டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 75,321 ஆக அதிகரிப்பு!

இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 75,321 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளில் 88% பேர் டெங்கு 2 வைரஸ் வகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் கபில கண்ணங்கர கூறியுள்ளார். டெங்கு 2 வைரஸ் வகைக்கு எதிரான மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த அளவில் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டு நாட்டில் 53 டெங்கு […]

நாமல் மற்றும் மனைவி திடீர் வெளிநாட்டு பயணம்

ட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச மற்றும் அவரின் மனைவி லிமினி ராஜபக்ச இருவரும் கடந்த வாரம் திடீர் வெளிநாட்டு பயணம் ஒன்று மேற்கொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது. அவர்கள் இருவரும் கடந்த வார ஆரம்பத்தில் முதன்முதலாக மாலைதீவை சென்றடைந்துள்ளனர். அது சாதாரண ஒரு விஜயம் அல்ல, மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலிஹின் மகளின் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காகவே சென்றுள்ளனர். மாலைதீவில் அமைந்துள்ள மிக ஆடம்பரமான உல்லாச விடுதி (Resort) ஒன்றில் நடைபெற்ற இந்த […]

விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழப்பு!

தங்காலை – மாத்தறை பிரதான வீதியின் வெல்லமடம பகுதியில் நேற்று பிற்பகல் சம்பவித்த கோர விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளார். நேற்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மாத்தறையில் இருந்து தங்காலை நோக்கிச் சென்ற டிபென்டர் ஜீப் ஒன்றும், தங்காலையில் இருந்து மாத்தறை நோக்கி சென்ற லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதனால் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து இடம்பெற்ற சமயத்தில் டிபென்டர் வாகனத்தில் ஐந்து பேரும், லொறியில் சாரதி மற்றும் உதவியாளர் உள்ளிட்ட இருவர்களும் பயணம் செய்துள்ளனர். விபத்தினால் […]

சிறைச்சாலை மோதல்; உயிரிழந்த அதிகாரிகளுக்கு இழப்பீடு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக விரைவில் அமைச்சரவை பத்திரம் ஒன்று சமர்ப்பிக்கப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை அமைச்சரவை தீர்மானிக்கும் எனஅவர் குறிப்பிட்டுள்ளார். நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் நடத்திய வன்முறைத் தாக்குதலில் சிறைச்சாலை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த 10 அதிகாரிகள் உயிரிழந்தனர். இந்த பயங்கர மோதலின் போது […]

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் திருத்தம் ஒருகட்சி ஆட்சிக்கு வழிவகுக்கும் – சஜித் எச்சரிக்கை

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 65 லிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 63 லிருந்து 65 ஆகவும் உயர்த்தும் அரசாங்கத்தின் முன்மொழிவானது, தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் கீழ் ஒருகட்சி சர்வாதிகார கட்டளை ஆட்சியை நிறுவுவதற்கான ஒரு முயற்சியாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்துள்ளார்.  பகிரங்க விரிவுரையில் உரையாற்றிய பிரேமதாச, இந்த நடவடிக்கை நீதித்துறையின் சுயாதீனத்தைப் பலவீனப்படுத்துகிறது, நீதிமன்றங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கிறது மற்றும் […]

உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் வீட்டில் கைக்குண்டுகள், வாள்கள் உட்பட பல ஆயுதங்கள் குவியலாக கண்டுபிடிப்பு

கண்டி, நத்தரன்பொத்த பகுதியில் உள்ள உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் வாடகை வீட்டில் இருந்து மூன்று கைக்குண்டுகள் மற்றும் வாள்கள் உட்பட பல்வேறு ஆயுதங்கள் குவியலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கண்டி பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் குழுவினர், குறித்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் மனைவியால் கண்டியின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு வழங்கப்பட்ட தகவலின் பேரில், குறித்த வீட்டில் சோதனை நடத்தி இந்த ஆயுதங்களை கைப்பற்றியுள்ளனர். வட மாகாண பொலிஸ் பிரிவு ஒன்றில் கடமையாற்றும் இந்த […]

ஜோர்தான் தாக்குதலுக்கு பதிலடி: ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

மெரிக்கப் படைகள் ஜோர்தானில் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரானின் துணை இராணுவப் படையான புரட்சிகர காவல் படையின் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நேற்று நடத்தியுள்ளது. ஜோர்தானில் உள்ள அமெரிக்க இராணுவ தளம் மீது சமீபத்தில் ஈரான் நடத்திய தாக்குதலில் இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். ஒருவர் காணாமல் போனதாகவும், 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அமெரிக்க ராணுவம் தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து, ஈரான் படைகள் மீது அமெரிக்கா தீவிர […]

தமிழ்ச் சமூக மையம்; முக்கிய அறிவிப்பு

தமிழர் சமூகத்தின் கனவுத் திட்டமான தமிழ்ச் சமூக மையம் தொடர்பான முக்கிய அறிவிப்பு எதிர்வரும் ஜூலை 24, 2026 (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. ரொறொன்ரோ நகரின் மேயர் Olivia Chow மற்றும் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இணைந்து, தமிழ்ச் சமூக மையக் காணி திட்டத்திற்கு டொரொண்டோ நகரின் தொடர்ச்சியான ஆதரவை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளனர். 📅 திகதி: வெள்ளிக்கிழமை, ஜூலை 24, 2026 🕟 நேரம்: மாலை 4:30 (30-45 நிமிடங்கள்) 📍 இடம்: 251 Staines Road (முன்பு […]

கப்பலை கடத்திய சோமாலிய கடற்கொள்ளையா்கள்!

தான்சானியா நாட்டுக்கு சொந்தமான வா்த்தக கப்பலை சோமாலியா கடற்கொள்ளையா்கள் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்.டி. அசானா என பெயரிடப்பட்ட அந்த எண்ணெய் கப்பல், ஏமனின் முகல்லாவில் இருந்து புறப்பட்டது. கடலில் அக்கப்பல் வந்து கொண்டிருந்தபோது, அதை ஆயுதம் தாங்கிய 7 சோமாலிய கடற்கொள்ளையா்கள், துப்பாக்கிமுனையில் கடத்திச் சென்றனா். அந்த கப்பல், புன்ட்லாந்தின் கலுலாவில் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. கப்பல் கடத்தப்படும்போது அதில் எத்தனை மாலுமிகள் இருந்தனா், அவா்கள் எந்த நாட்டைச் சோ்ந்தவா்கள், சோமாலிய […]

சமூக ஊடகங்கள் மர்ம மரணங்களுக்கு தீர்ப்பு வழங்கத் தேவையில்லை – மனோ கணேசன்

இலங்கையில் அண்மையில் நிகழ்ந்த மர்ம மரணங்களுக்கு சமூக ஊடகங்கள் தீர்ப்பு வழங்கும் இடமல்ல. பொலிஸ் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்கள விசாரணைகள் மூலமே உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.இலங்கை செய்திகள் கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.Language Resources அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், தற்போது நாட்டில் அடுத்தடுத்து இடம்பெற்று வரும் மரணங்கள் […]