பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தமிழ் கலைஞர் கைது: பிராம்ப்டன் மேயர் பட்ரிக் பிரவுன் கடும் கண்டனம்!

இலங்கையின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ், 24 வயதான தமிழ்  கலைஞர் சங்கீத்சன் கணேஷ்குமார் (Hiphop Sangee) கைது செய்யப்பட்டமைக்குக் கனடாவின் பிராம்ப்டன் நகர மேயர் பட்ரிக் பிரவுன் (Patrick Brown) தனது பலத்த கண்டனத்தையும் கவலையையும் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ‘X’ (டுவிட்டர்) தளத்தில் பதிவிட்டுள்ள மேயர் பட்ரிக் பிரவுன், “இந்தக் கைது நடவடிக்கை பேச்சுரிமையை அப்பட்டமாக மீறும் செயலாகும். ஒரு கலைஞர் தனது அடையாளத்தை வெளிப்படுத்துவதற்காகவும், இசையைப் பகிர்ந்துகொள்வதற்காகவும் அவர் மீது […]

சுரேஷ் சலே வழக்கு விசாரணை: கோட்டை நீதவான் நீதிமன்றைச் சுற்றி பலத்த பாதுகாப்பு!

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நீதிமன்ற வளாகத்தினுள்ளும் அதன் அருகாமையிலும் பாதுகாப்புப் பணிகளை உறுதி செய்வதற்காக, பெருமளவிலான பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குவிக்கப்பட்டுள்ளதாக ‘அடா தெரண’ செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவ அறிக்கை கோரிக்கை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தொடர்பாக, சட்டமா […]

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: சுரேஷ் சல்லே சதியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன – அமைச்சர் ஆனந்த விஜேபால அதிரடி!

2019ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுடன், அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே நேரடியாகச் சதியில் ஈடுபட்டதை நிரூபிப்பதற்கான போதிய ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகப் பொதுப்பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (10) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், திட்டமிடப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் மற்றும் அது சார்ந்த வன்முறை தீவிரவாதச் செயல்பாடுகள் குறித்து சுரேஷ் சலேவுக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தது என்று குறிப்பிட்டார். முன்கூட்டியே உளவு பார்த்த சலே […]

கனடாவில் புற்றுநோய் விழிப்புணர்வு நடைப்பயணம்; நம்பிக்கைக்காக – வாழ்க்கைக்காக நடப்போம்! உயிர்களைக் காப்போம்!

ஒரு நோயை எதிர்த்து போராடுவது மருத்துவர்களின் கடமை மட்டும் அல்ல… அது ஒவ்வொரு மனிதனின் மனிதநேயப் பொறுப்பும் கூட. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் வலியை உணர்ந்து, அவர்களுக்கு நம்பிக்கையையும் துணிவையும் அளிக்கும் ஒரு மனிதநேய நடைபவனி – “புற்றுநோய் விழிப்புணர்வு நடைபவனி 2026” ஒவ்வொரு அடியும் ஒரு உயிருக்கு நம்பிக்கை… ஒவ்வொரு பங்கேற்பும் ஒரு குடும்பத்திற்கு துணை… ஒன்றாக நடந்தால் மாற்றத்தை உருவாக்கலாம். Behind Me Media, JMFOA Canada மற்றும் Behind Me Foundation இணைந்து நடத்தும் […]

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்: கைது செய்யப்படுவதைத் தடுக்க உத்தரவிடுமாறு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர நீதிமன்றில் மனு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், நியாயமான காரணங்கள் இன்றி தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (SDIG) வருண ஜயசுந்தர மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரீட் (Writ) மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். முக்கிய விபரங்கள்: மனுத் தாக்கல்: இந்த சட்ட நடவடிக்கை 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான தற்போதைய விசாரணைகளுடன் நேரடியாகத் தொடர்புடையதாகும். பிரதிவாதிகள்: இந்த மனுவில் பொலிஸ் […]

தேர்தல் முறைமையில் திருத்தம் செய்யப்பட்ட பின்னரே மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படும்: பிரதமர் ஹரிணி

தற்போதுள்ள விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை நிராகரித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, புதிய தேர்தல் முறைமையொன்றை அறிமுகப்படுத்திய பின்னரே தேர்தல்கள் நடத்தப்படும் என இன்று (ஜூன் 10) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். மறுசீரமைப்பு குறித்த நிலைப்பாடு: நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர், தற்போதைய கட்டமைப்புக்கு இணங்க தேர்தலை நடத்த முடியாது எனத் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார். பிரதிநிதித்துவத்திற்கான முக்கியத்துவம்: மாகாண சபைகளில் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான போதிய […]

அர்ச்சுனாவுக்கும் “மூளையில்லை-சபாநாயகர் சாடல்

  நாடாளுமன்றத்தில் இன்று (ஜூன் 10) ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தின் போது, தனது நிதானத்தை இழந்த சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, சில எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு “மூளையில்லை” எனத் தெரிவித்துள்ளார். காரணம்: எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் கயந்த கருணாதிலக்க, சுஜீவ சேனசிங்க மற்றும் இராமநாதன் அர்ச்சுனா ஆகியோர் ஒழுங்குப் பிரச்சினைகளை (Points of order) எழுப்பிய போதே சபாநாயகர் கோபமடைந்தார். வாக்குவாதம்: நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவுக்கு மூளையில்லை எனக் கூறுவதன் மூலம் சபாநாயகர் நிலையியற் கட்டளைகளை (Standing […]

யோஷிதா ராஜபக்ஷவின் வழக்கு ஜூலை 16 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷிதா ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான (பெரியம்மா) டெய்ஸி ஃபோரஸ்ட் ஆகியோருக்கு எதிராக,  தாக்கல் செய்யப்பட்டுள்ள பணச்சலவை வழக்கை எதிர்வரும் ஜூலை 16 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நீதிமன்ற விவகாரங்களின் போது பிரதிவாதிகளான யோஷிதா ராஜபக்ஷ மற்றும் டெய்ஸி ஃபோரஸ்ட் ஆகியோர் […]

வடக்கில் நெதர்லாந்து தொல்லியல் நிபுணர்கள் ஆய்வு

தொல்லியல் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள நெதர்லாந்து நாட்டின் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் குழு, வடக்கு பகுதிகளில் விரிவான ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த நிபுணர் குழு யாழ்ப்பாணத்தில் 15 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு தொல்லியல் மற்றும் நிலவியல் சார்ந்த ஆய்வுகளை முன்னெடுத்து வருகிறது. j இந்த ஆய்வுகளின் போது, நிலத்தின் தன்மை, நிலத்தடியில் காணப்படும் தொன்மைச் சுவடுகள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைப்புகள் தொடர்பான தரவுகள் நவீன தொழில்நுட்ப சாதனங்களின் உதவியுடன் […]

மாற்றுத்திறனாளிகளின் முயற்சியிலும் வளர்ச்சியிலும் துணை நிற்போம் – அரசாங்க அதிபர்!

யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து நடாத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி நிகழ்வு  யாழ்ப்பாணக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இதன் பரிசளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு அரசாங்க அதிபர்  மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தின் இருக்கின்ற 500 ற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டிருப்பது மகிழ்ச்சிகரமாகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாக காணப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும், இன்றைய தினம் காலையிலிருந்து […]