மயிலிட்டி துறைமுகத்தில் நிறைந்துகிடக்கும் இந்திய இழுவைப்படகுகளை அகற்றுக; துறைமுகத்தை மீனவர்கள் பயன்படுத்தக்கூடிய நிலையை ஏற்படுத்துக – ரவிகரன் எம்.பி வலியுறுத்து.

யாழ்ப்பாணம் – மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தில் நிறைந்துகிடக்கும் இந்திய இழுவைப்படகுகளை உரியவகையில் அகற்றுவதுடன், குறித்த மீன்பிடித் துறைமுகத்தை மீனவர்கள் பயன்படுத்தத் தக்கவாறு நிலைமைகளை ஏற்படுத்துமாறும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் இதுதொடர்பில் கடற்றொழில் அமைச்சர் மற்றும் உரிய துறைசார்ந்த அதிகாரிகளிடமும் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளவேண்டியிருப்பதாகவும், அதன்பின்னர் இதுதொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் அனுர கருணாதிலக பதிலளித்துள்ளார்.
நடாளுமன்றக் குழு அறையில் 21.07.2026இன்று இடம்பெற்ற துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதுதொடர்பில் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம் – மயிலிட்டி, மீன்பிடித் துறைமுகத்தை மீனவர்கள் பயன்படுத்தக்கூடியவாறு நிலமைகளை உருவாக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
குறிப்பாக 1973ஆம் ஆண்டு அப்பகுதி மீனவர்களின் கோரிக்கைக்கு அமைவாக மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் கடந்த 1990ஆம் ஆண்டு தமது சொந்த இடங்களிலிருந்து இடம்பெயரும்வரை, அப்பகுதியைச்சேர்ந்த 1000வரையான மீனவக் குடும்பங்கள் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தினைப் பயன்படுத்திவந்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் குறித்த மயிலிட்டித் துறைமுகத்தினைப் பயன்படுத்த முடியாதநிலை காணப்படுகின்றது.
இது தொடர்பில் அங்குள்ள மீனவர்கள் என்னிடம் முறையீடுசெய்ததற்கமைவாக கடந்த ஜூன் மாதம் 05ஆம் திகதி குறித்த பகுதிக்கு நேரில் சென்று நிலமைகளைப் பார்வையிட்டிருந்தேன்.
எல்லைதாண்டி அத்துமீறி இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழையும்போது பறிமுதல்செய்யப்பட்ட இந்திய இழுவைப் படகுகள் மயிலிட்டித் துறைமுகத்தில் நிறைந்து காணப்படுகின்றன.
இவ்வாறு துறைமுகத்தில் இந்திய இழுவைப்படகுகள் நிறைத்துவைக்கப்பட்டிருக்கின்ற பகுதி தவிர்ந்த மிகுதிப் பகுதியை தென்னிலங்கை மீனவர்களே பயன்படுத்திவருவதாகவும் அப்பகுதி மீனவர்கள் என்னிடம் முறையீடு செய்தனர்.
எனவே எமது தமிழ் மீனவர்களுடைய வயிற்றில் அடிக்கவேண்டாமென இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.
துறைமுகத்தின் அருகில் இருக்கும் எமது மீனவர்கள் அந்தத் துறைமுகத்தினைப் பயன்படுத்தமுடியாமல் பார்த்துக்கொண்டிருக்கும் நிலையை ஏற்படுத்தவேண்டாம். எமது மீனவர்களும் தமது அன்றாட வாழ்வாதாரத்தைப் பெற்றுக்கொள்ளவேண்டும். இதை ஒரு அடிப்படை மனித உரிமை மீறலாகவே எம்மால் பார்க்கமுடிகின்றது.
எனவே தயவுசெய்து மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தில் நிறைத்துவைக்கப்பட்டுள்ள இந்திய இழுவைப்படகுகளை உரியவகையில் அப்புறப்படுத்தி, அப்பகுதி மீனவர்கள் துறைமுகத்தினை தொழிலுக்கு பயன்படுத்தக்கூடிய நிலையை ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன் – என்றார்.
இந்நிலையில் இதன்போது துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் அனுர கருணாதிலக பதிலளிக்கையில்,
இதுதொடர்பில் கடற்றொழில் அமைச்சர் மற்றும் கடற்றொழில் நீரியல் வளங்கள் சார்ந்த அமைச்சின் துறைசார் அதிகாரிகளுடனும் கலந்துரையாடவேண்டியுள்ளது.
எனவே அவர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்ட பிற்பாடு, உரியநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென அமைச்சர் அனுர கருணாதிலக இதன்போது பதிலளித்தார்
Sajith-Premadasa-2 (1)

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும்  

October 10, 2026

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும். இச்சம்பவத்தினால் அநீதிக்குள்ளான தமிழ் சமூகத்திடம்

trum

நோபல் பரிசுக்கான அத்தனை தகுதியும் தனக்கு இருப்பதாக ட்ரம்ப் கருத்து

October 10, 2026

“அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தான் 2026-ம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசைப் பெறுவதற்கான அத்தனை தகுதிகளும் உள்ளது. ஆனால்

WhatsApp Image 2026-10-06 at 23.09.24

Majestic Asian உணவுத் திருவிழா!

October 10, 2026

Scarborough-வில் இன்று தொடக்கம் நடைபெறவுள்ள Majestic Asian Food Festival-இல் மறக்க முடியாத உணவுத் திருவிழாவில் கலந்து மகிழ்ந்து களிப்பாகக்

1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1200-675-27342147-thumbnail-16x9-anbumani

“அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? ‘அரசியலில் எதுவேணா நடக்கலாம்’” – பா.ம.க அன்புமணி ராமதாஸ் சூசகம்!

October 10, 2026

கோயம்புத்தூர்: பாமக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்

can

கனடாவைச் சேர்ந்த பாட்டி புதிய உலக சாதனை

October 10, 2026

கனடாவைச் சேர்ந்த 61 வயது வீராங்கனை டோனாஜீன் வைல்ட் (DonnaJean Wilde), அமெரிக்காவின் உடாவில் நடைபெற்ற உலக சீனியர் விளையாட்டுப்

cyb

போலி சமூக ஊடக கணக்குகள் மீது கடும் நடவடிக்கை

October 10, 2026

தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் போலியான முகநூல் (Facebook) கணக்குகளைத் தயாரித்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும்

rus

உக்ரைனின் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய அமெரிக்கா முடிவு!

October 10, 2026

அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் டீசல் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி

sau

ஹவுதி இலக்குகள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்

October 10, 2026

மெக்கா ஒப்​பந்​தத்​தின்​படி ஏமனில் உள்ள ஹவுதி இலக்​கு​களை குறி​வைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்​குதல் நடத்​தி​ய​தாக செய்​தி​கள் வெளியாகி உள்​ளன.

bud_AU

மெல்பேர்ண் விஹாரையில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; இலங்கைப் பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் சிறை

October 10, 2026

மெல்பேர்ண் நகரில் உள்ள பௌத்த விஹாரை ஒன்றில் 6 இளம் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை இழைத்த குற்றத்திற்காக, இலங்கையைச் சேர்ந்த

is

இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் அரசின் வீரதீர விருது

October 10, 2026

விமான கடத்​தலை தடுத்த இந்திய பைலட் ஸ்மித் மச்​சா​ருக்கு உலகம் முழு​வ​தி​லும் இருந்து பாராட்​டுக்​கள் குவிந்து வரு​கின்​றன. இந்​நிலை​யில் இஸ்ரேல்