எட்டோபிகோ (Etobicoke) பட்டாசு கடைக்குள் கார் மோதியது; ஓட்டுநர் தப்பியோட்டம் என பொலிஸார் தகவல்

ஹைவே 27 மற்றும் அல்பியன் (Highway 27 and Albion) பகுதியில் உள்ள எட்டோபிகோ பட்டாசு கடை ஒன்றில் ஏற்பட்ட ‘நான்காம் நிலை’ (four-alarm) பெரும் தீ விபத்துக்கான காரணத்தை தீயணைப்புப் படையினர் விசாரித்து வருகின்றனர். இரவு வேளையில் எட்டோபிகோ பட்டாசு கடைக்குள் கார் ஒன்று மோதியதை அடுத்து, டொராண்டோ தீயணைப்பு வீரர்கள் கொழுந்துவிட்டு எரிந்த தீயுடனும், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களுடனும் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். ஹைவே 427 மற்றும் அல்பியன் வீதிக்கு (Albion Road) […]

“அம்மா உணவகங்களை உடனே சீரமைங்க!” – தரமான உணவு வழங்க முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு!

சென்னை: தமிழ்நாட்டில் ஏழை, எளிய மக்களின் பசியைப் போக்கி வரும் ‘அம்மா உணவகங்களின்’ உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, பொதுமக்களுக்குச் சுவையான மற்றும் தரமான உணவுகளைத் தங்கு தடையின்றி வழங்க முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்போது தமிழ்நாட்டில் பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் 383 அம்மா உணவகங்களும், பிற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் மூலமாக 237 அம்மா உணவகங்களும் என மொத்தம் 620 உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த சில காலங்களாக இந்த […]

“திமுக ஆதரவுடன் ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை!” – தவெக-வை ‘பொய்க்கால் குதிரை அரசு’ என எடப்பாடி பழனிசாமி சாடல்!

சென்னை: “திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்கத் திட்டமிட்டதாகப் பரப்பப்பட்டவை முற்றிலும் பொய் செய்திகள்; தற்போது ஐந்து கட்சிகளின் கால்களில் விழுந்து தவெக அமைத்துள்ள இந்த பொய்க்கால் குதிரை ஆட்சியின் நடனம் சில காலம்தான்” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு எழுதியுள்ள அதிரடி அறிக்கையில் தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் திருப்பங்கள் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேர்தலில் வெற்றியும், தோல்வியும் சகஜம். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இதுபோன்ற தேர்தல் பின்னடைவுகளைச் சந்தித்து […]

முன்னாள் அமைச்சர் விமல் மற்றும் பொலிஸாருக்கு இடையில் கடும் மோதல்..

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் பொலிஸாருக்கு இடையில் மோதல் நிலை வெடித்துள்ளது. பத்தரமுல்லையில் உள்ள போர் வீரர்கள் நினைவுத் தூபிக்கருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான குழுவினருக்கும், பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் நிலை காரணமாக, அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியுள்ளது. போர் வீரர்களை நினைவுகூரும் பொருட்டு மலர்க் கொத்துகளுடன், சென்ற விமல் வீரவன்ச மற்றும் அவருடைய குழுவினருக்கு நினைவிடத்திற்குள் செல்ல பொலிஸார் அனுமதி மறுத்துள்ளனர். இதனால் கடும் கோபமடைந்த […]

வெள்ளவத்தையில் சிங்கள மக்களும் இணைந்து கொண்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; குழப்ப முயன்றவர்கள் பொலிஸாரால் தடுப்பு!

