நாடாளுமன்றத்தில் இன்று (ஜூன் 10) ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தின் போது, தனது நிதானத்தை இழந்த சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, சில எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு “மூளையில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
-
காரணம்: எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் கயந்த கருணாதிலக்க, சுஜீவ சேனசிங்க மற்றும் இராமநாதன் அர்ச்சுனா ஆகியோர் ஒழுங்குப் பிரச்சினைகளை (Points of order) எழுப்பிய போதே சபாநாயகர் கோபமடைந்தார்.
-
வாக்குவாதம்: நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவுக்கு மூளையில்லை எனக் கூறுவதன் மூலம் சபாநாயகர் நிலையியற் கட்டளைகளை (Standing Orders) மீறியுள்ளார் என்றும், எனவே அந்த கூற்றை அவர் வாபஸ் பெற வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா சபாநாயகரிடம் கோரினார்.
-
சபாநாயகரின் பதில்: எனினும், தனது கருத்தை வாபஸ் பெற மறுத்த சபாநாயகர் விக்ரமரத்ன, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கும் “மூளையில்லை” எனத் தெரிவித்துள்ளார்.