நஷ்டஈடு கொடுக்கச் சென்றவர் வெட்டிக்கொலை

பயிர்களை கால்நடை நாசம் செய்த விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அஹுங்கம பகுதியில் இடம்பெற்றுள்ளது. தன்னுடைய கால்நடைகள், மற்றொருவரது பயறு தோட்டத்தை சேதப்படுத்தியதற்காக, அவருக்கு நஷ்டஈடு வழங்குவதற்காக பாதிக்கப்பட்டவர் சந்தேகநபர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, அது கைகலப்பாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தின்போது, சம்பந்தப்பட்ட சந்தேகநபரும் அவரது சகோதரரும் இணைந்து, நஷ்டஈடு வழங்கச் சென்றவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை […]
அனுமதியின்றி அமைக்கப்பட்ட `பியர் 1947 திருகோணமலை’ அகற்றம்

திருகோணமலை உள்துறைமுக வீதியில் அமைந்துள்ள, இலங்கைத் துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான பழைய இறங்குதுறையில், கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் சட்டரீதியான அனுமதியின்றி அமைக்கப்பட்ட கட்டுமானங்கள் திங்கட்கிழமை (20) காலை இடித்து அகற்றப்பட்டன. “பியர் 1947 திருகோணமலை” (Pier 1947 Trincomalee) என்ற பெயரில், 2024-ஆம் ஆண்டு அப்போதைய கிழக்கு மாகாண ஆளுநரின் அனுமதியுடன் தனியார் ஒருவரால் இந்தக் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டது. கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போதே, கரையோரப் பாதுகாப்பு திணைக்களம் தலையிட்டு, பணிகளை […]
வன்னியர் சங்கத்தின் 47-ம் ஆண்டு: ‘சமூகநீதியை வென்றெடுக்க உறுதியேற்போம்’ – அன்புமணி ராமதாஸ்

சென்னை: வன்னியர் சங்கத்தின் 47-வது தொடக்க நாளை முன்னிட்டு பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள சிறப்பு அறிக்கையில், சமூகநீதிக்காகத் தொடர்ந்து போராட வேண்டும் எனத் தன் கட்சித் தொண்டர்களையும் பொதுமக்களையும் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் பின்தங்கிய, மிகவும் பின்தங்கிய மற்றும் விளிம்புநிலை சமூகங்களுக்கு முழுமையான சமூகநீதியை வழங்கும் நோக்கில் 46 ஆண்டுகளுக்கு முன்பு டாக்டர் அய்யா அவர்களால் தொடங்கப்பட்ட வன்னியர் சங்கம், தமிழ்நாட்டின் வரலாற்றில் மறக்க முடியாத திருப்பத்தை ஏற்படுத்தியதாக அவர் புகழாரம் சூட்டினார். […]
மருத்துவ நடைமுறைகள் மூலம் மாற்றிக்கொள்வதற்கான பாலின அடையாள சுற்றறிக்கை: மனு தள்ளுபடி
பாலின அடையாளத்தை மருத்துவ நடைமுறைகள் மூலம் மாற்றிக்கொள்வதற்கு அனுமதியளிக்கும் அரசாங்க சுற்றறிக்கைகளின் சட்டபூர்வத்தன்மையைச் சவால் செய்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை, உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. இலங்கை விமானப்படையின் முன்னாள் வீரரான சாந்த ஜயதிலகவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க மற்றும் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட பலர் இந்த மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தனர். தலைமை நீதியரசர் பிரீத்தி பத்மன் சுரசேன […]
வடக்கு ஒன்டாரியோவில் சுமார் 200 காட்டுத் தீச் சம்பவங்கள்!

