Surrey நகரில் பாரிய போதைப்பொருள் வேட்டை: வெளிநாட்டவர்கள் இருவர் நாடுகடத்தப்பட்டனர்; ஒருவருக்கு எதிராக குற்றச்சாட்டு

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) மாகாணத்தில் உள்ள (Surrey) நகரில், சுமார் 900,000 டொலர் பெறுமதியான சட்டவிரோத போதைப்பொருட்களை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த விசாரணை நடவடிக்கையின் பலனாக வெளிநாட்டவர் ஒருவருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதுடன், மேலும் இரு வெளிநாட்டவர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர். ‘புரொஜெக்ட் பாண்டம்’ (Project Phantom) எனப் பெயரிடப்பட்ட இந்த நான்கு மாத கால விசாரணை, கடந்த பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டது. சுரே நகரில் உள்ள ஒரு குடியிருப்புடன் தொடர்புடைய குழுவொன்று ‘ஃபெண்டானில்’ (Fentanyl) போதைப்பொருள் […]
வோன் (Vaughan) இரவு விடுதி இரட்டைக்கொலை: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

கனடாவின் வோன் நகரில் உள்ள இரவு விடுதி ஒன்றிற்குள் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குற்றவாளியாகக் காணப்பட்ட நபருக்கு, 25 ஆண்டுகளுக்குப் பிணையில் வரமுடியாத நிபந்தனையுடன் கூடிய ஆயுள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 23 அன்று, ஹைவே 7 மற்றும் கீல் வீதிக்கு (Highway 7 and Keele Street) அருகில் உள்ள ‘ஏடிஎல் லவுஞ்ச்’ (ATL Lounge) இரவு விடுதிக்குள் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து இந்தத் […]
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத்திட்ட வரைபைத் தயாரிப்பதற்கான கலந்துரையாடல்

ஈழத்தமிழர் அரசியல் அமைப்பு நிர்ணய பொதுச்சபையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத் திட்டவரைபைத் தயாரிப்பதற்கான கலந்துரையாடல் நல்லூர் இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் நடைபெற்றது. ஸ்ரீலங்காவில் 77ஆண்டுகளாக நீடித்துவரும் இனப் பிரச்சினைக்குத் தீர்வாக அரசாங்கத்தினால் ஏற்கனவே நடைமுறையில் உள்ள ‘ஏக்ய ராஜ்ய’ (ஒற்றை ஆட்சி அரசு) அரசியல் யாப்பே மீளவும் கொண்டுவரப்படவுள்ளது. ஒற்றை ஆட்சி தொடர்பான தீர்வு யோசனைகளை நிராகரித்து இனப் பிரச்சினைக்கான தீர்வாகக் கூட்டாட்சித் தீர்வுத்திட்ட வரைபு ஒன்றினைத் தயாரிக்கும் நோக்கில் ஈழத்தமிழர் அரசியல் அமைப்பு நிர்ணய பொதுச்சபை […]
மக்கள் பணத்தைத் தொடமாட்டோம்; தொட்டவர்களையும் விடமாட்டோம்! – முதல்வர் விஜய் அதிரடி

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் நிறைவு நாளான இன்று, உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து முதலமைச்சர் ஜோசப் விஜய் உரையாற்றினார். தனது உரையில், தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சி அமைந்ததற்குத் தமிழக மக்களுக்குத் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார். தான் ஷூட்டிங்கிலிருந்து வந்து முதலமைச்சரானதாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் ‘இமேஜ்’ விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், அது வெறும் ரீல் என்றும், மக்களின் இதயங்களில் இடம் பிடித்ததாலேயே தான் ரியலாக முதலமைச்சரானேன் என்றும் கூறினார். கரூர் […]
தூய்மைப்பணியைத் தனியார்மயமாக்கும் முயற்சியை உடனே கைவிடுக! – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

சென்னை சென்னையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில், தமிழ்நாடு அரசு 12 மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தனியார்மயத்தை நோக்கிய மிகத் தீவிரமான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. ஏற்கனவே பல்வேறு மாநகராட்சி வார்டுகள் மற்றும் மண்டலங்களில் தனியார்மயம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது ஒட்டுமொத்தமாக 12 மாநகராட்சிகளிலும் இந்த முறையை விரிவுபடுத்த அரசு முனைப்பு காட்டுவது தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பெரும் கேள்விக்குறியாக்கும் என்று கட்சி எச்சரித்துள்ளது. […]
திக்கம் வடிசாலையை மீள இயக்குவது தொடர்பான கலந்துரையாடல் பாராளுமன்ற வளாகத்தில்

2016 ஆம் ஆண்டு முதல் இயங்காமல் உள்ள திக்கம் வடிசாலை தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், அதனைச் சூழ்ந்துள்ள சட்ட மற்றும் நிர்வாகச் சிக்கல்களைத் தீர்த்து, மீண்டும் செயற்பாட்டிற்கு கொண்டுவருவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் கடற்றொழில் அமைச்சர், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர், பெருந்தோட்டத்துறை பிரதியமைச்சர் ஆகியோர் கலந்து கொண்டதுடன், திக்கம் கூட்டுறவு சங்கத்தின் பிரதிநிதிகளும் வடிசாலையை இயக்கும் உரிமையைப் பெற்றுள்ள தனியார் நிறுவனத்தின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். திக்கம் வடிசாலையை […]
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்; சோமரத்ன ராஜபக்சவை பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்தி உண்மைகளை வெளிப்படுத்துக – ரவிகரன் எம்.பி வலியுறுத்து.

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பாக இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவை பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்தி, உண்மைகளை வெளிப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றில் 23.05.2026இன்று உரையாற்றும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார். இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப்புதைகுழியானது தற்போது நாட்டிலே பாரிய மனிதப்புதைகுழியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணி மனிதப்புதைகுழியிலிருந்து இதுவரையில் 412 எலும்புக்கூடுகள் அடையாளங்காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் […]
யாழில் இளைஞர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் சில்லாலை பகுதியில் நாகேஸ்வரன் நவீன்ராஜ் என்ற இளைஞர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, அவர் பக்கத்து வீட்டில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பிய பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. குடும்பத்தினரின் தகவலின்படி, இரவு நேரத்தில் ஓய்வெடுக்கச் சென்ற இளைஞர் பின்னர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தின் சரியான சூழ்நிலைகள் மற்றும் உயிரிழப்புக்கான காரணம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை அதிகாரப்பூர்வமாக காரணம் […]
புதிய பிரதேச செயலாளர் நியமனம்

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக திரு.F.C.சத்தியசோதி அவர்கள் நியமிக்கப்பட்டு இன்றைய தினம் 2026.06.23 அன்று உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றார். இவர் இலங்கை நிர்வாக சேவையின் தரம் I உத்தியோகத்தராவதுடன் தற்பொழுது சாவகச்சேரி பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக கடமையாற்றுவதுடன் எமது பிரதேச செயலகத்திற்கு பதில் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வடக்கு மாகாண விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்கு விசேட உட்கட்டமைப்பு வசதிகள்: ஆளுநர் நா. வேதநாயகன் உறுதி!

வடக்கு மாகாணத்தில் விளையாட்டுத் துறையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கும், வீரர்களின் திறமைகளை சர்வதேச அளவுக்கு உயர்த்துவதற்கும் தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்து தரத் தயாராக இருப்பதாக வடக்கு மாகாண கௌரவ நா. வேதநாயகன் அவர்கள் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்டத் தடகளப் போட்டிகளின் உத்தியோகபூர்வ ஆரம்ப விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார். மாணவர்களின் ஆளுமை வளர்ச்சி குறித்து […]