மஸ்க்கோகா (Muskoka) பகுதியில் படகில் இருந்து நீரில் விழுந்ததாகக் கூறப்படும் சம்பவத்தில் மார்க்கம் (Markham) பகுதியைச் சேர்ந்த 63 வயது முதியவர் உயிரிழந்துள்ளார்.
சனிக்கிழமை பிற்பகல் 4:30 மணியளவில் மஸ்க்கோகா ஏரியின் வால்கர்ஸ் பொய்ண்ட் (Walker’s Point) பகுதிக்கு அருகில், படகில் சென்ற ஒருவர் தண்ணீருக்குள் விழுந்து மீண்டும் மேலே வரவில்லை என்ற தகவலை அடுத்துத் தாங்கள் சம்பவ இடத்திற்குச் சென்றதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
ஒன்ராறியோ மாகாண காவல்துறையின் (OPP) நீருக்கடியிலான தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினர் (Underwater Search and Recovery Unit) பின்னர் அம்மனிதரைக் கண்டெடுத்ததாகவும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தகவல்கள் ஏதேனும் தெரிந்தவர்கள் தங்களைத் தொடர்புகொள்ளுமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.