17 இலட்சம் இலங்கையர்கள் வௌிநாட்டு தொழில்வாய்ப்புகளில்…

தற்போது 17 இலட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளில் வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டுள்ளதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் நடைபெற்ற விவாதமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதி அமைச்சர் இதனை வெளிப்படுத்தினார். வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தொழிலாளர்கள் மூலம் கடந்த 2025 ஆம் ஆண்டில் மாத்திரம் 8.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு நாணய மாற்று வருவாயாக நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் அங்கு மேலும் குறிப்பிட்டார். தற்போதுள்ள […]
முதிரை மரப்பலகைகளை கடத்திச் சென்ற கப் ரக வாகனத்தை துரத்தி பிடித்த கிளிநொச்சி பொலிஸார் ; ஒருவர் கைது!

மாங்குளம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சட்டவிரோதமாக முதிரை மரப்பலகைகளைக் கடத்திச் சென்ற கப் ரக வாகனம் ஒன்றை, சினிமா பாணியில் பல கிலோ மீற்றர் தூரம் துரத்திச் சென்று கிளிநொச்சி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இச்சம்பவத்தின் போது வாகனத்தின் சாரதி தப்பியோடியுள்ள நிலையில், அவரது உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, மாங்குளத்திலிருந்து ஏ9 வீதியூடாக யாழ்ப்பாணம் நோக்கி முதிரை மரப்பலகைகளை ஏற்றிக்கொண்டு கப் ரக வாகனம் ஒன்று பயணித்துள்ளது. இதன்போது ஏ9 வீதியில் பயணித்தால் […]
யாழ். பல்கலையில் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: பேராசிரியர் உட்பட இருவருக்கு எதிராக போராட்டம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டு குறித்து பேராசிரியர் உள்ளிட்ட இருவருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைகளை, காலத்தை இழுத்தடிக்காமல் துரிதப்படுத்துமாறு கோரி, பல்கலைக்கழக முன்றலில் போராட்டம் நடத்தப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் இன்றைய தினம் வியாழக்கிழமை (9) காலை “பாலியல் வன்முறைகளுக்கு எதிரான மக்கள் இயக்கம்” எனும் அமைப்பின் அழைப்பில் இப்போராட்டம் இடம்பெற்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் உள்ளிட்ட இருவர் மாணவிகளை துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கினார்கள் எனும் குற்றச்சாட்டில், பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, விசாரணை […]
இந்தியர் ஒருவரும் நீர்கொழும்பு சிறை மோதலில் பலி

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் இந்தியர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக ‘த ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த சிறைச்சாலையில் கைதியாக இருந்த எஸ். உன்னிகிருஷ்ணன் என்ற 73 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து இந்திய உயர்ஸ்தானிகராலயம் அதிகாரப்பூர்வமாக எவ்வித தகவலையும் வௌியாடாத போதிலும், இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு இந்தியாவினால் அறிக்கையொன்று அனுப்பபட்டுள்ளமை தொடர்பில் தகவல் வௌியாகியுள்ளது. அவ்வாறான அறிக்கையொன்று அனுப்பப்பட்டுள்ளமையை இலங்கையின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் உறுதிபடுத்தியுள்ளதாக ‘த […]
துரோகிகளைப் பற்றி பேசாதீங்க – நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில், துரோகம் இழைத்தவர்கள் குறித்துப் பேசத் தேவையில்லை என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார். திருச்சி மாவட்ட நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், கட்சி மீண்டும் புத்துயிர் பெற்று ஆட்சிக்கு வரும் என்று உறுதியளித்தார். வரும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றியை இலக்காகக் கொண்டு தொண்டர்கள் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். கட்சித் தோல்விக்குப் பிந்தைய சூழலில், அமைப்பில் முக்கிய […]
அக்கா ஸ்தானத்தில் தான் அமைச்சர் கீர்த்தனா மாணவியுடன் பேசினார் – அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்

