பெரம்பூர் வெற்றிக்கு எதிரான வழக்கு: முதல்-அமைச்சர் விஜய்க்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்

சென்னை: முதலமைச்சர் விஜய் பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் மற்றும் வாக்காளர்கள் தொடர்ந்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தன. நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன்னிலையில் நடைபெற்ற இந்த விசாரணையில், முதலமைச்சர் விஜய் 3 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், திருச்சி கிழக்குத் தொகுதி வழக்கு, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு ஆகியோருக்கு எதிரான தேர்தல் வழக்குகளிலும் […]

6 வயது சிறுமி வன்புணர்வு குற்றவாளிக்கு 8 ஆண்டு சிறை!

கடந்த 2010 ஆம் ஆண்டு மொனராகலை பிரதேசத்தில் 6 வயது சிறுமி ஒருவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்ட நபரின் குற்றத்தீர்ப்பையும், அவருக்கு விதிக்கப்பட்ட எட்டு ஆண்டு கால கடூழிய சிறைத் தண்டனையையும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. நீதியரசர்களான பி. குமாரரட்ணம் மற்றும் பிரதீப் ஹெட்டியாராய்ச்சி ஆகிய இருவர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு, எஸ். எம். ஜயந்த என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து இந்தத் தீர்ப்பை வழங்கியது. […]

சிறையிலிருந்த ‘எங்கள் பிள்ளைகள் எங்கே’ ஓலமிடும் பெற்றோர்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற “மோதலின்” போது உயிரிழந்ததாகக் கூறப்படும் கைதி ஒருவரின் உறவினரான நந்தினி, பிபிசி சிங்கள சேவையிடம் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். “எனது மகன் உள்ளே இருக்கிறான். அவனுக்கு வலது கை இல்லை. அந்த மகனை என்னிடம் ஒப்படைக்குமாறு நான் கோருகிறேன். எனது மற்றுமொரு மகனும் உள்ளே இருக்கிறான். நேற்றைய தினம் அவர்கள் அவனை அடித்துக் கொன்றுவிட்டனர். தலையை உடைத்து, கண்களில் குச்சிகளால் குத்தி, தீயிட்டுச் சுட்டு, எனது மகனுக்குப் புதியவர்களுக்கு வழங்கப்படும் வதையை […]

சாத்தான்குளம் வழக்கு: 9 பேரின் தண்டனையை உறுதிப்படுத்த கோரிய மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

மதுரை: சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 9 பேருக்கு விதிக்கப்பட்ட இரட்டை மரண தண்டனையை உறுதிப்படுத்தக் கோரி சிபிஐ தாக்கல் செய்த மனு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் ஜெகதீஸ், சந்திரா பூர்ணிமா அமர்வு, இந்த வழக்கின் விசாரணையை வரும் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. அன்று மதியம் 2.15 மணிக்கு சிபிஐ தரப்பு முதலில் வாதங்களைத் தொடங்க வேண்டும் என்றும், அதன் பிறகு குற்றம் சாட்டப்பட்டவர்கள் வாதங்களை முன்வைக்க வேண்டும் […]

முடிக்காத பணிகளை முடித்ததாக கூறி கல்வெட்டு போட்டவர்கள்; திமுகவை சாடிய அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: அமைச்சர் செங்கோட்டையன் இன்று சென்னை அண்ணா நகரில் மேம்படுத்தப்பட்ட பூங்காவினைத் திறந்து வைத்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, நெம்மேலி கடல்நீர் சுத்திகரிப்பு திட்டக் கல்வெட்டில் மு.க. ஸ்டாலின் பெயர் நீக்கப்பட்டது குறித்த சர்ச்சைக்குப் பதிலளித்த அவர், தி.மு.க. அரசு தான் 5% பணிகள் மீதமிருக்கும் போதே கல்வெட்டு வைத்துப் பெயர் பதித்ததாகக் குற்றம் சாட்டினார். பணிகள் முழுமையாக நிறைவடையும் போது, தற்போதுள்ள அரசுதான் கல்வெட்டு வைக்கும் என்றும் இதுவே மரபு என்றும் அவர் விளக்கினார். மேலும், […]

’ஐஸ்’ போதைப்பொருளை விழுங்கிய இளைஞர் உயிரிழப்பு; பொலிஸ் நிலையத்தில் சம்பவம்!

நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இச்சம்பவத்தில் உயிரிழந்தவர், நிந்தவூர் 23, அட்டப்பளம், சகாத் கிராமத்தைச் சேர்ந்த அப்துல் வாஹிது வஜீத் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை (05) மாலை அட்டப்பளம் பகுதியில் நிந்தவூர் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது, அப்பகுதிக்கு போதைப்பொருள் விநியோகம் செய்து வந்த ‘ஜெமில்’ என்பவர் உட்பட மூவர் […]

விசேட அதிரடிப்படையின் தொப்பி, பொலிஸ் சீருடை அணிந்த நபர் நீர்கொழும்பு சிறை நுழைவாயிலில் துப்பாக்கிச் சூடு நடத்தியதன் பின்னணி என்ன? – காவிந்த ஜயவர்தன கேள்வி

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலின்போது விசேட அதிரடிப்படையின் தொப்பியை அணிந்த, பொலிஸ் சீருடை அணிந்த நபர் சிறைச்சாலையின் பிரதான நுழைவாயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதன் பிண்ணனி என்ன என ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன கேள்வி எழுப்பியுள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை (7) நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த இரண்டு நாட்களாக இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பில் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கேட்டுள்ளார். அத்துடன் அவர், நீர்கொழும்பு […]

கோட்டாபய ராஜபக்ஷவும் ஆசாத் மௌலானாவும் இருக்கும் புகைப்படங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தன்னை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைக் கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த ரிட் (Writ) மனு மீதான விசாரணை, திங்கட்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ராஜபக்ஷவும் ஆசாத் மௌலானாவும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ஆசாத் மௌலானா முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளின் அடிப்படையில், தன்னை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறி ராஜபக்ஷ […]

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் பாதாள உலக கும்பல்கள், போதைப்பொருள் தரப்பினருக்கு நேரடித் தொடர்பு – சபையில் நீதி அமைச்சர் தெரிவிப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் பாதாள உலக கும்பல்கள் மற்றும் போதைப்பொருள் விவகாரத்தில் தொடர்புடைய தரப்பினர் நேரடியாக தொடர்புபட்டுள்ளார்கள் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை (7) நடைபெற்ற பாராளுமன்ற அமர்விலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் கூறுகையில், நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பில் இன்று காலை சிறைசாலை அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டேன்.இவ்வாறான நிலை ஏனைய சிறைச்சாலைகளில் ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் பாதாள […]

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் : உயிரிழந்த 7 அதிகாரிகள் மற்றும் 19 கைதிகளுக்கு சபையில் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அஞ்சலி

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல்களில் சிக்கி உயிரிழந்த 7 சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் 19 கைதிகளுக்கு நீதி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சபையில் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து அஞ்சலி செலுத்தினார். இதன்போது, நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பில் இன்று காலை சிறைசாலை அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டேன். இவ்வாறான நிலை ஏனைய சிறைச்சாலைகளில் ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன அவர் தெரிவித்தா