள் அல்லது ஆடம்பர வாழ்க்கை வாழும் நபர்கள் பற்றிய தகவல்களை வழங்குமாறு இலங்கை பொலிஸார் கடந்த ஜூலை 09 ஆம் திகதி வெளியிட்ட அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெறுமாறு ஐக்கிய தேசியக் கட்சி (UNP) கோரிக்கை விடுத்துள்ளது. முறையான வழிகாட்டுதல்கள் இன்றி வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பினால், கிராமப்புற மக்கள் கடுமையான துன்புறுத்தல்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாகும் அபாயம் காணப்படுவதாக அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. ஐக்கிய இராச்சியத்தின் சுயாதீன விசாரணை அறிக்கையில் (Report of Independent Inquiry) […]

சிறுவர் வைத்தியசாலை  விசேட அறிவித்தல்

தற்போது நிலவும் டெங்கு காய்ச்சல் பரவல் காரணமாக கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வரும் சிறுவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் பிரதீப் ரத்னசேகர தெரிவித்துள்ளார். இந்நிலையின் கீழ், குழந்தைகளுக்கு விரைவான மற்றும் திறமையான மருத்துவ சிகிச்சையை வழங்குவதற்கு பெற்றோர்கள் மற்றும் பாதுகாப்பாளர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது என பணிப்பாளர் வலியுறுத்தியுள்ளார். அதன்படி, குழந்தைகளை சிகிச்சைக்காகவோ அல்லது மருத்துவ ஆலோசனைகளுக்காகவோ வைத்தியசாலைக்கு அழைத்து வரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பின்வரும் ஆவணங்களை […]

வைத்தியசாலையில் உயிரிழந்த மகளின் மரணம் தொடர்பில் தந்தை சந்தேகம்

இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் (வயது 21) சிகிச்சை பலனின்றி வைத்தியசாலையில் உயிரிழந்தமை தொடர்பில் இளம்பெண்ணின் தந்தை, தனது மகளின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்து, இம்மரணம் குறித்து விசாரணை நடத்துமாறு சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மருத்துவத் தரப்பினரின் அலட்சியம் மகளின் மரணத்துக்கு காரணமாக இருந்திருக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். சுகாதார அமைச்சுக்கு இளம்பெண்ணின் தந்தை எழுதிய கடிதத்திலேயே இந்த விபரம் குறிப்பிடப்பட்டுள்ளது. பெண்ணின் தந்தை எழுதிய அக்கடிதத்தில் உள்ள மேலதிக […]