நேரத்திற்கு நேரம் ஜனாதிபதியின் பேச்சு மாறுவது போல டொலரும் மாறுகிறது!

“ஜனாதிபதியின் பேச்சு போன்று டொலரின் பெறுமதி நேரத்திற்கு நேரம் மாறிக்கொண்டிருக்கிறது. இன்று சந்தையில் டொலர் இல்லை; வங்கிகளுக்கிடையிலும் அதன் பெறுமதி முரண்பாடாக உள்ளது. டொலர் மதிப்பு உயர்வால் பால்மா உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இவ்வாறான பணவீக்கத்தால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். ஆனால், இதற்கெல்லாம் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கூறும் அரசாங்கம், செவ்வாய்க்கிரகத்தில் இருந்து பேசுகிறதா என்று கேட்கத் தோன்றுகிறது.” என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் […]

களுதாவளை கடற்கரையில் சிரமதானப் பணிகள்!

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் “கிளீன் ஸ்ரீ லாங்கா” வேலைத்திட்டத்தின் கீழ் கரையோரப் பகுதியைச் சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் செயற்படுத்தப்பட்டன. அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்துக்குட்பட்ட களுதாவளை கடற்கரையை சுத்தம் செய்யும் பணிகள் நேற்று சனிக்கிழமை (23) தீவிரமாக நடைபெற்றன. இலங்கை இராணுவத்தின் குருக்கள்மடம் முகாம் படையினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த சிரமதானப் பணிகளை மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் ஆரம்பித்துவைத்தார். மண்முனை தென் எருவில் பற்று […]

மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம்?

நாட்டில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக நிபுணத்துவ மருத்துவரும் அரசியல் செயற்பாட்டாளருமான சமால் சஞ்சீவ எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க டொலருக்கு நகிரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியினால் அரச மற்றும் தனியார் துறைகளில் மருந்துப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாட்டு நிலை ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். டொலரின் பெறுமதி அதிகரிப்பு காரணமாக மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கூடுதல் தொகையை செலவிட நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சில மருந்தகங்களில் ஏற்கனவே சில மருந்துப் பொருட்களுக்கு […]

ஜனாதிபதி அலுவலகத்தில் கத்தோலிக்க சபை முக்கிய கலந்துரையாடல்

நீண்ட 9 வருட இடைவெளிக்குப் பின்னர் கத்தோலிக்க சபை மற்றும் அரசாங்க பிரதிநிதிகளுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி அலுவலகத்தில் சுமுகமான முறையில் நடைபெற்றுள்ளது. விஞ்ஞான, தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் இணைத் தலைமையில் நேற்றுமுன்தினம் மாலை இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது. இச்சந்திப்பில் விவாதிக்கப்பட்ட முக்கிய விவரங்கள் வருமாறு, அரசால் பொறுப்பேற்கப்பட்ட கத்தோலிக்க பாடசாலைகள் தற்போது எதிர்கொண்டு வரும் நிர்வாக ரீதியான சிக்கல்கள் குறித்து […]

கனடா – மிசிசாகா கத்திக்குத்து மரணம்; சந்தேகநபருக்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் கைதுக் கட்டளை

கனடாவின் மிசிசாகா நகரில் நபரொருவர் கத்தியால் குத்திக் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர் துல்லியமாக அடையாளங்காணப்பட்டுள்ளதாகப் பீல் பிராந்திய பொலிஸார் (Peel Regional Police) தெரிவித்துள்ளனர். கடந்த மே 19 ஆம் திகதி நண்பகல் 12:15 மணியளவில் ‘ஹுரொன்டாரியோ வீதி’ (Hurontario Street) மற்றும் ‘ஆக்னஸ் வீதி’ (Agnes Street) சந்திப்பிற்கு அருகில் கத்திக்குத்துச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாகக் கிடைத்த அவசரத் தகவல்களையடுத்தே பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்திருந்தனர். புலனாய்வாளர்களின் விபரங்களின்படி, சம்பவத்திற்கு முன்னர் அருகிலுள்ள […]

காசா கப்பல் விவகாரத்தில் இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டிருந்த கனடியர்கள் நாடு திரும்புகின்றனர்!

