அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே தீவிரமடையும் ஏவுகணை தாக்குதலினால் பெரும் பதற்றம்

அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையேயான தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் முறிந்ததை தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையேயான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று திங்கட்கிழமை தொடர்ச்சியாக ஒன்பதாவது நாளாக ஈரானிய நகரங்களைக் குறிவைத்து அமெரிக்கப் படைகள் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளன. இதற்கிடையே, உலகின் மிக முக்கிய கடல் வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையில் இரண்டு எண்ணெய் கப்பல்கள் வெடித்துச் சிதறி செயலிழந்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளதால் உலக அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் முக்கிய நகரங்களான தப்ரிஸ், சாபஹார், […]
திமுகவின் கட்டப்பா நான் – நடிகர் சத்யராஜ் பேச்சு

சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற கலைஞர் கணினி கல்வியகம் மற்றும் மகளிர் திறன் மேம்பாட்டு மையத்தின் சான்றிதழ் வழங்கும் விழாவில் நடிகர் சத்யராஜ் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்குச் சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடன் இருந்தார். விழாவில் பேசிய நடிகர் சத்யராஜ், திமுக தேர்தல் அரசியலுக்காக மட்டுமே தொடங்கப்பட்ட கட்சி அல்ல என்றும், சமூக சேவைக்காக உருவான இயக்கம் என்றும் கூறினார். கீழ் நிலையில் உள்ள மக்களை மேல்நிலைக்குக் கொண்டுவருவதே அதன் முதன்மை நோக்கம் […]
எட்டு வயது சிறுவன் எரித்த ஆசிரியரின் கார்

ஆசிரியரின் வாகனம் தீப்பிடித்து எரியக் காரணமான தீக்குச்சிகளைப் பற்ற வைத்த எட்டு வயது சிறுவனின் வயதை கருத்திற் கொண்டு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை என சர் ஜொன் கொத்தலாவல கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது, சிறுவன் மீது எந்தவிதக் குற்றச்சாட்டுகளோ அல்லது அழுத்தமோ கொடுக்கப்படாது என வலியுறுத்தியுள்ளதுடன், பாடசாலை அதிகாரிகள் முறையற்ற செல்வாக்கைப் பிரயோகித்ததாக சமூக ஊடகங்களில் கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் நிராகரித்துள்ளது. […]
உலக சந்தையில் உச்சம்தொட்ட எண்ணெய் விலை

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளன. அதன்படி ஆசிய சந்தையில் வர்த்தக நடவடிக்கையின் ஆரம்பத்தில் இன்று (20) மசகு எண்ணெய் விலை 3 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது. அதன்படி, ஒரு பேரல் WTI கச்சா எண்ணெயின் விலை 2.39% அதிகரித்து, தற்போது 84.46 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. இதற்கமைய, ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 2.75 அமெரிக்க டொலர் அதிகரித்து 90.85 […]
குட்டிமணி மற்றும் தங்கதுரை உருவச்சிலை திறப்பு விழா – வல்வெட்டித்துறை பொலிஸ் விசாரணை

ட்டிமணி, தங்கதுரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழா தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் தங்கதுரை மற்றும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் செயலதிபர் குட்டிமணி ஆகியோரின் உருவச்சிலை எதிர்வரும் 25ஆம் திகதி வல்வெட்டித்துறையில் திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏற்பாட்டு குழுவின் சார்பில் வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் உறுப்பினர் சதீஸ் வல்வெட்டித்துறை பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். வெலிக்கடை சிறை கலவரத்தின் போது குட்டிமணி […]
யாழில் உதவிப்பொலிஸ் அத்தியட்சகர்ல் வீட்டி வாள் – குண்டு
யாழில் கடமை புரியும் உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரது வீட்டில் இருந்து வாள் மற்றும் குண்டு என்பன மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் அழைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த அதிகாரியின் கண்டி பகுதியில் உள்ள வீட்டில் இருந்து வாள் மற்றும் குண்டு என்பன கண்டி மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இது குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் கண்டி மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் […]
பன்றி மூக்குடன் பிறந்த அதிசய தவளை

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டும் வாழும் அரிய வகை உயிரினமான ‘ஊதா தவளை’, அதன் கூர்மையான மூக்கு மற்றும் தடித்த உடல் அமைப்பால் ‘பன்றி முக தவளை’ என்று அழைக்கப்படுகிறது. டைனோசர்கள் காலத்திலிருந்தே பரிணாம மாற்றங்கள் இன்றி வாழ்ந்து வருவதால், இதை ‘வாழும் புதைபடிவம்’ என்று விஞ்ஞானிகள் பெருமையுடன் குறிப்பிடுகின்றனர். இதன் விசித்திர குணங்கள்: பூமிக்கடி வாழ்வு: இவை தங்கள் வாழ்நாளின் 95 சதவீதத்தை பூமிக்கு அடியில், 1.3 முதல் 3.7 மீட்டர் ஆழத்தில் கழிக்கின்றன. இனப்பெருக்க […]
22 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

கந்தளாய் பாடசாலை ஒன்றில் சிறுவன் ஒருவன் வீட்டிலிருந்து கொண்டுசென்ற விதை போன்ற உணவை பகிர்ந்து சாப்பிட்டதில், 22 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று (20) காலை இடம்பெற்றுள்ளது. கந்தளாய் பாடசாலை ஒன்றில் தரம் 6இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் வீட்டிலிருந்து கொண்டுசென்ற விதை போன்ற உணவை சக மாணவர்களுடன் பகிர்ந்து உண்டுள்ளார். அதன்பின்னர் அந்த உணவை உண்கொண்ட அனைவரும் உணவு ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 20 ஆண் பிள்ளைகளும், […]
சட்டவிரோதமாக மணல் அகழ்வு: ஐவர் கைது
தர்மபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் அனுமதிப்பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட 4 டிப்பர் வண்டிகளுடன் ஐவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கைது நடவடிக்கையானது நேற்றைய தினம்(19.07.2026) இடம்பெற்றுள்ளது. சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபடுவதாக பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றை அடுத்து திருகோணமலை பொலிஸார் விசேட சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டுள்ளனர். இதன்போது சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த 4 டிப்பர் வண்டிகளும் ஒரு உளவு இயந்திரமும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் 5 […]
வறுமையின் சுமையை மக்கள் சுமக்க நிர்பந்திக்கப்படுகிறார்கள்: சம்பிக்க

அரசாங்கம் வளமான நாட்டை உருவாக்கும் தொலைநோக்கு பார்வையை வைத்திருந்தபோதிலும், மக்கள் வறுமையின் சுமையைச் சுமக்க நிர்பந்திக்கப்படுவதாக ஐக்கிய குடியரசு முன்னணியின் (URF) தலைவர் சம்பிக்க ரணவக தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு உரையாற்றிய ரணவக, அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மக்களின் வாழ்க்கையை மேலும் மேலும் கடினமாக்கியுள்ளதாகக் கூறி, அத்தியாவசியப் பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள அனைத்து வரிகளையும் தளர்த்தி அரசாங்கம் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். “மக்கள் மிகவும் கடினமான சூழ்நிலைகளில் வாழ்ந்து வருகிறார்கள். அரசாங்கம் வளமான […]