முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷிதா ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான (பெரியம்மா) டெய்ஸி ஃபோரஸ்ட் ஆகியோருக்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்டுள்ள பணச்சலவை வழக்கை எதிர்வரும் ஜூலை 16 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நீதிமன்ற விவகாரங்களின் போது பிரதிவாதிகளான யோஷிதா ராஜபக்ஷ மற்றும் டெய்ஸி ஃபோரஸ்ட் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.