பிரித்தானியாவின் புதிய பிரதமரானார் எண்டி பர்ன்ஹம்!

பக்கிங்ஹாம் அரண்மனையில் சார்லஸ் மன்னரைச் சந்தித்ததைத் தொடர்ந்து, எண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) பிரித்தானியாவின் பிரதமராக உத்தியோகபூர்வமாகப் பதவியேற்றுக்கொண்டார். நான்கு வருடங்களுக்கும் குறைவான காலப்பகுதியில் இப்பதவியை வகிக்கும் நான்காவது நபராகவும், கடந்த ஒரு தசாப்த காலத்திற்குள் இப்பதவிக்கு வரும் ஆறாவது நபராகவும் பர்ன்ஹம் விளங்குகிறார். கடந்த வெள்ளிக்கிழமை கீர் ஸ்டார்மரிடமிருந்து (Keir Starmer) தொழிற்கட்சியின் (Labour party) தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பர்ன்ஹம், ஸ்டார்மர் அரண்மனைக்குச் சென்று மன்னரிடம் தனது இராஜினாமா கடிதத்தைக் கையளித்த சில நிமிடங்களில், […]

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வெற்றிடங்களுக்கு விண்ணப்பங் கோரல்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு விதந்துரைக்கப்படுவதற்கு ஆர்வம் உள்ள தனிநபர்களிடமிருந்து அரசியலமைப்புப் பேரவை விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள், இலங்கை பாராளுமன்றத்தின் இணையதளத்தில் “விரைவான அணுகல்” என்பதன் கீழ் ‘இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான விதந்துரைத்தல்” என்ற பெயரில் கிடைக்கப்பெறும் விண்ணப்பப் படிவத்திற்கு அமைவாகத் தயாரிக்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 2026 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் திகதி அன்றோ அல்லது அதற்கு முன்னரோ சமர்ப்பிக்கப்பட […]

மட்டு நீதிமன்ற சிறைக்கூடத்தில் கைதி உயிர் மாய்க்க முயற்சி

மட்டக்களப்பில் பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கைதியொருவர், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற சிறைக்கூட்டினுள் பிளேடால் தனது கழுத்து மற்றும் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் இன்று (20) பிற்பகல் 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. படுகாயமடைந்த அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான புகையிரத நிலையத்திற்கு முன்னாலுள்ள கடையொன்றில் 16,000 ரூபா […]

செம்மணி 38 ஆம் நாள் அகழ்வு ; 2 சிறுவர்கள் உட்பட எட்டுப் பேரின் எலும்புக் கூடுகள் அடையாளம்

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று (20) நடைபெற்றது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 38 ஆவது நாளான இன்று புதிதாக சிறுவர்கள் இருவருடைய என்புக்கூடுகள் உட்பட 08 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 06 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. நேற்று (19) அமர்ந்த நிலையில் காணப்பட்ட என்புக்கூட்டினை […]

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் இறுதிச் சடங்குகள் பூரண பொலிஸ் மரியாதையுடன்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் (C.D. Wickramaratne) பூதவுடல் பூரண பொலிஸ் மரியாதையுடனும், துப்பாக்கி வேட்டுகளுடனும் இன்று அடக்கம் செய்யப்பட்டது. சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் பங்கேற்புடன் இந்த இறுதி அஞ்சலி நிகழ்வு நடைபெற்றதுடன், இலங்கை பொலிஸ் துறை தனது முன்னாள் பொலிஸ் தலைவருக்கு அதிகாரப்பூர்வ பாரம்பரிய முறைப்படி அஞ்சலி செலுத்தியது. இலங்கை பொலிஸ் படையின் தலைவராகச் சேவையாற்றிய சிரேஷ்ட சட்ட அமலாக்க அதிகாரி ஒருவரின் வாழ்வுப் பயணம் […]

75% மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கை உள்ளவர்கள் என்ற அறிக்கை பொய் – உதய கம்மன்பில