கொழும்பு, வெள்ளவத்தை கடற்கரைப் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட சிங்கள மற்றும் தமிழ் மக்கள் கலந்துகொண்டனர்.கடற்கரை வீதியில் (Marine Drive) பெருமளவிலான பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த நிலையிலும், சிங்கள அமைப்புகளைச் சேர்ந்த சிலர் அங்கு குழப்பம் விளைவிக்க முயன்றனர். அவர்கள் கடற்கரையில் கூடி, நிகழ்வில் பங்கேற்ற மக்களை நோக்கித் தகாத வார்த்தைகளால் வசைபாடினர். “நீங்கள் புலிகள், உங்களைக் கொலை செய்வேன்” என்று அவர்களில் […]

வெள்ளவத்தை கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையில் உயிர்நீத்த தமிழ் மக்களுக்கான நினைவேந்தல் நிகழ்வொன்றை கொழும்பில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நினைவேந்தல் இன்று திங்கட்கிழமை (மே 18) கொழும்பு வெள்ளவத்தை கடற்கரையில், (அலெக்ஸாண்ட்ரா வீதிக்கு எதிராக) தற்போது (மாலை 5 மணிக்கு) நடைபெறவுள்ளது. 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டதை நினைவுகூரும் விதமாக நிகழவுள்ள இந்த நினைவேந்தலில் பல்வேறு தரப்பினர் கலந்துகொள்ளவுள்ளனர்.

திருகோணமலை சிவன் கோயிலடியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

இலங்கை தமிழ் அரசு கட்சியினர் ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று (18) திருகோணமலை சிவன் கோயிலடி முன்றலில் நடைபெற்றது. இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன், திருகோணமலை மாநகர சபை மேயர் க.செல்வராசா (சுப்ரா) உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு உண்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிரப்பட்டது.

பசுமை இயக்கத்தால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம்

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தால் அதன் தலைமைச் செயலகம் முன்பாக 17ஆவது மே 18ஐ நினைவிற் கொள்ளும் முகமாக இன்று காலை (18.05.2026) முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி விநியோகிக்கப்பட்டது. தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் இணைப்பாளர்களில் ஒருவரான சி.தேவகுமார் நினைவுச்சுடர் ஏற்றி ஆரம்பித்து வைத்த இந் நிகழ்ச்சியில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பல நூற்றுக்கணக்கானவர்கள் உணர்வுடன் கஞ்சியை வாங்கி அருந்திச் சென்றார்கள். பிள்ளைகளுடன் வந்த பெற்றோர்கள் பிள்ளைகளுக்குக் கஞ்சியை அருந்தக் கொடுத்தது மாத்திரமல்லாது, இந்தக் கஞ்சி […]

‘தீர்மானங்கள் மட்டும் போதாது’ – முள்ளிவாய்க்காலில் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின்ஆசியப் பணிப்பாளர்

 தமிழ் தாயகத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்துகொண்ட ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் (Human Rights Watch) அமைப்பின் ஆசியப் பணிப்பாளர் எலைன் பியர்சன் (Elaine Pearson), பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை நோக்கிய புதுப்பிக்கப்பட்ட சர்வதேச முயற்சிகளுக்கு அழைப்பு விடுத்தார். இனப்படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தலின் போது முள்ளிவாய்க்காலில் இருந்து ‘தமிழ் கார்டியன்’ (Tamil Guardian) ஊடகத்திற்கு கருத்து தெரிவித்த பியர்சன், சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தமிழ் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தப்பிப்பிழைத்தவர்கள் பக்கம் நிற்பது […]

தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபியில்…

17ஆவது தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளான இன்று முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபியில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் ஒன்று கூடி தங்கள் அன்புக்குரியவர்களை நினைவுகூர்ந்தனர். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசியல் தலைவர்கள், மாணவர்கள், மதகுருக்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு போரின் இறுதிக்கட்டத்தில் உயிரிழந்த மக்களுக்கு சுடர் ஏற்றி,மலரஞ்சலி, மற்றும் அகவணக்கம் செலுத்தினர். உறவுகளை இழந்த குடும்பங்களின் உணர்வுபூர்வமான பங்கேற்பால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றம் துயரமிகு சூழல் நிலவியதுடன், நீதியும் கூட்டு நினைவுகூரலும் வலியுறுத்தப்பட்டன.