குதிரை பேர வழக்கில் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின்: காலை, மாலை நேரில் ஆஜராகி கையெழுத்திட உத்தரவு

சென்னை: தவெக எம்.எல்.ஏ. குதிரை பேரம் குறித்த புகாரில், தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு நடைபெற்ற இந்த விசாரணையில், மனுதாரர்கள் தினமும் காலை மற்றும் மாலை என இரு வேளைகளும் திருவல்லிக்கேணி காவல் நிலைய விசாரணை அதிகாரி முன்பு நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, செந்தில் பாலாஜி தரப்பு […]
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் முடிவைக் கைவிட வேண்டும் – சீமான்

சென்னை: கரூரில் தவெக கட்சியின் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதாக தவெக அரசு அறிவித்த முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த அறிவிப்பு முற்றிலும் அரசியல் லாப நோக்கிலானது என்றும், வரவிருக்கும் கரூர் இடைத்தேர்தலை மனதில்கொண்டே முதல்வர் விஜய் இத்தகைய வாக்குவேட்டை அரசியலில் ஈடுபடுவதாகவும் […]
ஈழத்தமிழர் அரசியல் தீர்வு மற்றும் நீதி குறித்து காத்திரமான சந்திப்பு…

இந்தியாவின் கர்நாடக மாநிலத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் வைத்தியர் இளையதம்பி சிறீநாத் ஆகியோர், கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் R. Gundu Rao அவர்களின் புதல்வனும், காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநில சட்டமன்ற உறுப்பினருமான Mr. Dinesh Gundu Rao அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்து கலந்துரையாடினர். இதன்போது, தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் தீர்வு இன்னும் எட்டப்படாத சூழலில், வடக்கு – கிழக்கு மாகாணங்களில் […]
சிறைச்சாலைக்குள் கைதிகள் படுகொலைகள்; குட்டிமணி காலம் தொட்டே தொடர்கிறது – ஜோசப் ஸ்டாலின் குற்றச்சாட்டு

சிறைச்சாலைகளுக்குள் கைதிகள் படுகொலை செய்யப்படும் கொடூரச் சம்பவங்கள், வரலாற்று ரீதியாக வெலிக்கடை சிறைச்சாலையில் குட்டிமணி படுகொலை செய்யப்பட்ட காலம் தொட்டே இன்று வரை தொடர் கதையாகி வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றச்சாட்டினார். நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக நீதி அமைச்சில் புதன்கிழமை (08) நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சிறைகைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு, ஏனைய தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன […]
நீர்கொழும்பு சிறைச்சாலை பெண் கைதிகள் வாரியப்பொல, போகம்பரைக்கு இடமாற்றம்; கைதிகள் மூவர் மரணம் தொடர்பில் பொலிஸ் விசாரணை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் மற்றும் பதற்றநிலைமைகளைத் தொடர்ந்து, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் கைதிகள் குழுவொன்று வேறு சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று புதன்கிழமை (08) இந்த கைதிகள் வாரியப்பொல மற்றும் போகம்பரை சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இந்த குழுவில் வெளிநாட்டு பெண் கைதிகள் சிலரும் அடங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் கைதிகள் சிலரும் சிறைக்கூரை மீது ஏறி போராட்டமொன்றில் ஈடுபட்டிருந்தனர். எனினும், தற்போது […]
தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய இலங்கை அரசுக்கு டொராண்டோ மனித உரிமை அமைப்பு அவசர கோரிக்கை

பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்யுமாறு இலங்கை அரசிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது. இந்த அவசர அறிக்கையை, மனித உரிமை ஆர்வலரும் அரச சித்திரவதைகளில் இருந்து உயிர்தப்பியவருமான ராய் சமதானம் வெளியிட்டுள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள சிறைச்சாலை நெருக்கடி காரணமாக, மெகசின் சிறைச்சாலை, போகம்பரை சிறைச்சாலை மற்றும் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை உள்ளிட்ட இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அவர் எச்சரித்துள்ளார். நாட்டின் சிறைச்சாலைகள் சுமார் 10,000 கைதிகளை மட்டுமே தங்க வைக்கும் […]
71 பல்கலைக்கழக மாணவர்களுக்கு டெங்கு

கொழும்பு பல்கலைக்கழகத்தில் 71 மாணவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் துணைவேந்தர் பேராசிரியர் இந்திக கருணாதிலக்க தெரிவித்துள்ளார். அவர்களில் 5 பேர் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்றுவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழில் டெங்கு கட்டுப்பாடு குறித்து விசேட கலந்துரையாடல்

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க. சிவகரன் தலைமையில் நேற்று புதன்கிழமை (08) மாவட்டசெயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய மேலதிக அரசாங்க அதிபர், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்கு கட்டுப்பாடு தொடர்பாக துரிதமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் கலந்து கலந்துரையாடுவதற்காக இக்கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆறு மாதங்களில் டெங்கு தாக்கம் 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த முதலாம் திகதியில் இருந்து 7ஆம் […]
பாராளுமன்றில்; அர்ச்சுனாவின் இருக்கையை மாற்றுங்கள் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

பாராளுமன்றில் சுயேட்சைக்குழு உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்சுனாவின் இருக்கையை மாற்றித் தருமாறு கோரி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபாநாயகரை எழுத்து மூலம் கோரியுள்ளார். இது தொடர்பில் அவர் சபாநாயகருக்கு அனுப்பிய கடிதத்தில், தாங்கள் அறிந்தவாறு, பாராளுமன்றத்தில் எனக்கு இடதுபுறத்தில் அமர்ந்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டங்களிலும் சமூக ஊடகங்களிலும் பகிரங்கமாக என்னை தொடர்ந்து அவதூறாகப் பேசியும், வன்முறை ரீதியாக அச்சுறுத்தியும், இழிவான சொற்களைப் பயன்படுத்தியும் […]
கத்தியால் அச்சுறுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம் காண டொராண்டோ பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோருகின்றனர்

கத்தியுடன் தொடர்புடைய அச்சுறுத்தல் சம்பவம் ஒன்றில் தேடப்பட்டு வரும் சந்தேக நபர் ஒருவரை அடையாளம் காண்பதற்கு டொராண்டோ பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர். கடந்த ஜூன் 20 ஆம் தேதி டான்லாண்ட்ஸ் அவென்யூ (Donlands Avenue) மற்றும் மோர்டிமர் அவென்யூ (Mortimer Avenue) பகுதியில், சந்தேக நபருக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து இச்சம்பவம் நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அங்கு சந்தேக நபர் கத்தியைக் காட்டி, அந்த ஆயுதத்தைச் சுழற்றியவாறு பாதிக்கப்பட்டவரைத் துரத்தியதுடன், அவரது செல்லப்பிராணியை […]