நாமல் ராஜபக்‌ஷவுக்கு எதிரான கிரிஷ் மோசடி வழக்கு நவம்பர் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (7) செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வெளிநாட்டு சாட்சிகளுக்கு அழைப்பாணைகள் அனுப்பும் நடைமுறையின்படி, இவ்வழக்கில் இரண்டு இந்திய பிரஜைகளான சாட்சிகளுக்கும் அழைப்பாணைகளை அனுப்புமாறு நீதிபதி உத்தரவிட்டார். பின்னர், இவ்வழக்கை நவம்பர் 16 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

அமைச்சு பதவிகளை ஏற்கும் சட்டரீதியான சாத்தியம் எனக்கில்லை; எனவே கோரிக்கை விடுப்பதில் பயனில்லை” – பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அறிவிப்பு!

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தமக்கு அமைச்சு பதவிகளை வழங்குமாறு கோருவதில் எந்தப் பயனும் இல்லை என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் மேலும், “இந்தத் தருணத்தில் எவ்வித அமைச்சு பதவியையோ அல்லது பிரதி அமைச்சு பதவியையோ பொறுப்பேற்பதற்கு எனக்கு சட்டரீதியான சாத்தியக்கூறுகள் இல்லை. எனவே, அமைச்சு பதவிகளைப் பொறுப்பேற்குமாறு என்னிடம் கோரிக்கை விடுப்பதிலோ அல்லது எனக்கு அமைச்சு பதவிகளை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோருவதிலோ எந்தப் பயனும் […]

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம்: உயிரிழந்தோரின் சடலங்களை தனித்தனியாகப் பிரேத பரிசோதனை செய்ய நீதிவான் உத்தரவு

நீர்கொழும்பு  சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில்  உயிரிழந்த நபர்களின்  சடலம் மீதான பிரேத பரிசோதனையை தனி தனியாக மேற்கொண்டு அவ்வறிக்கைகளை மன்றில் சமர்பிக்குமாறு   நீர்கொழும்பு வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணருக்கு நீர்கொழும்பு நீதிவான் திலினி சலனி  பெரேரா இன்று (7) செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார். சிறைச்சாலைகளில் மோதல்கள் அல்லது கைதிகளுக்கிடையில் முரண்பாடுகள் குறித்து தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கென வழிமுறையொன்று காணப்படுகிறது. ஆனால் இந்த சம்பவம் குறித்து பிரத்தியேகமாக புலனாய்வு தகவல் எதுவும் கிடைக்கவில்லை என பதில் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் பிரசாத் […]

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 30 யாழில் சர்வதேச மாநாடு ஏற்பாடு

சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் ஒன்றுசேர்ந்து யாழ்ப்பாணத்தில் சர்வதேச மாநாடு ஒன்றினை நடத்தவுள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் இன்று (7) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்தபோதே வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க பிரதிநிதிகள் இதனை தெரிவித்தனர். அவர்கள் மேலும் கூறுகையில், வடக்கு கிழக்கு உள்ளிட்ட தமிழர் தாயகப் பகுதிகளிலும், தமிழர் என்கிற அடையாளத்தோடு இலங்கைத் தீவின் […]

சிறைச்சாலையில் மோதல் : சரியான அரசியல் தலைமைத்துவம் இல்லாததாலேயே இரண்டாவது தடவையாகவும் கலவரம் ஏற்பட்டது – அஜித் பி பெரேரா

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற  சம்பவம் தொடர்பில் திங்கட்கிழமை (6) காலையிலேயே, முறையான நடவடிக்கை எடுத்திருந்தால், இரண்டாவது தடவையாகவும் அங்கு கலவரம் இடம்பெற்றிருக்காது. அதனை தடுத்திருக்க முடிந்திருக்கும். சரியான அரசியல் தலைமைத்துவம் இல்லாமல் போனமையே இரண்டாவது தடவையாகவும் அங்கு கலவரம் ஏற்பட காரணமாகும் என எதிர்க்கட்சி உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (7) இடம்பெற்ற தொல்பொருளியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து […]

இலங்கைக்குக் கடல் வழியாகக் கடத்த முயன்ற 120 பந்தயப் புறாக்கள் பறிமுதல்

இலங்கைக்குக் கடல் வழியாகச் சட்டவிரோதமாகக் கடத்த முயன்ற 120 பந்தயப் புறாக்களை, ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் வடக்கு மீன்பிடித் துறைமுகம் அருகே கியூ (Q) பிரிவுப் பொலிஸார் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டக் கடற்கரைப் பகுதிகள் இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால், மண்டபம், மரைக்காயர் பட்டினம், வேதாளை, பாம்பன், குந்துகால் மற்றும் தனுஷ்கோடி போன்ற பகுதிகளில் இருந்து மஞ்சள், கடல் அட்டை, கஞ்சா, மெத்தபெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருட்கள் […]

காலநிலை மாற்றத்தின் காரணமாக பிரான்சில் ’ஆரஞ்சு’ நிற வெப்ப எச்சரிக்கை

டர் வெப்பம் மற்றும் காலநிலை மாற்றத்தின் காரணமாக பிரான்சில் கடும் வறட்சி நிலவி வருகிறது. நடப்பாண்டின் மூன்றாவது வெப்ப அலை இந்த வாரம் பிரான்சைத் தாக்கியுள்ளது. கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட கடுமையான வெப்பத்தினால் நாடு முழுவதும் சுமார் 2,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். வெப்ப எச்சரிக்கையும் வறட்சியும்: திங்கட்கிழமை (ஜூலை 6) அன்று, பிரான்சின் 16 மாவட்டங்களில் ‘ஆரஞ்சு’ நிற வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் வெப்பநிலை 40°C வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. […]

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகளில் மாற்றம்

மின்சாரத் தொடருந்துப் பெட்டிகளின் (Power sets) பற்றாக்குறை காரணமாக, கல்கிசை மற்றும் காங்கேசன்துறை (KKS) இடையிலான தினசரி கடுகதித் தொடருந்துச் சேவை, ஜூலை 10-ஆம் திகதி முதல் வாரத்திற்கு நான்கு நாட்களாக மட்டுப்படுத்தப்படவுள்ளதாகத் தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இச் சங்கம் வெளியிட்டுள்ள தகவலின்படி, அதன் பொதுச் செயலாளர் கசுன் சமர ஜயசேகர, பின்வரும் மாற்றங்களை அறிவித்துள்ளார்: சேவை நாட்களின் மாற்றம்: கல்கிசைலிருந்து அதிகாலை 5.15-க்கும், கொழும்பு கோட்டையிலிருந்து காலை 5.45-க்கும் காங்கேசன்துறை நோக்கிப் புறப்படும் […]

தேசிய வரி வாரம் ஆரம்பம்

அரச வருமானம் ஈட்டுதலை வலுப்படுத்தல் மற்றும் நாட்டின் எதிர்கால அபிவிருத்திச் செயல்முறையை விரைவுபடுத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, ஜனாதிபதி அலுவலகத்தின் வருமான நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் நவீனமயமாக்கல் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘வரி சக்தி 2026’ தேசிய வரி வாரத்தின் ஆரம்ப நிகழ்வு, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் தலைமையில் நேற்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. வரி விதிப்பு தொடர்பாக பொதுமக்களிடையே உள்ள எதிர்மறையான எண்ணத்தை நேர்மறையான எண்ணமாக மாற்றி, நாட்டில் சுயமாக வரி செலுத்தும் […]

மட்டக்களப்பு சிறையிலும் பதற்றம்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர், தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து மட்டக்களப்பு சிறைச்சாலையிலும் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.