உலக கிண்ண கால்பந்தாட்டம்; கனடா ஆதிக்கம்

உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரின் ‘பி’ பிரிவு போட்டியில், கட்டார் அணியை 6-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கனடா அணி ஆதிக்கத்தை செலுத்தியது. ஆட்டத்தின் விறுவிறுப்பான இரண்டாம் பாதியில் கட்டார் அணியின் வீரர்களின் எண்ணிக்கை குறைந்ததைத் தமக்கு சாதமாக மாற்றி கனடா அணி இந்த வெற்றியை பதிவு செய்துள்ளது. போட்டியில் ஜொனாதன் டேவிட் ஹட்ரிக் கோல் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார். கத்தார் அணியின் தற்காப்புப் பிழைகள் மற்றும் பலவீனமான தடுத்தல் ஆட்டத்தை அவர் […]

ஐ.நா.வின் பங்களிப்புடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி மற்றும் நம்பிக்கை கட்டியமைக்கும் செயல்திட்டமான லன்டேன் (LANTERN – Land and Trust-Building Engagement) செயற்றிட்டம் வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் வரப்பிரசாதம்-ஆளுநர் நா.வேதநாயகன்

ஐ.நா.வின் பங்களிப்புடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி மற்றும் நம்பிக்கை கட்டியமைக்கும் செயல்திட்டமான லன்டேன் (LANTERN – Land and Trust-Building Engagement) செயற்றிட்டம் வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் வரப்பிரசாதம் எனவும் இந்தத் திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கோரிக்கை விடுத்தார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நீண்டகாலமாகக் காணப்படும் காணிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையிலான ‘லன்டேன்’ செயற்றிட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் இ சூம் […]

வட்டுவாகால் விகாரைக்குக் கீழும் மனித புதைகுழி — துரைராசா ரவிகரன்

வட்டுவாகல் விகாரைக்கு கீழும் மனிதப்புதைகுழிகள் இருக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். செம்மணி பற்றி: செம்மணி மனிதப் புதைகுழியில் பிஞ்சுக் குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் என தமிழ் மக்கள் குடும்பம் குடும்பமாகக் கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்டுள்ளனர். இது இலங்கையின் மிகப்பெரிய மனிதப் பேரவலத்தின் சாட்சியாக உருவெடுத்திருக்கும் நிலையில், இதற்கு சர்வதேச நாடுகளும் இலங்கை […]

புகையிரதத்தில் பாய்ந்து இராணுவ சிப்பாய் பலி

யாழ்ப்பாணம் நெளுக்குளம் பகுதியில் புகையிரத்தத்துடன் மோதி, இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றும் பகலகம பகுதியை சேர்ந்த 26 வயதுடைய நிரோஷன் லக்மால் என்பவரே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த இராணுவ சிப்பாய் விடுமுறையில் வீட்டுக்கு சென்ற நிலையில், விடுமுறை காலம் முடிவடைந்த பின்னரும் நீண்ட காலம் கடமைக்கு திரும்பாது, இன்றையதினம் மீண்டும் கடமைக்கு திரும்பிய வேளை பலாலி இராணுவ அதிகாரிகள் நீண்ட காலம் கடமைக்கு திரும்பாதமை குறித்து, கொழும்பில் உள்ள இராணுவ […]

செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்த பதாகையை (Banner) நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் தாமே கிழித்து, தனது காரில் எடுத்துச் சென்றுள்ளார்.

யாழ்ப்பாண நகரின் பிரதான வீதியில் தமக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்த பதாகையை (Banner) நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் தாமே கிழித்து, தனது காரில் எடுத்துச் சென்றுள்ளார். யாழ்ப்பாண நகரை அண்டிய பிரதான வீதியோரத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 19, 2026) சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனின் உருவம் பொறிக்கப்பட்ட சுமார் 10 அடி உயர பதாகை ஒன்று இனந்தெரியாத நபர்களால் வைக்கப்பட்டிருந்ததுடன், அதற்கு செருப்பு மாலையும் அணிவிக்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் […]

மாணவர்கள் அனைவரும் அதிமானிடக் கோட்பாட்டை நோக்கி நகர வேண்டும்: சிறீதரன் எம்.பி!

