“தவறான சிகிச்சையால் மாணவி மரணமா?” – தவெக அரசுக்கு சீமான் காட்டமான கண்டனம்!

சென்னை: “திருச்சி அரசு மருத்துவமனையின் தவறான மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவர்களின் அலட்சிய செயல்பாட்டால் செவிலியர் மாணவி உயிரிழந்திருப்பது பெருத்த அதிர்ச்சியளிக்கிறது; இதற்கு காரணமானவர்கள் மீது தவெக அரசு உடனடியாக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (மே 24) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறியிருப்பதாவது: “புதுக்கோட்டை மாவட்டம் தொண்டைமாநல்லூரைச் சேர்ந்த விவசாயத் தம்பதியரான […]
மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை

இவ்வருடம் (2026) மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தலுக்காக வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி, அனர்த்த நிவாரணப் பணிகளுக்காகச் செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் மக்கள் தொடர்பு அலுவலகத்தைத் திறந்து வைத்ததன் பின்னர், “மாகாண சபைத் தேர்தலை இவ்வருடம் நடத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இருக்கிறதா?” என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குத் பதிலளிக்கும் போதே […]
திசைமாறி வந்த தமிழக மீனவர் மீட்பு!

தற்போது நிலவும் பலத்த காற்று காரணமாக திசைமாறி வந்து, நெடுந்தீவுக் கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர் ஒருவர் நெடுந்தீவு கடற்றொழிலாளர்களால் மீட்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். தமிழகத்தின் இராமேஸ்வரம், இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே இவ்வாறு இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்டு நெடுந்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை 4.30 மணியளவில் குறித்த மீனவர் நெடுந்தீவு மீனவர்களால் மீட்கப்பட்டு தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகளின் பின்னர் இன்று அவரை ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் நெடுந்தீவு பொலிஸார் […]
பெரிய வெங்காய விதை உற்பத்தி கிராமத்தை ஆரம்பிக்க நடவடிக்கை

பெரிய வெங்காய விதை உற்பத்தி கிராமமொன்றை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, அனுராதபுரம் – நாச்சதூவ குடியேற்றப் பகுதியை இவ்வாறு பெரிய வெங்காய விதை உற்பத்தி கிராமமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அத்திணைக்களத்தின் பணிப்பாளர் பி. சிசிர குமார தெரிவித்துள்ளார். நாட்டின் வருடாந்த பெரிய வெங்காயத் தேவை 325,000 மெட்ரிக் தொன்களாகும். இருப்பினும், உள்நாட்டில் சுமார் 50,000 மெட்ரிக் தொன் பெரிய வெங்காயமே உற்பத்தி செய்யப்படுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வருடத்திற்குள் […]
உடனடி விலை திருத்தம் இல்லாவிடின் மருந்து தட்டுப்பாடு ஏற்படும்; உள்நாட்டு மருந்து உற்பத்தியாளர்கள் எச்சரிக்கை!
உள்நாட்டு மருந்து உற்பத்திகளுக்கான விலைகளை அதிகரிப்பதற்கு உடனடியாக அனுமதி வழங்கப்படாவிடின், அரசாங்கத்திற்கும் தனியார் சந்தைக்கும் தேவையான மருந்துகளை உற்பத்தி செய்து விநியோகிக்க முடியாத நிலை ஏற்படும் என இலங்கை மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம் (SLPMA) எச்சரித்துள்ளது. தங்களின் உற்பத்தி மற்றும் விநியோகச் செயல்பாடுகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கு, மருந்துகளின் விலைகளில் ஆகக்குறைந்தது 20 சதவீத (20%) அதிகரிப்பையாவது அனுமதிக்குமாறு தொழில்துறை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் நலின் கன்னங்கர ‘சண்டே டைம்ஸ்’ (Sunday Times) நாளிதழுக்குத் […]
வெள்ளை மாளிகை துப்பாக்கிச் சூடு; சுட்டுக்கொல்லப்பட்ட நபர் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர் எனப் புதிய தகவல் அம்பலம்!

