வைத்தியசாலையில் உயிரிழந்த மகளின் மரணம் தொடர்பில் தந்தை சந்தேகம்

இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் (வயது 21) சிகிச்சை பலனின்றி வைத்தியசாலையில் உயிரிழந்தமை தொடர்பில் இளம்பெண்ணின் தந்தை, தனது மகளின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்து, இம்மரணம் குறித்து விசாரணை நடத்துமாறு சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மருத்துவத் தரப்பினரின் அலட்சியம் மகளின் மரணத்துக்கு காரணமாக இருந்திருக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

சுகாதார அமைச்சுக்கு இளம்பெண்ணின் தந்தை எழுதிய கடிதத்திலேயே இந்த விபரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெண்ணின் தந்தை எழுதிய அக்கடிதத்தில் உள்ள மேலதிக விடயங்களாவன,

நிமோனியாவால் பாதிக்கப்பட்ட தனது மகள், கடந்த 3ஆம் திகதி இரத்தினபுரி பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் 13வது வார்டுக்கு மாற்றப்பட்டார்.

குடும்ப உறுப்பினர்கள் பல தடவை கோரியும், மகளுக்கு சிகிச்சை அளித்த ஆலோசகர், மருத்துவ அதிகாரிகள், தாதியர் முதலியோரால் மகள் உரிய முறையில் நோய் நிலைமை குறித்து பரிசோதிக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டியுள்ள தந்தை, மகளுக்கு ஏற்பட்ட கடுமையான நெஞ்சு வலி, வாயிலிருந்து இரத்தம் வடிதல், தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு, கடும் மூச்சுத்திணறல் போன்றவற்றுக்கும் உரிய மருத்துவ நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நாளன்று அவரது ஒட்சிசன் அளவு 85 சதவீதமாகக் குறைந்ததாகவும், ஒட்சிசன் வழங்குவதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், அது குறித்து நிபுணத்துவ மருத்துவருக்கு உடனடியாகத் தெரிவிக்கப்படாமலும், அவசர சிகிச்சைக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படாமலும் இருந்ததாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மகளின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து, வார்ட்டிலேயே மகளுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னரே அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ICU) மாற்றப்பட்டு, அங்கு அவர் உயிரிழந்துள்ளார்.

மேலும், உடற்கூறாய்வு பரிசோதனை (Histopathological examination) எடுக்கப்படவிருக்கும் நிலையில், நியூமோனியாவே தற்காலிக மரணத்துக்கான காரணம் என நீதித்துறை மருத்துவ அதிகாரி தெரிவித்ததாக தந்தை கூறியுள்ளார்.

எனவே, நோயாளியின் மருத்துவக் குறிப்புகள், தாதியர் குறிப்புகள், கண்காணிப்பு அட்டவணைகள், மருந்துப் பதிவுகள் மற்றும் பரிசோதனை முடிவுகளை ஆய்வு செய்யவும், முறையான கண்காணிப்பு மற்றும் அவசர சிகிச்சை நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பதை ஆராயவும், சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மற்றும் தாதியர், ஊழியர்களிடம் வாக்குமூலம் பெறவும், ஏற்றுக்கொள்ளப்பட்ட மருத்துவத் தரநிலைகள் பராமரிக்கப்பட்டுள்ளதா என்பதைத் தீர்மானிக்கவும் ஒரு சுதந்திரமான விசாரணைக் குழுவை நியமிக்குமாறு அவர் சுகாதார அமைச்சிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

Sajith-Premadasa-2 (1)

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும்  

October 10, 2026

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும். இச்சம்பவத்தினால் அநீதிக்குள்ளான தமிழ் சமூகத்திடம்

trum

நோபல் பரிசுக்கான அத்தனை தகுதியும் தனக்கு இருப்பதாக ட்ரம்ப் கருத்து

October 10, 2026

“அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தான் 2026-ம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசைப் பெறுவதற்கான அத்தனை தகுதிகளும் உள்ளது. ஆனால்

WhatsApp Image 2026-10-06 at 23.09.24

Majestic Asian உணவுத் திருவிழா!

October 10, 2026

Scarborough-வில் இன்று தொடக்கம் நடைபெறவுள்ள Majestic Asian Food Festival-இல் மறக்க முடியாத உணவுத் திருவிழாவில் கலந்து மகிழ்ந்து களிப்பாகக்

1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1200-675-27342147-thumbnail-16x9-anbumani

“அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? ‘அரசியலில் எதுவேணா நடக்கலாம்’” – பா.ம.க அன்புமணி ராமதாஸ் சூசகம்!

October 10, 2026

கோயம்புத்தூர்: பாமக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்

can

கனடாவைச் சேர்ந்த பாட்டி புதிய உலக சாதனை

October 10, 2026

கனடாவைச் சேர்ந்த 61 வயது வீராங்கனை டோனாஜீன் வைல்ட் (DonnaJean Wilde), அமெரிக்காவின் உடாவில் நடைபெற்ற உலக சீனியர் விளையாட்டுப்

cyb

போலி சமூக ஊடக கணக்குகள் மீது கடும் நடவடிக்கை

October 10, 2026

தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் போலியான முகநூல் (Facebook) கணக்குகளைத் தயாரித்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும்

rus

உக்ரைனின் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய அமெரிக்கா முடிவு!

October 10, 2026

அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் டீசல் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி

sau

ஹவுதி இலக்குகள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்

October 10, 2026

மெக்கா ஒப்​பந்​தத்​தின்​படி ஏமனில் உள்ள ஹவுதி இலக்​கு​களை குறி​வைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்​குதல் நடத்​தி​ய​தாக செய்​தி​கள் வெளியாகி உள்​ளன.

bud_AU

மெல்பேர்ண் விஹாரையில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; இலங்கைப் பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் சிறை

October 10, 2026

மெல்பேர்ண் நகரில் உள்ள பௌத்த விஹாரை ஒன்றில் 6 இளம் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை இழைத்த குற்றத்திற்காக, இலங்கையைச் சேர்ந்த

is

இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் அரசின் வீரதீர விருது

October 10, 2026

விமான கடத்​தலை தடுத்த இந்திய பைலட் ஸ்மித் மச்​சா​ருக்கு உலகம் முழு​வ​தி​லும் இருந்து பாராட்​டுக்​கள் குவிந்து வரு​கின்​றன. இந்​நிலை​யில் இஸ்ரேல்