காசா முனையின் (Gaza Strip) மீதான இஸ்ரேலிய கடற்படை முற்றுகையை உடைக்கும் முயற்சியில் சர்வதேசக் கப்பல் அணியுடன் இணைந்து பயணித்த போது, இஸ்ரேலியப் படைகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த பல கனடியப் பிரஜைகள் இந்த வார இறுதியில் மீண்டும் கனடாவிற்குத் திரும்புவார்கள் என இந் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இக் கப்பல் பயணத்தை ஒருங்கிணைத்த ‘குளோபல் சுமூத் புளோட்டிலா’ (Global Sumud Flotilla) அமைப்பின் விபரங்களின்படி, இச் சம்பவத்தில் சிக்கியிருந்த 12 கனடியர்களில் 9 பேர் துருக்கியிலிருந்து புறப்பட்டு, […]

போர் வீரர்கள் நினைவுத்தூபிக்கு அருகில் இடம்பெற்ற வாக்குவாதம்: பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளிக்கவுள்ளார் விமல் வீரவன்ச

பத்தரமுல்ல போர் வீரர்கள் நினைவுத்தூபிக்கு அருகில் அண்மையில் இடம்பெற்ற பதற்றமான சம்பவத்துடன் தொடர்புடைய வாக்குமூலத்தை வழங்குவதற்காக, தமக்கு பொலிஸாரால் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். பொலிஸாரின் இந்த அழைப்பின்படி, இன்று (24) தாம் தலங்கம பொலிஸ் நிலையத்துக்குச் சென்று வாக்குமூலம் அளிக்கவுள்ளதாகவும் விமல் வீரவன்ச உறுதிப்படுத்தினார். அவர் மேலும் […]

அரச இல்லங்கள் தொடர்பில் மீண்டும் சர்ச்சை

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர் சமீர கால்லகே ஆகியோர் பயன்படுத்தும் அரச இல்லங்கள் தொடர்பில் தகவல்களை வழங்க அரச அதிகாரிகள் மறுப்பதாக மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. நவ ஜனதா பெரமுண (புதிய மக்கள் முன்னணி) கொழும்பு மாவட்டத் தலைவரும் மாநகர சபை உறுப்பினருமான தினேஷ் அபேகோன் உள்ளிட்ட குழுவினர், சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர் சமீர கல்லகே ஆகியோர் பயன்படுத்தி வருவதாகக் கூறப்படும் உத்தியோகபூர்வ அரசாங்க குடியிருப்புகள் […]

இலங்கையின் மூலோபாய அமைவிடம் காரணமாக மத்தலவை பிராந்திய விமான போக்குவரத்து மத்திய நிலையமாக மாற்றுவதற்கு திட்டம்?

இலங்கையின் மூலோபாய அமைவிடம் காரணமாக மத்தல சர்வதேச விமான நிலையத்தை பிராந்திய விமானப் போக்குவரத்து மையமாக மாற்றுவதற்கான அதிகமான சாத்தியக்கூறுகள் உள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார். மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்துடன் தொடர்புடைய முதலீட்டு வாய்ப்புகளுக்காக கோரப்பட்டுள்ள விருப்பப் பிரகடனங்களுக்கான முன்மொழிவுக்கு முந்தைய சந்திப்பு மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலைய வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும்போதே பிரதி அமைச்சர் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு […]

நாடு முழுவதும் நிலவிய சீரற்ற காலநிலையால் 27,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

நாடு முழுவதும் நிலவிய சீரற்ற காலநிலையால் 27,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது. நேற்று சனிக்கிழமை (23) மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, 6,907 குடும்பங்களைச் சேர்ந்த 27,419 பேர் இந்த மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 மாவட்டங்களில் உள்ள 34 பிரதேச செயலகப் பிரிவுகள் இந்தப் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளன, மேலும் ஒரு உயிரிழப்பும் பதிவாகியுள்ளது. இதற்கிடையில், 02 வீடுகள் பேரிடரால் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும், மேலும் 807 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கை […]