மனிதன் என்பது விலங்குக்கும் அதிமானிடனுக்கும் இடையே கட்டப்பட்ட ஒரு கயிறு. அத்தகைய பலவீனங்களாலும் எதிர்மறைச் சிந்தனைகளாலும் கட்டப்பட்ட அந்தக் கயிற்றை அறுத்து, நாம் அதிமானுடர்களாக நிமிர வேண்டும்” என மாணவர் சமுதாயத்தின் முன்னிலையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். ஜெர்மனியின் புகழ்பெற்ற தத்துவஞானி பிரீட்ரிக் நீட்ஷே (Friedrich Nietzsche) அவர்களின் புகழ்பெற்ற ‘அப்படியும் பேசினார் ஜரதுஸ்ட்ரா’ (Thus Spoke Zarathustra) என்னும் நூலில் “மனிதன் என்பவன் ஒரு நிலையான உயிரினம் […]

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் ஆரம்பம்!

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான  இராமலிங்கம் சந்திரசேகர்  தலைமையில், வடக்கு மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான கெளரவ நாகலிங்கம் வேதநாயகன் அவர்களின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (19.06.2026) காலை 09.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் வரவேற்புரையாற்றியதைத் தொடர்ந்து, […]

தெல்தெனியவில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்: மேலதிக விபரங்களை வெளியிட்டது காவல்துறை

தெல்தெனிய போதனா வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் காவல்துறை மேலதிக விபரங்களை வெளியிட்டுள்ளது. உயிரிழந்தவர் அம்பாறை பொது வைத்தியசாலையில் பணியாற்றிய 34 வயதுடைய உடற்பயிற்சி நிபுணர் (Physiotherapist) என அடையாளம் காணப்பட்டுள்ளார். கண்டியின் கலகெதர – கன்னொருவ பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியியலாளர் (Software engineer) ஒருவரான அவரது காதலனே, சடலத்தை வாகனத்தில் வைத்துவிட்டு அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. உயிரிழந்த பெண்ணுடன் சுமார் எட்டு […]

கற்பிட்டி பகுதியில் காவல்துறை – விமானப்படை இடையே ஏற்பட்ட மோதல் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டார் விமானப்படை தளபதி

கடந்த 2026 ஜூன் 17 அன்று கற்பிட்டி துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சித் தளத்தில் (Kalpitiya firing range) குண்டு செயலிழக்கச் செய்யும் பயிற்சியின் போது, விமானப்படை வீரர்களுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை குறித்து ஸ்ரீலங்கா விமானப்படை (SLAF) சிறப்பு விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளது. துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சித் தளத்தின் கட்டுப்பாட்டுப் பாதுகாப்பு வலயத்திற்குள் (Restricted security zone) முன் அனுமதி அல்லது அறிவிப்பு எதுவுமின்றி மூன்று நபர்கள் நுழைந்தபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. […]

செம்மணி மனித புதைகுழியை பார்வையிடவுள்ள நீதியமைச்சர் – உள்நாட்டுப் பொறிமுறையை முற்றாக நிராகரிக்கின்றோம்” சர்வதேச நீதியை வலியுறுத்தி இன்று செம்மணியில் மாபெரும் போராட்டம்

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் இலங்கையின் உள்நாட்டு நீதிப் பொறிமுறைகளை முற்றாக நிராகரித்து, சர்வதேச கண்காணிப்புடன் கூடிய நீதியை வலியுறுத்தி இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் செம்மணியில் மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் இந்தப் போராட்டத்துக்கான அவசர அழைப்பை விடுத்துள்ளது. இன்று பிற்பகல்  நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகப் பிரதானிகள் செம்மணி அகழ்வுப் பணிகளை நேரில் பார்வையிட வருகை […]