ஒண்டாரியோவின் பரீ (Barrie) நகரிலுள்ள சென்டெனியல் கடற்கரையில் (Centennial Beach) நடந்த சம்பவமொன்றைத் தொடர்ந்து, அந்நகரைச் சேர்ந்த நபர் ஒருவர் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார்.
சனிக்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் கடற்கரைக்கு தமக்கு அழைப்பு வந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
ஆடைகள் எதுவுமின்றி நபர் ஒருவர் கடற்கரையில் இருப்பதாகப் பொதுமக்கள் புகார் அளித்ததாகப் பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்த சிறிது நேரத்திலேயே, பரீ நகரைச் சேர்ந்த 43 வயதான அந்த நபரைப் பொலிஸார் கைது செய்தனர்.
அவர் மீது அநாகரிகமான செயல்புரிந்தமை (indecent act) மற்றும் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்/சிறுமி முன்னிலையில் ஆபாசமாக நடந்துகொண்டமை (indecent exposure to a person under 16) ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.