வடக்கு மாகாண விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்கு விசேட உட்கட்டமைப்பு வசதிகள்: ஆளுநர் நா. வேதநாயகன் உறுதி!

வடக்கு மாகாணத்தில் விளையாட்டுத் துறையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கும், வீரர்களின் திறமைகளை சர்வதேச அளவுக்கு உயர்த்துவதற்கும் தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்து தரத் தயாராக இருப்பதாக வடக்கு மாகாண  கௌரவ நா. வேதநாயகன் அவர்கள் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்டத் தடகளப் போட்டிகளின் உத்தியோகபூர்வ ஆரம்ப விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.
மாணவர்களின் ஆளுமை வளர்ச்சி குறித்து ஆளுநர் தொடர்ந்து உரையாற்றுகையில், “கல்வியால் மாத்திரம் ஒரு மாணவன் முழுமையடைந்து விட முடியாது என்பதை நான் பல இடங்களிலும் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகின்றேன். கல்விக்குச் சமாந்தரமாக இணைப்பாடவிதானச் செயற்பாடுகளான கலை மற்றும் விளையாட்டுத் துறைகளிலும் மாணவர்கள் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அதன் மூலமே முழுமையான ஆளுமை வளர்ச்சியைப் பெற முடியும்,” எனக் குறிப்பிட்டார். மேலும், தற்காலத்தில் மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்களால் பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், கல்வியில் சிறந்த அடைவுகளைப் பெறுவதற்கு ஆரோக்கியமான உடலும் உளமும் அவசியமாகும் என்றும், அதனை இவ்வாறான விளையாட்டுச் செயற்பாடுகளின் ஊடாகவே பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அறிவுறுத்தினார்.
மாகாண மட்டப் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தும் அனைத்து மாணவர்களுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த ஆளுநர், அவர்கள் தேசிய மட்டப் போட்டிகளிலும் வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, வெற்றிவாகை சூடி மாகாணத்துக்குப் பெருமை தேடித்தர வேண்டும் என ஊக்குவித்தார். வடக்கு மாகாணத்தில் விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவது தொடர்பில் தான் தனிப்பட்ட ரீதியில் விசேட கவனம் செலுத்தி வருவதாகவும், மாணவர்கள் விளையாட்டுத்துறையில் சாதனை படைப்பதற்குத் தேவையான அனைத்து வழிகளிலும் மாகாண சபை உதவக் காத்திருக்கின்றது என்றும் அவர் தனது உரையில் மேலும் உறுதியளித்தார். இந்நிகழ்வில் கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெருந்திரளான மாணவ வீராங்கனைகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
suresh11

சலே நடமாடுகிறார், அவராகவே ஆடை அணிகிறார்: அவருக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தகவல்

June 24, 2026

குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் (CID) காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) பணிப்பாளர் சுரேஷ் சலே, மோசமாக

MediaFile_20260624_064746_697

தெல்தெனிய பெண் கொலை : பிரதான சந்தேக நபர் யாழ்ப்பாணத்தில் கைது

June 24, 2026

நிறுத்தப்பட்டிருந்த வாகனமொன்றினுள் பெண் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட தெல்தெனிய கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது

myan

ஒன்லைன் நிதி மோசடி மையங்களுக்குள் 5,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் சிறை?

June 24, 2026

தாய்லாந்து எல்லைக்கு அருகிலுள்ள மியான்மார் பகுதிகளில் இயங்கி வரும் ஒன்லைன் நிதி மோசடி மையங்களுக்குள் இன்னும் 5,300க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக

Nada

யாழ்.பலாலி விமான நிலையத்தில் நடராஜர் சிலை பிரதிஷ்டை?

June 24, 2026

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கென அன்பளிப்பாக வழங்கப்பட்ட நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்ய யாழ். கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

729481106_1021088533701986_4482724275745954913_n

விட்பி கடையில் கள்ள நோட்டுகள் புழக்கம்: சந்தேக நபரைத் தேடும் காவல்துறை

June 24, 2026

கனடாவின் விட்பி (Whitby) நகரில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் கள்ள நோட்டுகளைப் பயன்படுத்திப் பொருட்களை வாங்கிய சந்தேக

730515905_1623541362526678_1589963721921684927_n

ஒஷாவா மருந்தகங்களில் போலி மருந்துச்சீட்டு மோசடி: மொன்றியலைச் சேர்ந்த இருவர் மீது குற்றம் சாட்டு

June 24, 2026

ஒஷாவா நகரில் உள்ள பல மருந்தகங்களில் (Pharmacies) போலி மருந்துச்சீட்டுகளைப் பயன்படுத்தி மருந்துகளைப் பெற முயன்றதாகக் கூறப்படும் மோசடி விவகாரம்

Rajitha

இதுவரை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது மரபணு மாதிரிகள் சேகரிக்கப்படவில்லை – சட்டத்தரணி ரனித்தா

June 24, 2026

மரபணு தொடர்பான விடயத்தில், இதுவரை காலமும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகமோ அல்லது ஏனைய அரச நிறுவனங்களோ காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்களின்

730451457_856458137519480_6962660640323909533_n

மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டு: ஹாலிஃபாக்ஸ் நபருக்கு மாகாணம் தழுவிய பிடியாணை

June 24, 2026

மாகாணம் தழுவிய தற்காலிகப் பிடியாணை (Provincewide warrant) பிறப்பிக்கப்பட்டுள்ள 22 வயதுடைய ஹாலிஃபாக்ஸ் (Halifax) நகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைக்

727788199_1687261052550087_6943194283308762826_n

பியர்சன் தங்கக் கொள்ளை விவகாரம்: துப்பாக்கிக் கடத்தல் வழக்கில் பிராம்ப்டன் நபருக்கு அமெரிக்காவில் 13 ஆண்டுகள் சிறை

June 24, 2026

டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தின் (Toronto Pearson Airport) பெரும் தங்கக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்ட

mull

யானை தாக்கி இளைஞன் உயிரிழப்பு; முல்லைத்தீவில் சம்பவம்

June 24, 2026

வயலுக்கு காவலுக்கு சென்ற இளைஞன் யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் ஒன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக

strike

அரசாங்கத்திற்கு எதிராக யாழில் வேலையற்ற பட்டத்தாரிகள் போராட்டம்?

June 24, 2026

வேலையற்ற பட்டதாரிகள் நாளை 25ஆம் திகதி வியாழக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் முன்பாக போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள்

Dengue

14 மாவட்டங்களுக்கு டெங்கு அபாய எச்சரிக்கை

June 24, 2026

இலங்கையில் வேகமாகப் பரவி வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாட்டின் 14 மாவட்டங்களைச் சேர்ந்த 538 கிராம உத்தியோகத்தர்