சுரேஷ் சலே விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – அமைச்சரவைப் பேச்சாளர்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு, அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லே முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான மருத்துவர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அவர் அனைத்துத் தகவல்களையும் வெளிப்படுத்துவதன் மூலம் இந்த ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அமைச்சர் ஜயதிஸ்ஸ […]
ஈஸ்டர் தாக்குதலின் உண்மைத் தன்மையை மூடிமறைக்காது உரிய விசாரணை நடத்துக!-கொழும்பில் போராட்டம்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதக் குண்டுத்தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மையான சூத்திரதாரிகளை உடனடியாகக் கண்டறிந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாக நீதியைப் பெற்றுத்தர வலியுறுத்தி, கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணியளவில் அமைதிவழிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சமூக நீதிக் கட்சி, பல்வேறு சிவில் அமைப்புகள் மற்றும் சுயாதீன சமூக செயற்பாட்டாளர்களின் கூட்டு ஏற்பாட்டில் இந்த விசேட கவனவீர்ப்புப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தாக்குதலின் உண்மைத் தன்மையை மூடிமறைக்காது, பாரபட்சமற்ற […]
ஈஸ்டர் தாக்குதலின் உண்மைத் தன்மையை மூடிமறைக்காது உரிய விசாரணை நடத்துக!-கொழும்பில் போராட்டம்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதக் குண்டுத்தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மையான சூத்திரதாரிகளை உடனடியாகக் கண்டறிந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாக நீதியைப் பெற்றுத்தர வலியுறுத்தி, கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணியளவில் அமைதிவழிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சமூக நீதிக் கட்சி, பல்வேறு சிவில் அமைப்புகள் மற்றும் சுயாதீன சமூக செயற்பாட்டாளர்களின் கூட்டு ஏற்பாட்டில் இந்த விசேட கவனவீர்ப்புப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தாக்குதலின் உண்மைத் தன்மையை மூடிமறைக்காது, பாரபட்சமற்ற […]
முள்ளியவளை கிராமிய சித்த மருத்துவமனையின் குறைபாடுகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் நேரடி ஆய்வு

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ துரைராசா ரவிகரன் அவர்கள் இன்று (16.06.2026) முள்ளியவளை கிராமிய சித்த மருத்துவமனைக்கு நேரில் சென்று அங்குள்ள வளக்குறைபாடுகள் தொடர்பில் ஆய்வு மேற்கொண்டார். மக்கள் முன்வைத்த கோரிக்கைகள் மற்றும் முன்னதாக மேற்கொள்ளப்பட்ட தரவு சேகரிப்புகளின் தொடர்ச்சியாக மேற்கொண்ட இந்த விஜயத்தின் போது, மருத்துவமனையின் அமைவிடம், கட்டிட வசதிகள், ஆளணிப் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு குறைகள் நேரடியாக பார்வையிடப்பட்டதுடன் மருத்துவப் பொறுப்பதிகாரியுடன் விரிவான கலந்துரையாடலும் இடம்பெற்றது. இது தொடர்பில் மேலும் அறியவருகையில், முல்லைத்தீவு […]
யோஷித ராஜபக்ஷவின் மனு மீதான விசாரணை நிறைவு; ஜூலை 3ஆம் திகதி தீர்ப்பு

பணச் சுத்திகரிப்புத் தடுப்புச் சட்டத்தின் (Prevention of Money Laundering Act) கீழ் தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள “சதி” (Conspiracy) குற்றச்சாட்டிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு மீதான விசாரணைகளை மேன்முறையீட்டு நீதிமன்றம் (Court of Appeal) நிறைவு செய்துள்ளது. இந்த மனு மீதான தீர்ப்பு அல்லது கட்டளை எதிர்வரும் ஜூலை மாதம் 3ஆம் திகதி பிரகடனப்படுத்தப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. மனுதாரரான யோஷித […]
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நான் கைதாகக் கூடாது – முன்னாள் ஜனாதிபதி கோட்டா மனு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் (Easter Sunday terror attacks) குறித்த விசாரணைகளுக்கு அமைவாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தான் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் (Court of Appeal) மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். சட்டத்தரணி சனத் விஜேவர்தன ஊடாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், பொலிஸ் மா அதிபர் (IGP), குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் குற்றப்புலனாய்வுத் […]
சுரேஷ் சலேவின் உண்ணாவிரதம் கைவிட வேண்டும் – சட்ட நடவடிக்கைக்கு உயிருடன் இருப்பது அவசியம்: வாசுதேவ நாணயக்கார

தடுப்புக் காவலில் உள்ள சுரேஷ் சலேவுக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் அநீதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான வழிகள் திறந்தே காணப்படுகிறது. எனினும் அதற்கு அவர் முதலில் உயிருடன் இருக்க வேண்டியது அவசியமென்பதால் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திபபை ஏற்பாடு செய்து அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், […]
ஹட்டன் – கொழும்பு வீதியில் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து: சாரதி காயம்!

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் கெரொலினா தோட்டம் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி, சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி காயமடைந்துள்ளார். கட்டுநாயக்கவிலிருந்து தலவாக்கலை – லிந்துலை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றே, நேற்று திங்கட்கிழமை (15) மாலை 4:00 மணியளவில் இந்த விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓட்டுனருக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கம் காரணமாகவே முச்சக்கரவண்டி கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் […]
மேன்முறையீட்டு நீதிமன்றில் யோஷித ராஜபக்ஷ

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ, இன்றைய தினம் 16ஆம் திகதி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.Executive Branch பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், சதித்திட்டம் என்ற குற்றச்சாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என தீர்ப்பளிக்குமாறு கோரி யோஷித ராஜபக்ஷவினால் மறுஆய்வு மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இந்த மனு இன்றைய தினம் (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த நிலையிலேயே அவர் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். அமல் ரணராஜா […]
சாத்தான்குளம் வழக்கு! – மேல்முறையீட்டு மனுவிற்கு ஸ்ரீதர் தரப்பிற்கு நீதிமன்றம் அவகாசம்!
மதுரை: சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் படுகொலை வழக்கில், தண்டனைக்கு எதிராக மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்ய முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் தரப்பிற்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அவகாசம் வழங்கியுள்ளது. நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் ராமகிருஷ்ணன் அடங்கிய அமர்வு முன்பாக இன்று நடைபெற்ற விசாரணையில், இந்த வழக்கின் விசாரணையை வரும் ஜூன் 25-ம் தேதிக்குள் முடித்துவிட வேண்டும் என்று நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். இதற்கிடையில், ஆய்வாளர் ஸ்ரீதர் தனது மனுவைத் தாக்கல் […]