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மீதான மக்கள் நம்பிக்கை 75 சதவீதமளவில் உயர்வடைந்துள்ளதாக வெளியாகியுள்ள அறிக்கை முற்றிலும் பொய்யானது. அறிக்கை வெளியிட்டு ஜனாதிபதி மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தும் மாற்றுக்கொள்கைக்கான கேந்திர மையம் மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்துமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்த வேண்டும். அப்போது உண்மையான பெறுபேறு வெளியாகும் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார். பிவிதுறு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் திங்கட்கிழமை (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது […]

இலங்கையில் திருமணப் பதிவுகள்: கடந்த 15 ஆண்டுகளில் 28% சரிவு

இலங்கையில் கடந்த 15 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட திருமணங்களின் எண்ணிக்கை சுமார் 28 சதவீதம் குறைந்துள்ளதாக உத்தியோகபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. அதேவேளையில், பிறப்பு விகிதமும் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதாகத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் (Department of Census and Statistics) அறிக்கையின்படி, 2010-ஆம் ஆண்டில் 200,985 ஆக இருந்த பதிவு செய்யப்பட்ட திருமணங்களின் எண்ணிக்கை, 2025-ஆம் ஆண்டில் 144,182 ஆகக் குறைந்துள்ளது. இது சுமார் 28 வீழ்ச்சியாகும். 2020-ஆம் ஆண்டிற்கு முன்னதாக, பல […]

கிழக்கு மாகாண அதிபர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக கிழக்கில் கவனயீர்ப்பு

கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாகக் கடமை நிறைவேற்று அதிபர்களாகப் பணியாற்றும் கல்வியாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகவும், அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க வலியுறுத்தியும், இன்று (20) காலை 10.00 மணியளவில் திருகோணமலை கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக அமைதியான கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது. கிழக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய ‘கிழக்கு மாகாண கடமை நிறைவேற்று அதிபர்கள் சங்க’ப் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தை வெற்றியளிக்காததைத் தொடர்ந்தே, அவர்கள் ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். முக்கிய […]

கடற்கரையில் வழக்கத்திற்கு மாறான விசித்திரமான செயல்பாடு: பரீ (Barrie) நபர் கைது

ஒண்டாரியோவின் பரீ (Barrie) நகரிலுள்ள சென்டெனியல் கடற்கரையில் (Centennial Beach) நடந்த சம்பவமொன்றைத் தொடர்ந்து, அந்நகரைச் சேர்ந்த நபர் ஒருவர் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார். சனிக்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் கடற்கரைக்கு தமக்கு அழைப்பு வந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர். ஆடைகள் எதுவுமின்றி நபர் ஒருவர் கடற்கரையில் இருப்பதாகப் பொதுமக்கள் புகார் அளித்ததாகப் பொலிஸார் குறிப்பிட்டனர். சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்த சிறிது நேரத்திலேயே, பரீ நகரைச் சேர்ந்த 43 வயதான அந்த நபரைப் பொலிஸார் கைது செய்தனர். அவர் […]

ஆக.4 இல் வைகோ நூல் வெளியீட்டு விழா; ராகுல் காந்தி வெளியிட முதல் பிரதியை பெறுகிறார் முதல்வர் விஜய்!

புது டெல்லி: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் நாடாளுமன்றப் பணிகள் மற்றும் உரைகளைத் தொகுத்து உருவாக்கப்பட்டுள்ள ‘வைகோ நாடாளுமன்றத்தில்’ நூல் வெளியீட்டு விழா வருகிற ஆகஸ்ட் 4-ஆம் தேதி புது டெல்லியில் மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது. இந்த உயர்நிலைக் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி நூலை வெளியிட, தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அதன் முதல் பிரதியைப் பெற்றுக்கொள்கிறார். தேசிய மற்றும் மாநில அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்நிகழ்ச்சியில், காங்கிரஸ் […]