டக்கு ஒன்டாரியோ (Northern Ontario) முழுவதும் தற்போது சுமார் 200 காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன, அவற்றில் 57 கட்டுப்பாட்டை மீறி எரிந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுக்கிறது. இவற்றில் பெரும்பாலான தீ வடமேற்குப் பிராந்தியத்திலேயே எரிந்து கொண்டிருக்கின்றன. அதிகரித்து வரும் காட்டுத்தீயின் தாக்கம் மற்றும் மோசமடைந்து வரும் புகையின் நிலைமை எதிர்காலத்திலும் தொடரக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ள நிலையில், வடக்கு ஒன்டாரியோ சமூகங்கள் மேலும் மக்களை வெளியேற்றுவதற்குத் தயாராகி வருகின்றன. தண்டர் பே (Thunder Bay) பகுதியில் விடுதி அறைகளுக்குப் […]
தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைவு குறித்து ரவி கருணாநாயக்க கேள்வி

ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் முறையான தலைமைத்துவம் அவசியம் என தெரிவித்துள்ள புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, தமிழ் கட்சிகள் ஒன்றிணைவு குறித்து கேள்வியெழுப்பியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: அன்றாடம் வாழ்க்கைச் செலவு அதிகரித்துக் கொண்டிருந்தாலும், அது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிடுகின்றது. விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் ஒரே நேரத்தில் பாதிப்பு ஏற்படாதவாறு, அவர்களைத் திருப்திப்படுத்தும் […]
கதிர்காமம் ஸ்ரீ தெய்வானை அம்மன் ஆலய கொடியேற்றம்

புகழ்பெற்ற கதிர்காம ஆடிவேல் விழாவின் மிக முக்கியமான, முதன்மையான ஆன்மீக நிகழ்வாக பாரம்பரிய முறைப்படி இந்த கொடியேற்ற விழா இன்று 20.07.2026 காலை இடம்பெற்றது. கதிர்காமத்தில் நடைபெறும் 14 – 15 நாட்கள் கொண்ட ஆடிப் பெருவிழா, தெய்வானை அம்மன் கோயில் கொடியேற்றத்துடன்தான் உத்தியோகபூர்வமாகத் தொடங்குகிறது. தெய்வானை அம்மன் கதிர்காம முருகனின் மூத்த தேவியாகக் கருதப்படுவதால், அன்னைக்கு முதல் மரியாதை செலுத்தும் விதமாக இக்கொடியேற்றம் அமைகிறது. இந்த கொடியேற்றத்தில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி செ.மோகனதாஸ் சுவாமிகளும் […]
சட்டத்தின் ஆட்சியா சாத்தானின் ஆட்சியா? – திமுக எம்எல்ஏ கைதுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதற்குத் திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முதல்வர் விஜய் குறித்துப் பொதுக்கூட்டத்தில் பேசியதாகக் கூறப்படும் புகாரின் பேரில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தவெக அரசு ஜனநாயகப் பண்புகள் அறவே இல்லாமல் செயல்படுவதாகவும், அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டும் எதிர்க்கட்சியினரைத் தொடர்ந்து வேட்டையாடி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், கைது செய்யப்பட்ட எம்எல்ஏ-வை அவரது வழக்கறிஞர்கள் மற்றும் குடும்பத்தினர் […]
மகளை பாடசாலை பேருந்தில் ஏற்றிய தாய் ஆற்றில் விழுந்து உயிரிழப்பு

மாவத்தகம பிரதேசத்தில் தனது மகளை பாடசாலை பேருந்தில் ஏற்றிவிட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்த தாய் ஒருவர் ஆற்றில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் இங்குறுவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துனுக்கேவத்தை வசிக்கும் 46 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயான ரத்நாயக்க முதியன்சேலாகே வசந்தா குமாரி திசாநாயக்க என அடையாளம் காணப்பட்டுள்ளார். மாவத்தகம நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் தனது மகளை பேருந்தில் ஏற்றுவதற்காக அவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காலையில் […]
விபத்தில் இராணுவ வீரர் பலி

த்தளம் மாவட்டம் அனமடுவ, பரமகண்ட சந்தி அருகில் இன்று காலை இடம்பெற்ற வீதி விபத்தில் இராணுவ கோப்ரல் ஒருவர் உயிரிழந்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபைக்கு (SLTB) சொந்தமான பேருந்து ஒன்று அவரது மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. SouthAsians & Diaspora உயிரிழந்தவர் அனமடுவ, உறியாவ பகுதியைச் சேர்ந்த 38 வயதான இராணுவ கோப்ரல் என அடையாளம் காணப்பட்டுள்ளார். திருகோணமலையில் இடம்பெற்ற நீண்டகால இராணுவப் பயிற்சியை நிறைவு செய்து நேற்று வீட்டிற்கு திரும்பிய அவர், […]