மதுரை:
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 9 பேருக்கு விதிக்கப்பட்ட இரட்டை மரண தண்டனையை உறுதிப்படுத்தக் கோரி சிபிஐ தாக்கல் செய்த மனு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் ஜெகதீஸ், சந்திரா பூர்ணிமா அமர்வு, இந்த வழக்கின் விசாரணையை வரும் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
அன்று மதியம் 2.15 மணிக்கு சிபிஐ தரப்பு முதலில் வாதங்களைத் தொடங்க வேண்டும் என்றும், அதன் பிறகு குற்றம் சாட்டப்பட்டவர்கள் வாதங்களை முன்வைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே இந்த வழக்கில் குற்றவாளிகள் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ள நிலையில், உயர்நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
#SathankulamCase #MaduraiHighCourt #Justice #TamilNadu #TamilNews #BMNews #LegalUpdate #BreakingNewsTN #CBI #HumanRights #Sathankulam #JayarajBennix #Law #Judiciary #LegalNews #TamilNaduPolitics #CourtVerdict #JusticeForJayarajBennix #Madurai