வைத்தியசாலைகளில் கடும் நெருக்கடி – சமல் சஞ்சீவ

நாட்டில் நிலவிவரும் கடுமையான வைத்தியர் பற்றாக்குறை மற்றும் வைத்தியர்களுக்கான வருடாந்த இடமாற்றங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்படாமை காரணமாக, ஒட்டுமொத்த வைத்தியசாலை கட்டமைப்பிலும் பல நெருக்கடிகள் எழுந்துள்ளதாக வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை (19) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், வைத்தியர்களின் வருடாந்த இடமாற்றங்களை சுகாதார அமைச்சு விரைவாக நடைமுறைப்படுத்தும் என்று கூறப்படும் கருத்துக்களும், வெளியிடப்படும் அறிக்கைகளும் வெறும் வாய் வார்த்தைகளாகவே காணப்படுகின்றன. இதன் காரணமாகவே நாடு […]
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் மரணம் தொடர்பில் விசேட விசாரணை ஆரம்பம்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் (IGP) சி.டி. விக்கிரமரத்ன தனது வீட்டில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு விசேடவிசாரணையை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ‘தினமிண’ அரச பத்திரிகையின் செய்திப்படி, பொலிஸ் சட்ட அதிகாரி பிரியந்த வீரசூரியவின் உத்தரவின் பேரில், மேல் மாகாண தெற்குப் பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சமந்த விஜேசேகரவின் மேற்பார்வையில் இந்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த மரணம் துப்பாக்கிச் சூட்டினால் தான் […]
அதிவேகமாக பயணித்த கார் கவிழ்ந்து விபத்து

ரட்டுவ, ராவத்தவத்தை பகுதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று (19) பிற்பகல் மொரட்டுவ பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி அதிவேகமாக பயணித்த இந்த கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து வீதியின் நடுவிலிருந்த பாதுகாப்பு வேலியையும் உடைத்துக்கொண்டு, கொழும்பிலிருந்து மொரட்டுவ நோக்கி பயணிக்கும் மற்றைய மருங்குக்குள் நுழைந்து இவ்வாறு கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் காருக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதுடன், விபத்து நடந்த போது அதில் நான்கு பேர் பயணித்துள்ளனர். விபத்தில் அவர்கள் எவருக்கும் பலத்த […]
குளங்களை விரைவில் புனரமைக்க நடவடிக்கை

அரசாங்கத்தின் 1000 குளங்களை புனரமைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், மன்னார் மாவட்டத்தில் 10 குளங்களை முழுமையாகவும் விரைவாகவும் புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக நேற்று (18) பூர்வாங்க நடவடிக்கையாக, குளங்களை நேரடியாகச் சென்று பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் தலைமையிலான குழுவினர் பார்வையிட்டனர். இதன்போது பொறியியலாளர்கள், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பொறியியலாளர்கள், குளங்களைச் சேர்ந்த கமக்காரர் அமைப்புகள், பிரஜாசக்தி தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். மன்னார் மாவட்டத்தில் முதலாவதாக மன்னார் பிரதேச செயலகப் பிரிவில் இருக்கும் அலிகண்டல் குளத்தை பார்வையிட்டனர். […]
இளைஞர் ஒருவர் சங்கானையில் சடலமாக மீட்பு

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கானைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற மானிப்பாய் பொலிஸார், பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது, 1997 ஆம் ஆண்டு பிறந்த இளைஞர் ஒருவரின் சடலத்தை மீட்டுள்ளனர். உயிரிழந்தவரின் சடலம் மேலதிக விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா […]
இந்த வருடம் இதுவரை 18 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள்

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 18 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிவித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் பிலியந்தலை மற்றும் தெஹிவளை பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற 2 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடனேயே இந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இவ்வாறு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் மொத்தமாக 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், 10 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
திசைகாட்டி அரசாங்கம் ஜனநாயகத்தை அழித்து சர்வாதிகார ஆட்சியை உருவாக்க முனைகிறது

திசைகாட்டி அரசாங்கம் ஜனநாயகத்தை அழித்து, சர்வாதிகார தனிக் கட்சி ஆட்சியை உருவாக்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார். ஐக்கிய சட்டத்தரணிகள் சங்கத்தினால் நேற்று (19) இலங்கை மன்றக் கல்லூரிக் கேட்போர் கூடத்தில் “ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்த பொதுமக்கள் கருத்தாடல் அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நீதித்துறை தொடர்பாக சர்வதேச ரீதியில் கட்டியெழுப்பப்பட்ட பல உடன்படிக்கைகளும் இணக்கப்பாடுகளும் காணப்படுகின்றன. […]
மஸ்க்கோகா ஏரியில் மூழ்கி 63 வயது முதியவர் உயிரிழப்பு: ஒன்ராறியோ மாகாண காவல்துறை

மஸ்க்கோகா (Muskoka) பகுதியில் படகில் இருந்து நீரில் விழுந்ததாகக் கூறப்படும் சம்பவத்தில் மார்க்கம் (Markham) பகுதியைச் சேர்ந்த 63 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். சனிக்கிழமை பிற்பகல் 4:30 மணியளவில் மஸ்க்கோகா ஏரியின் வால்கர்ஸ் பொய்ண்ட் (Walker’s Point) பகுதிக்கு அருகில், படகில் சென்ற ஒருவர் தண்ணீருக்குள் விழுந்து மீண்டும் மேலே வரவில்லை என்ற தகவலை அடுத்துத் தாங்கள் சம்பவ இடத்திற்குச் சென்றதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. ஒன்ராறியோ மாகாண காவல்துறையின் (OPP) நீருக்கடியிலான தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினர் […]
இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும் என தெரிவிக்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் […]
2-வது முறையாகவும் ஷம்பியன் ஆனது ஸ்பெயின்!

23-வது பிஃபா உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டியில் ஆர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின், 2-வது முறையாக ஷம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள மெட்லைப் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் நடப்பு சேம்பியன் ஆர்ஜென்டினாவும், முன்னாள் சேம்பியன் ஸ்பெயினும் பலப்பரீட்சை நடத்தின. 4-வது முறையாக கிண்ணத்தை வெல்லும் முனைப்பில் ஆர்ஜென்டினாவும், 2-வது முறையாக உலகக் கிண்ணத்தை கைப்பற்றும் இலக்குடன் ஸ்பெயினும் களமிறங்கின. போட்டி தொடங்கியதிலிருந்தே இரு அணிகளும் தாக்குதல் […]