நெல் மூட்டைகள் சேதம்! தவெக அரசு மீது இபிஎஸ் கடும் விமர்சனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் பாடுபட்டு விளைவித்த நெல் மூட்டைகள், ஆட்சியாளர்களின் அலட்சியத்தாலும், அஜாக்கிரதையாலும் முறையாகப் பாதுகாக்கப்படாமல் மழைநீரில் நனைந்து வீணாவது தொடர்கதையாகி உள்ளது என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் நெல் மணிகள் எப்படி வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து வீணானதோ, அதேபோல் மாற்றம் கொண்டு வருவோம் என்று ஆட்சிக்கு வந்த தற்போதைய தவெக ஆட்சியிலும் எவ்வித மாற்றமும் […]
ஆளுநர் என்பவர் வெறும் மேனேஜர்தான்! அவர் தேவையில்லை! – அமைச்சர் நிர்மல் குமார்!

சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், மாணவர்களுக்கு ஆணைகளை வழங்கிவிட்டுச் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பல்கலைக்கழகங்களை நிர்வகிப்பதில் ஆளுநர்களின் தலையீடு மற்றும் அவர்களின் பணி குறித்துப் பேசிய அவர், ஆளுநர் என்பவர் ஒரு மாநிலத்திற்கு வெறும் மேனேஜர்தான் என்றும், அவர் தேவையில்லை என்பதே தங்கள் நிலைப்பாடு என்றும் வெளிப்படையாகக் கூறினார். மாநிலத்தை நிர்வகிக்கும் அரசுக்கு மட்டுமே மாணவர்களுக்கும், மக்களுக்கும் […]
மொன்றியலில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரி அடையாளம் காணப்பட்டார்; பொலிஸாருக்கு எதிரான கொள்கை பிரகடனம் (Manifesto) குறித்து எச்சரிக்கை

மொன்றியலில் திங்கள்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரி அடையாளம் காணப்பட்டுள்ளார். இதேவேளை, பொலிஸாரைக் குறிவைத்து வன்முறையைத் தூண்டும் வகையிலான “பொலிஸ் எதிர்ப்பு கொள்கை பிரகடனம்” (Anti-police manifesto) ஒன்று வலம்வரக்கூடும் என ஏனைய பாதுகாப்புப் படையினருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட அதிகாரி 34 வயதுடைய முகமது லமீன் பென்ரெடோவான் (Mohamed Lamine Benredouane) என்றும், அவர் 2021 முதல் இத்துறையில் பணியாற்றி வந்தவர் என்றும் மொன்றியல் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். கோட்-டெஸ்-நெய்ஜஸ் (Côte-des-Neiges) மாவட்டத்தில் உள்ள […]
மொன்றியலில் பொலிஸ் அதிகாரி உட்பட மூவர் சுட்டுக்கொலை: பொலிஸ் விசாரணை

மொன்றியலில் பொலிஸ் அதிகாரி, ஒரு பொதுமக்கள் மற்றும் சந்தேக நபர் என மூவர் கொல்லப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்து கியூபெக்கின் (Quebec) பொலிஸ் கண்காணிப்பகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அதேவேளை, கியூபெக் மாகாண பொலிஸார் இதற்கு இணையாக மற்றுமொரு குற்றவியல் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். கோட்-டெஸ்-நெய்ஜஸ் (Côte-des-Neiges) மாவட்டத்தில் உள்ள ஹில்டன் (Hilton) ஹோட்டல் ஒன்றில் துப்பாக்கியுடன் நபர் ஒருவர் இருப்பதாகக் கிடைத்த 911 அவசர அழைப்பிற்கு அமைய, சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு […]
கிழக்கில் சட்டவிரோத காணி அபகரிப்புகளை தடுக்க அமைச்சரவை அனுமதி

கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் சட்டவிரோத காணி அபகரிப்புகள், அங்கீகாரமற்ற நிலமீட்புகள் மற்றும் சட்டவிரோத கடற்கரை கட்டுமானங்களை கையாள்வதற்காக ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட தொடர்ச்சியான கூட்டு நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசியல் செல்வாக்கு மற்றும் ஆதரவினால் முன்னெடுக்கப்படும் இத்தகைய ஒழுங்குபடுத்தப்படாத செயற்பாடுகள், இப்பிராந்தியத்தில் கடுமையான சமூக, பொருளாதார மற்றும் நிர்வாக ரீதியிலான சவால்களுக்கு வழிவகுத்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும், அங்கீகாரமற்ற கடற்கரை கட்டுமானங்கள் கிழக்கு கடற்கரையோரத்தில் கடல் அரிப்பை தீவிரப்படுத்தி, பாதிக்கப்படக்கூடிய சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் […]
சீதா எலியவில் இந்திய யாத்திரிகள் குழு

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூர் நகரைச் சேர்ந்த கலாநிதி அகிலேஷ் குமஸ்தா தலைமையிலான 150 பேர் கொண்ட யாத்திரிகள் குழுவினர், நுவரெலியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க சீதா எலிய சீதை அம்மன் ஆலயத்தில் நேற்று வழிபாடுகளில் ஈடுபட்டனர். வருகை தந்த யாத்திரிகர்கள் ஆலயத்தில் விசேட பூஜை மற்றும் வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், ஆலய வளாகத்தில் சுந்தரகாண்ட பாராயணத்தையும் பக்தி பூர்வமாக மேற்கொண்டனர். தொடர்ந்து, ஆலயத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன், வருகை தந்த யாத்திரிகர்களுக்கு நினைவுச் சின்னங்களையும் […]
மாத்தளை மனிதப் புதைகுழி : விசாரணை கோரி தெற்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நீதிமன்றத்தில் முறைப்பாடு

மாத்தளை மனிதப் புதைகுழி தொடர்பாக நீதவான் நீதிமன்றத்தில் விசாரணையொன்றை முன்னெடுக்குமாறு கோரி, தெற்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களினால் இன்றைய தினம் (23) மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டது.
நீதிமன்ற வெற்றிடங்கள் குறித்த விவாதத்தால் நாடாளுமன்றத்தில் பதற்றம்; சபை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு

நீதிமன்ற வெற்றிடங்கள் (Judicial Vacancies) குறித்து விவாதிப்பதற்கு எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்ததைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் இன்று (ஜூன் 23) ஏற்பட்ட கடுமையான சலசலப்பு மற்றும் பதற்ற நிலை காரணமாகச் சபை நடுப்பகுதியில் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாகச் சபையை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஜெகத் விக்ரமரத்ன (Speaker Jagath Wickramaratne) அறிவித்தார். பின்னணி விபரம்: இன்று காலை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா, […]
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறியது தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்!

திருநெல்வேலி. திருநெல்வேலியில் நடைபெற்ற தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு, அக்கட்சியின் நிறுவனத் தலைவர் பெ. ஜான் பாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்து முக்கியமான அரசியல் முடிவை அறிவித்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து (NDA) இன்று முதல் தனது கட்சி வெளியேறுவதாக அவர் தெரிவித்தார். வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் கட்சியின் தேவைகள் மற்றும் சேவைகளை முன்னிறுத்தித் தனித்துச் செயல்பட வேண்டியது அவசியம் என்றும், இதற்கான இறுதி முடிவை பொதுக்குழுவைக் கூட்டி முடிவு செய்வோம் என்றும் அவர் […]
தமிழ் வெற்றி கொண்டான்! எம்எல்ஏ குழந்தைக்குப் பெயர் சூட்டிய விஜய்!

சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்று வருகின்றன. இந்த மகிழ்ச்சியான தருணத்தில், திரு.வி.க. நகர் சட்டமன்ற உறுப்பினர் பல்லவி, தனது பிஞ்சுக் குழந்தையுடன் முதல்வரை நேரில் சந்தித்து தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். அப்போது, தனது குழந்தைக்குத் தங்கள் திருக்கரங்களால் பெயர் சூட்ட வேண்டும் என்று பல்லவி மிகுந்த ஆர்வத்துடன் வேண்டுகோள் விடுத்தார். குழந்தையை அன்புடன் கையில் ஏந்திய முதல்வர் விஜய், அந்தப் பிஞ்சு முகத்தை உச்சி முகர்ந்து, […]