பிஷ்னோய் கும்பலுடன் தொடர்புடைய வட அமெரிக்க குற்றவியல் குழுவின் தலைவரைப் பிடிக்க எஃப்பிஐ (FBI) $50,000 வெகுமதி அறிவிப்பு

லாரன்ஸ் பிஷ்னோய் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் குழுவின் (Lawrence Bishnoi organized crime group) வட அமெரிக்காவுக்கான செயல்பாடுகளை வழிநடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள, ‘கோல்டி ப்ரார்’ (Goldy Brar) என்று அழைக்கப்படும் சதிந்தர்ஜீத் சிங்கை கைது செய்ய வழிவகுக்கும் தகவல்களுக்கு அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ (FBI) 50,000 அமெரிக்க டாலர் வெகுமதியை அறிவித்துள்ளது. கடந்த ஜூலை 1, 2026 அன்று பிறப்பிக்கப்பட்ட அமெரிக்க கூட்டாட்சி வாரண்ட் (U.S. federal warrant), 32 வயதான இவர் மீது RICO […]
யாழில் இதுவரையில் 694 டெங்கு நோயாளர்கள் பதிவு
யாழ்ப்பாணம் மாவட்டத்தில், இந்த வருடத்தின் இன்று வரையிலான காலப்பகுதியில், டெங்கு நோயுடன் 694 நோயாளர்கள் இனங்காணப்பட்டிருப்பதுடன் எந்தவித இறப்பும் இந்த வருடம் பதிவு செய்யப்படவில்லை என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு விசேட கூட்டத்தின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த வருடமும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எந்த ஒரு இறப்புமே பதிவு செய்யப்படவில்லை. கடந்த வருடமும் இந்த வருடம் […]
அமெரிக்கா ஈரானின் முக்கிய விமான தளத்தின் மீது தாக்குதல்

தென்கிழக்கு ஈரானில் உள்ள ஈரான்ஷாஹர் விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தீயணைப்பு வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாக ஈரானிய அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. விமான நிலையத்தின் விமானப் போக்குவரத்து வசதிகள் கட்டிடம் மற்றும் வானிலை ஆய்வு நிலையம் ஆகியவற்றின் மீது எறிகணைகள் தாக்கியதில், இரண்டு கட்டமைப்புகளும் சேதமடைந்தது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அவசரக் குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்ததாகவும், ஆனால் பணியில் இருந்த தீயணைப்பு வீரர் காலித் காதேரி இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் அந்நாட்டு அதிகாரி […]
இலங்கை மத்திய வங்கி உத்தியோகபூர்வ டொலர் கையிருப்பு வீழ்ச்சி!
இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ டொலர் மற்றும் தங்க கையிருப்புச் சொத்துக்கள் கடந்த ஜூன் மாதத்தில் 6.3 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மத்திய வங்கியின் அண்மைக்கால புள்ளிவிவரங்களின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. இதற்கமைய, கடந்த மே மாதத்தில் 6,881 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியிருந்த உத்தியோகபூர்வ கையிருப்பு, ஜூன் மாத இறுதியில் 6,450 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை, 431 மில்லியன் அமெரிக்க டொலர்களால் குறைவடைந்துள்ளது. உத்தியோகபூர்வ இருப்புச் சொத்துக்களின் முக்கிய அங்கமாக விளங்கும் வெளிநாட்டு […]