சென்னை: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், அமெரிக்கப் பயணம் முடிந்து சென்னை திரும்பிய நிலையில், அமைச்சர் கீர்த்தனா தொடர்பான சர்ச்சை மற்றும் கல்வித்துறை விவகாரங்கள் குறித்து விளக்கமளித்துள்ளார். கீர்த்தனா மாணவியிடம் பேசியது ஒரு அக்கா ஸ்தானத்தில் தான் என்றும், அவர் ஆய்வுப் பணியை மரபுப்படி தான் மேற்கொண்டார் என்றும் அமைச்சர் கூறினார். சீமான் எழுப்பிய தனியார் பள்ளி விவகாரங்கள் குறித்த விமர்சனத்திற்கு பதிலளித்த ராஜ்மோகன், தான் ஊழல் தடுப்பு நடவடிக்கையிலேயே ஈடுபட்டு வருவதாகவும், இதில் சம்பந்தப்பட்டிருக்கும் பெரிய […]
மனிதப் படுகொலைகளை நீர்கொழும்பு சிறையில் நிகழ்த்தியவர்களுக்கு கட்டாயம் தண்டனை உண்டு – நீதி அமைச்சர்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போது உயிரிழந்த அதிகாரிகள் மற்றும் சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்படும். விசாரணையின் மீது நம்பிக்கை வையுங்கள். இதுவொரு சாதாரண மரணம் அல்ல, இதுவொரு மனிதப் படுகொலை. தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை வழங்கப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாநாயக்கார தெரிவித்தார். பொரல்லை சிறைச்சாலை தலைமையகத்தில் புதன்கிழமை (8) உயிரிழந்த அதிகாரிகளின் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில், அங்கு வருகை தந்திருந்த போதே அமைச்சர் சிறைச்சாலை […]
முதல்வர் கரூர் செல்லக்கூடாதா? திமுகவை உச்ச நீதிமன்றம் சவுக்கால் அடித்துள்ளது – வைகோ

தூத்துக்குடி: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முதல்வர் விஜய் கரூர் செல்வதைத் தடுக்கத் தி.மு.க. தொடுத்த வழக்கு தோல்வியடைந்ததை உச்ச நீதிமன்றத்தின் சாட்டையடி என்று விமர்சித்துள்ளார். நீதிமன்றத்தை அரசியல் மைதானமாக மாற்ற தி.மு.க. முயல்வதாகவும், ஆளுநர் ஆட்சி வர வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்ப்பது அதிர்ச்சியைத் தருவதாகவும் அவர் கூறினார். தி.மு.க. பா.ஜ.க.-வை எதிர்ப்பது போல நடிப்பது போலி நாடகம் என்று குற்றம் சாட்டிய அவர், ஊழலை ஒழிப்பதில் முதல்வர் விஜய் காட்டும் உறுதிக்கு மதிமுக ஆதரவாக நிற்கும் […]
பெண் இயன்முறை சிகிச்சை நிபுணர் கொலை விவகாரம் ; சந்தேகநபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்

கண்டி, தெல்தெனியவில் கார் ஒன்றினுள் சடலமாக மீட்கப்பட்ட பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்கள் இன்று வியாழக்கிழமை (09) மீண்டும் நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவர்கள் நால்வருக்கும் விளக்கமறியல் காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர், அவரது மனைவி, குண்டசாலை பொலிஸ் பயிற்சி கல்லூரியின் பொறுப்பதிகாரி மற்றும் குண்டசாலை பிரதேச சபையின் சாரதி ஆகியோரே இவ்வாறு முன்னிலைப்படுத்தப்பட்டு அவர்களது வழக்கு இன்று […]
நீர்கொழும்பு சிறைச்சாலை அருகில் உறவுகளை தேடும் உறவினர்கள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது உறவினர்களுக்கு என்ன நடந்தது? அவர்கள் எங்கு உள்ளார்கள்? என்பதை கைதிகளின் உறவினர்கள் சிலர் இன்னும் தேடி வருகின்றனர். வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளுடைய பெயர் பட்டியல் சிறைச்சாலைக்கு வெளியே வீதியோரத்தில் உள்ள கன்டெய்னர் பெட்டி ஒன்றிலும் அங்கு இன்னும் சில இடங்களிலும் ஒட்டி வைக்கப்பட்டுள்ளது. பொலிஸாரும் கடந்த இரண்டு தினங்களாக சிறைச்சாலைக்கு முன்பாக இருந்து அந்த விபரங்களை உறவினர்களுக்கு அறிவித்தனர். இந்நிலையில் இன்ற (09) வியாழக்கிழமை கைதிகளின் உறவினர்கள் சிலர் […]