பதவியை ராஜினாமா செய்தது ஏன்? சபாநாயகரிடம் மீண்டும் விளக்கம் அளித்த 3 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்

சென்னை: அதிமுக-விலிருந்து ராஜினாமா செய்து த.வெ.க.-வில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மரகதம் குமரவேல், சத்யபாமா, மற்றும் ஜெயக்குமார் ஆகிய மூவரும், இன்று தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை நேரில் சந்தித்து விளக்கம் அளித்துள்ளனர். தங்கள் ராஜினாமா குறித்து ஏற்கனவே அவர்கள் விளக்கம் அளித்திருந்த போதிலும், அதில் சில சந்தேகங்கள் எழுந்ததால் சபாநாயகர் மீண்டும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தார். அதிமுக தரப்பில் குதிரை பேரம் நடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள […]

ஆடு, மாடு மேய்ப்பவர்களை நம்பி அரசியலில் இருப்பவன் நான்; என்னை விமர்சிக்கிறீர்களா? – திருமாவளவன் காட்டம்

சென்னை: விசிக தலைவர் திருமாவளவன், தன்னைத் தொடர்ந்து விமர்சிப்பவர்களுக்குத் தனது அதிரடி பதிலடியை வழங்கியுள்ளார். சென்னையில் நடந்த நிகழ்வில் பேசிய அவர், தான் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளை நம்பி அரசியலில் இல்லை என்றும், சாமானிய மக்களான ஆடு, மாடு மேய்க்கும் தொழிலாளர்களை நம்பியே தனது அரசியல் பயணம் அமைகிறது என்றும் உருக்கமாகத் தெரிவித்தார். தவெக-வை தான் முன்னர் ஆர்.எஸ்.எஸ்.-ன் குழந்தை என்று விமர்சித்தது குறித்துப் பலரும் கேள்வி எழுப்புகின்றனர், ஆனால் ஏன் அந்த விமர்சனத்திற்குப் பிறகு […]

திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவை கைது செய்யக்கூடாது – லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: சாலை அமைக்கும் பணியில் முறைகேடு நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், தி.மு.க. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவை ஜூலை 28-ஆம் தேதி வரை கைது செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு நடைபெற்ற விசாரணையில், முன்னாள் அமைச்சர் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அவருக்கு எதிரான லுக்-அவுட் நோட்டீஸை ரத்து செய்தது. அதே சமயம், அவர் ஜூலை 15-ஆம் தேதி விசாரணை அதிகாரி முன்பு […]

ஒன்டாரியோவில் மிரட்டிப் பணம் பறிப்பவர்கள் (Copycat Extortionists) தற்போது தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக அச்சம்

குறிவைக்கப்பட்ட, பல நேரங்களில் வன்முறையான மிரட்டிப் பணம் பறித்தல் சம்பவங்கள் மென்மேலும் பொதுவான ஒன்றாக மாறி வருவதால் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இது குறித்து ஏட்ரியன் கோப்ரியல் விவரிக்கிறார். பிராம்ப்டன், ஒன்டாரியோ (BRAMPTON, Ont.) — எல்லை கடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் குழுக்களால் (transnational organized crime syndicates) முன்னெடுக்கப்படுவதாகக் கூறப்படும் வன்முறை சார்ந்த மிரட்டிப் பணம் பறிப்பு முயற்சிகள், கடந்த சில ஆண்டுகளாக கனடா முழுவதிலும் உள்ள தெற்காசிய குடும்பங்களையும் வணிக […]

நீதித்துறையின் சுதந்திரத்தை சீர்குலைக்கும் அரசியல் சூழ்ச்சிகளை தோற்கடிப்போம் ; ஜி.எல். பீரிஸ் தலைமையில் மாநாடு

நீதித்துறையின் சுதந்திரத்தை சீர்குலைக்கும் அரசியல் சூழ்ச்சிகளை தோற்கடிப்போம் எனும் பொருளில் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான  கூட்டு எதிர்க்கட்சியினரால் கொழும்பு அமாரி நட்சத்திர விடுதியில் இன்று (09) வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறிஞர்கள் மாநாட்டில், ஜனாதிபதி சட்டத்தரணிகளான ஜெப்ரி அழகரத்தினம், மைத்திரி குணரத்ன மற்றும் எதிர்க்கட்சிகளின்  பாராளுமன்ற உறுப்பினர்கள் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் , சட்டத்தரணிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

சிறைச்சாலையில் இருந்த பெண் கைதிகளும் மாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த பெண் கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று (08) குறித்த கைதிகள் வாரியபொல மற்றும் போகம்பரை ஆகிய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு மாற்றப்பட்டவர்களில் அந்தச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பெண் கைதிகள் சிலரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் கைதிகள் சிலரும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். எவ்வாறாயினும், தற்போது அந்தப் போராட்டம் முடிவுக்குக் […]

ஈரானின் சபஹார் துறைமுகம் மீது அமெரிக்கா தாக்குதல் ; 90 இலக்குகள் குறிவைப்பு

ஈரானின் முக்கியத்துவம் வாய்ந்த தென்கிழக்கு துறைமுக நகரமான சபஹார் மீது அமெரிக்கா இன்று சரமாரியான வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவான United States Central Command, இந்த நடவடிக்கையின் போது ஈரானின் சுமார் 90 இலக்குகள் தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தக கப்பல்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்ததாகக் கூறப்படும் ஈரானின் கடல்சார் கட்டமைப்புகள் மற்றும் இராணுவ வசதிகளே தாக்குதலின் பிரதான இலக்குகளாக இருந்ததாக அமெரிக்க […]

65,000 ஐ கடந்த டெங்கு நோயாளர்கள்

நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. டெங்கு ஒழிப்பு பிரிவு இன்று (9) காலை வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இந்த விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் பதிவாகியுள்ள ஒட்டுமொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 65,034 ஆகும். ஜூலை மாதத்தின் முதல் 08 நாட்களில் மாத்திரம் 9,654 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இந்த ஆண்டில் இதுவரையில் மாவட்ட ரீதியாக பதிவாகியுள்ள நோயாளர்களின் […]

தோல் நோய்கள் நாட்டில் தீவிரமடைகின்றன!

நாட்டில் தோல் நோய்கள் தற்போது தீவிரமான சுகாதார பிரச்சினையாக மாறியுள்ளதாக தோல் வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சில நாட்களாக தோல் நோய்களுக்கான சிகிச்சைக்காக வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தோல் நோய் வைத்தியர் நயானி மதரசிங்க தெரிவித்துள்ளார். விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்றபோது இவ்வாறு தெரிவித்துள்ளார். எனவே வேகமாக பரவிவரும் தோல் நோய்கள் தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த 24 […]

சிறைச்சாலை ஆயுதங்கள் அகற்றப்பட்டதாக கூறப்பட்ட பின் துப்பாக்கிச் சூடு நடத்தியது யார்? – ஆனந்த பாலித கேள்வி

  நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் சிறைச்சாலையிலிருந்த அனைத்து ஆயுதங்களும் 5ஆம் திகதி இரவே அகற்றப்பட்டுவிட்டதாக அரசாங்கம் அறிவித்திருந்த பின்னணியில், ஜன்னல்கள் வழியாக துப்பாக்கிச் சூடு நடத்தியது யார் என்றும், அதிகாரிகள் எவ்வாறு கொல்லப்பட்டனர் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுகிறது என்று ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் இணைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (9) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 5ஆம் […]