வெள்ளை மாளிகைக்கு (White House) வெளியே சனிக்கிழமை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு, பாதுகாப்புப் பிரிவினரின் பதில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சந்தேகநபர், 21 வயதுடைய நசீர் பெஸ்ட் (Nasire Best) என இவ் விசாரணைகளுடன் நெருங்கிய தொடர்புடைய அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். சந்தேகநபரான பெஸ்ட், கடந்த சுமார் 18 மாதங்களாக வொஷிங்டன் டி.சி (Washington, D.C.) பகுதியில் வசித்து வந்தவர் என அக் குறிப்பிட்ட அதிகாரி தெரிவித்துள்ளார். உயிரிழந்த சந்தேகநபருக்கு அமெரிக்க ரகசிய சேவைப் பிரிவினருடன் (U.S. […]
மட்டக்களப்பு நகரில் மனித பாவனைக்கு உதவாத உணவுகள் விற்றவருக்கு விளக்கமறியல்

மட்டக்களப்பு நகரில் மனித பாவனைக்கு உதவாத உணவுகளைத் தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ், உணவகம் ஒன்றின் மீது பொது சுகாதார பரிசோதகர்கள் தொடுத்த வழக்கில், உணவகத்தின் முகாமையாளரை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார். நகரின் தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு அருகில் உள்ள குறித்த உணவகத்தில் வெள்ளிக்கிழமை தயாரித்து வழங்கிய உணவுகள் மனித பாவனைக்கு உதவாதது என்றும் அந்த உணவுகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் பொது சுகாதார […]
திருகோணமலையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நடைபவனி

இளைஞர் தினத்தை முன்னிட்டு போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையாக விழிப்புணர்வு நடைபவனி நேற்று (23) திருகோணமலையில் நடைபெற்றது. இந்த நடைபவனியை திருகோணமலை மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றம் ஏற்பாடு செய்திருந்தது. ஊர்வலத்தில் பங்குபற்றியவர்கள் போதைத் தடுப்பு தொடர்பிலான விழிப்புணர்வு பதாகைகள் அடங்கிய வாசகங்களை ஏந்தியவாறு திருகோணமலை ஆளுநர் செயலகத்தில் இருந்து திருகோணமலை பஸ் நிலையம் வரை சென்றனர். இதில் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சண்முகம் குகதாசன், ரொசான் அக்மீமன உட்பட இளைஞர் […]
நீண்டகால அமைதியை ஏற்படுத்துவதற்காக ஈரானுடன் புதிய அமைதி ஒப்பந்தம் – டொனால்ட் ட்ரம்ப்
ஈரானுடன் நீண்டகால அமைதியை ஏற்படுத்துவதற்கான உடன்படிக்கையொன்று எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து வெளியிட்ட அவர், இந்த புதிய அமைதி உடன்படிக்கையின் கீழ் உலக வர்த்தகத்திற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறந்து விடப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், ஈரானிடம் அணு ஆயுதம் சேர்வதை இந்த ஒப்பந்தம் முற்றிலும் தடுக்கும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார். இது தொடர்பாக தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி, […]
வெள்ளை மாளிகைக்கு வெளியே இரகசிய சேவைப் பிரிவு அதிகாரிகள் மீது துப்பாக்கிப் பிரயோகம்–ஆயுததாரி சுட்டுக்கொலை

வெள்ளை மாளிகைக்கு வெளியே இரகசிய சேவைப் பிரிவு (Secret Service) அதிகாரிகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சந்தேகநபர், அதிகாரிகளின் பதில் துப்பாக்கிச் சூட்டில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அப்பிரிவு உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளது. இத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது அங்கிருந்த பொதுமகன் (Bystander) ஒருவரும் காயமடைந்துள்ளார். வெள்ளை மாளிகையின் வடக்கு புல்வெளிப் (North lawn) பகுதியில் தொடர்ச்சியாகப் பல துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் முழங்கிய போது, ஏபிசி நியூஸ் (ABC News) செய்தியாளர் செலினா வாங் பதுங்கித் தப்பிக்கும் […]