நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலின்போது விசேட அதிரடிப்படையின் தொப்பியை அணிந்த, பொலிஸ் சீருடை அணிந்த நபர் சிறைச்சாலையின் பிரதான நுழைவாயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதன் பிண்ணனி என்ன என ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை (7) நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த இரண்டு நாட்களாக இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பில் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கேட்டுள்ளார்.
அத்துடன் அவர், நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவத்தின் உண்மையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளார்.